நிரந்தரமான பண வரவு பெறவும், வீண் விரயத்தை தடுக்கவும் இந்த சிறிய மாற்றத்தை உங்கள் சாவிக்கொத்தில் செய்து பாருங்கள்.

mahalakshmi keychain locker
- Advertisement -

நிலையற்ற இந்த உலகில் நிலையாக இருப்பது பணம் மட்டுமே. ஏதாவது ஒரு வகையில் அழிவில்லாத ரூபத்தில் பணம் இந்த உலகத்தை ஆட்டிப்படைக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை நாம் எப்பொழுதும் நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் அனைவரும் ஆசைப்படுகிறோம். ஆசையை நிறைவேற்றும் வகையில் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு பணத்தை சம்பாதித்தாலும், ஏதாவது ஒரு ரூபத்தில் பணம் வீட்டில் தங்காமல் விரயம் ஆகி கொண்டே இருக்கிறது என்றால் நாம் சில விஷயங்களில் கவனம் செலுத்தினாலே அந்த நிலை மாறும். அவ்வாறு நாம் உபயோகிக்கும் சாவிக்கொத்தில் என்ன மாற்றத்தை மேற்கொண்டால் நம் வீட்டில் வீண்விரயம் ஏற்படாமல் பணம் நிரந்தரமாக இருக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட மகாலட்சுமி தாயார் நம் வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்வதற்காக நாம் பல வழிமுறைகளை இன்றளவும் மேற்கொண்டு தான் வருகிறோம். இதற்காக நாம் பெரிய பரிகாரங்களை செய்வதை தவிர்த்து விட்டு, அன்றாடம் நம்முடைய வாழ்வில் இந்த சில விஷயங்களை மாற்றினாலே அவளின் அன்பும், அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறலாம்.

- Advertisement -

மகாலட்சுமி தாயார் ஒரு வீட்டில் நிலையாக வாசம் செய்யும் இடமாக கருதப்படுவது நிலை வாசலும், சமையல் அறையும் தான். நிலை வாசலையும் சமையல் அறையையும் எந்த அளவுக்கு நாம் தூய்மையாக வைத்திருக்கிறோமோ அந்த அளவுக்கு மகாலட்சுமி மனம் மகிழ்வாள் என்று கூறப்படுகிறது. மகாலட்சுமிக்குரிய தினமாக கருதப்படும் வெள்ளிக்கிழமை அன்று நாம் சுக்கிர ஹோரையில் நிலை வாசலை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களை வைப்பது மூலம் மகாலட்சுமி தாயாரை நம் வீட்டிற்குள் வரவேற்போம். மேலும் சுக்கிர ஹோரையில் சமையலறையை சுத்தமாக வைத்துக் கொண்டு அடுப்பை சுத்தம் செய்து கோலம் போட்டு அதற்கும் மஞ்சள் குங்குமம் இட்டு வணங்குவதன் மூலம் மகாலட்சுமி தாயார் நம்முடைய இல்லத்தில் நிரந்தரமாக வாசம் புரிவாள்.

முன்பெல்லாம் வசதி படைத்தவர்கள் தங்களின் பணப்பெட்டி சாவியை சாவிக்கொத்தில் மாட்டி வைப்பதை பார்த்திருப்போம். அதுவும் வெள்ளியில் சாவிக்கொத்து தயார் செய்து அதில் சாவியை மாட்டி வைத்திருப்பார்கள். இன்றளவும் பெண்களுக்கு திருமண நேரங்களில் சீர்வரிசை செய்யும் பொழுது வெள்ளியில் சாவிக்கொத்து கொடுக்கும் வழக்கம் நிலவி வருகிறது.

- Advertisement -

இதற்கு காரணம் மகாலட்சுமி தாயாருக்கு மிகவும் பிடித்த உலோகம் வெள்ளி என்பது தான். பணத்தையும், நகையையும் பாதுகாக்கும் பெட்டகத்தின் சாவியை நாம் வெள்ளி சாவிக்கொத்தில் அணிவதன் மூலம் அந்த பெட்டகத்தில் பணமும் நகையும் நிரந்தரமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும் அந்த சாவிக்கொத்தை நாம் மீனின் வடிவமாக வைத்திருந்தாலோ அல்லது மீன் இருப்பது போல் டாலரை வாங்கி மாட்டி வைப்பதன் மூலம் பீரோவில் இருக்கும் பணம் வீண் விரயம் ஆவது தடுக்கப்படுகிறது.

இந்த மீன் சுக்கிரனின் குறியீடாக கருதப்படுவதால் நமக்கு சுக்கிரனின் பாதிப்புகள் ஏதேனும் இருந்தாலும் இந்த மீனை நாம் பார்ப்பதன் மூலம் அவரின் ஆதிக்கம் நமக்கு அதிகரித்து நம் வாழ்வில் பண வரவு அதிகரிக்கும். மேலும் வீண் விரயதையும் தடுக்கும் ஆற்றல் இந்த மீன் குறியீட்டிற்கு உள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வாழ்க்கையில் இப்போது நீங்கள் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், இனி வரும் காலகட்டத்தில் உங்கள் பண கஷ்டம் தீரும். தினமும் இந்த ஒரு மந்திரத்தை சொன்னால் போதும்.

இந்த சின்ன விஷயங்களில் நாம் கவனம் செலுத்தி அதை மாற்றுவதால் நம்முடைய பண பிரச்சினைகள் அனைத்தும் நிரந்தரமாக பூர்த்தி அடைந்து, பணவரவு நிலையாக நிலைத்து நிற்கும்.

- Advertisement -