ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி புதன்கிழமை அன்று அட்சய திருதியை வருகிறது. அன்றைய நாளில் பலரும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்பதற்காக பல விதமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். புதிதாக பொருட்கள் வாங்குவது, தானம் செய்வது, நல்ல காரியங்களுக்கு உதவுவது போன்ற பல விஷயங்களில் ஈடுபடுவார்கள். அப்படி அன்றைய நாளில் நாம் செய்யக்கூடிய காரியங்கள் ஒவ்வொன்றும் நம்முடைய வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றே கூறலாம். அதனால் தான் அன்றைய தினத்தில் நல்லதை மட்டுமே செய்ய வேண்டும், எந்தவித எதிர்மறையான செயல்களையும் செய்யக்கூடாது என்று கூட கூறியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட நாளில் நாம் எந்த முறையில் தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் பணவசியம் உண்டாகும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
செல்வ செழிப்புடன் எந்தவித குறையும் இல்லாமல் வாழ வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொருவரும் அட்சய திருதியை அன்று பலவிதமான வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அந்த வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் அவர்களுக்கு செல்வ செழிப்பில் எந்த வித குறையும் இருக்காது என்று கூட கூறலாம். அதிலும் குறிப்பிடத்தக்க வகையில் தங்க நகைகள் வாங்குவது, வெள்ளி நகை வாங்குவது, சமையலுக்கு தேவைப்படக்கூடிய மளிகை பொருட்களை வாங்குவது, அன்னதானம் செய்வது, புதிதாக வீடு, நிலம், சொத்து வாங்குவது போன்ற பல விஷயங்களில் ஈடுபடுவார்கள். இப்படி ஈடுபடுவதன் மூலம் அவர்களுக்கு அந்த வருடம் முழுவதுமே மிகவும் சிறப்பான வருடமாக அமையும்.
இதோடு மட்டுமல்லாமல் நாம் புதிதாக ஏதாவது ஒரு வழிபாட்டை செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தோம் என்றால் அதையும் நாம் அட்சய திருதியை நாளன்று செய்ய ஆரம்பிக்கும் பொழுது அந்த வழிபாடு சிறப்பான முறையில் நடைபெறும் என்றும் அந்த வழிபாட்டின் பலனை நம்மால் முழுமையாக பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்பு வாய்ந்த அட்சய திருதியை நாளன்று பண வசியத்தை ஏற்படுத்துவதற்காக ஒரு தீபத்தை நாம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்தை ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி காலையில் பிரம்ம முகூர்த்த நேரமான 4 மணியிலிருந்து 5:30 மணிக்குள் ஏற்றலாம் அல்லது மாலை 5 மணியிலிருந்து 6:40 மணிக்குள் ஏற்றலாம். 6:41 மணி வரை தான் திருதியை திதி இருக்கிறது என்பதால் அதற்குள் இந்த தீபத்தை ஏற்றி விட வேண்டும். இதற்கு ஒரு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தட்டிற்கு மேல் சுத்தம் செய்த மருதாணி இலைகளை பரப்பிக் கொள்ளுங்கள். அந்த மருதாணி இலைகளுக்கு மேல் நல்ல நிலையில் இருக்கக்கூடிய விதைகள் தெரியாத ஐந்து ஏலக்காயை போட வேண்டும். சிறிது பச்சை கற்பூரத்தை உதிர்த்து தூவி விட வேண்டும். அடுத்ததாக சிறிதளவு வெந்தயமும், சில சில்லரை காசுகளையும் அதற்கு மேல் பரப்பி அதற்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் சுத்தமான பசு நெய்யை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபத்திற்கு முன்பாக பால் பாயாசம் அல்லது டைமண்ட் கற்கண்டு இவை இரண்டில் ஏதாவது ஒன்றை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். இப்பொழுது பணத்தை வசியம் செய்வதற்கும் செல்வ வளம் உயர்வதற்கும் இந்த தீபத்தை மகாலட்சுமியாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும். பிறகு மகாலட்சுமி தாயாரின் மந்திரமான “ஓம் ஸ்ரீம் ஸ்ரீயே நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி மல்லிகை பூக்களால் அந்த தீபத்திற்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து விட வேண்டும்.
தீபத்தை குளிர வைத்த பிறகு மருதாணி இலைகளை மட்டும் தனியாக எடுத்து வைத்துக்கொண்டு மீதம் இருக்கக்கூடிய பச்சை கற்பூரம், ஏலக்காய், நாணயங்கள், வெந்தயம் இவை அனைத்தையும் பணத்தையும் நகையையும் நாம் எந்த இடத்தில் எல்லாம் வைத்திருக்கிறோமோ அந்த இடத்தில் ஒரு மூட்டையாக கட்டி வைத்து விட வேண்டும். அன்று இரவே மருதாணி இலையை அரைத்து நம்முடைய விரல்களில் வைத்துக் கொள்ள வேண்டும்.
இதையும் படிக்கலாமே:நடக்காததையும் நடத்திக் காட்டும் முருகனின் திருநாமம்
இந்த முறையில் நாம் அட்சய திருதியை நாளன்று தீபமேற்றி வழிபாடு செய்வதன் மூலம் பணவசியம் ஏற்பட்டு செல்வ நிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.