ஒரு வருடத்தின் கடைசி மாதமாக திகழக்கூடியது தான் பங்குனி மாதம். மங்களகரமான மாதமாகவும் பங்குனி மாதம் திகழ்கிறது. பலரும் சுப நிகழ்ச்சிகள் செய்வதற்கு இந்த பங்குனி மாதத்தை தான் தேர்வு செய்வார்கள். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பங்குனி மாதத்தின் முதல் நாள் மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பிறக்கிறது. அன்றைய தினத்தில் நாம் செய்யக்கூடிய ஒரு எளிமையான பரிகாரம் பண வரவை அதிகரிக்கும். அந்த பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மிகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பங்குனி முதல் நாள் பரிகாரம்
நம் வீட்டில் குறைந்தபட்சம் ஒருவராவது உழைக்க வேண்டிய சூழ்நிலை என்பது இருக்கும். அவர்கள் உழைத்தால்தான் அதன் மூலம் பணம் வரும். அந்த பணத்தை வைத்து நம்மால் வாழவும் முடியும். எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் ஒரு சிலரால் பணத்தை சம்பாதிக்கவே இயலாது.. அவர்களுடைய பொருளாதாரத்தில் எந்தவித முன்னேற்றமுமே இல்லாமல் இருக்கும். இப்படி எந்தவித பொருளாதார முன்னேற்றமும் இல்லாமல் இருக்கக்கூடியவர்கள் பங்குனி மாதத்தின் முதல் நாள் இந்த ஒரு எளிமையான பரிகாரத்தை செய்தால் போதும்.
இந்த பரிகாரத்தை மார்ச் மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை அன்று செய்ய வேண்டும். ராகு காலம், எமகண்ட நேரத்தை தவிர்த்து விட்டு மீதம் இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் அதாவது சூரியன் அஸ்தமனமான பிறகு இந்த பரிகாரத்தை செய்வது என்பது மிகவும் சிறப்பு. இந்த பரிகாரத்திற்கு பணத்தை வசியம் செய்யக்கூடிய சில பொருட்கள் வேண்டும். அந்த பொருட்கள் பணத்தை வசியம் செய்வதோடு நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றலையும் நீக்க வல்லதாக இருக்க வேண்டும்.
அப்படிப்பட்ட பொருட்களாக திகழ்ந்தவை தான் சுக்கு, மிளகு, கிராம்பு, ஜாதிக்காய், வசம்பு. இவை அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதை மூட்டையாக கட்டுவதற்கு மஞ்சள் நிற துணி வேண்டும். ஒருவேளை மஞ்சள் நிற துணி இல்லாத பட்சத்தில் வெள்ளை சிவப்பு என்று ஏதாவது ஒரு துணியை கூட பயன்படுத்தலாம். முடிந்த அளவிற்கு மஞ்சள் நிற துணியை பயன்படுத்திக் கொள்ளுங்கள். வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஒரு தாம்பாள தட்டை வைத்து அதற்கு மேல் நாம் வாங்கி வைத்திருக்கும் துணியை விரித்துக்கொள்ள வேண்டும். இந்த துணியில் ஒரு முட்டு உடையாத நல்ல கிராம்பு, ஒரு துண்டு வசம்பு,, ஒரு துண்டு சுக்கு, ஒரு ஜாதிக்காய், அரை ஸ்பூன் அளவிற்கு மிளகு அல்லது 10 எண்ணிக்கையில் மிளகு இவற்றை வைத்து பணவரவு அதிகரிக்க வேண்டும், பணவசியம் உண்டாக வேண்டும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
பிறகு அதை அப்படியே பூஜை அறையில் வைத்து விட்டு நீங்கள் உங்களுடைய வேலையை பார்க்கலாம். தீபத்தை குளிர வைப்போம் அல்லவா? அப்பொழுது இந்த பொருட்களை அந்த துணியில் மூட்டையாக கட்டி மகாலட்சுமி தாயாரை மனதார நினைத்துக் கொண்டு எந்த இடத்தில் பணத்தை வைத்து எடுப்போமோ அந்த இடத்தில் கொண்டு போய் வைத்து விட வேண்டும். பிறகு தீபத்தை குளிர வைத்து விடலாம்.
இந்த மூட்டைக்கு வாரந்தோறும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமையிலும் முருகப்பெருமானின் சிறப்பு மிகுந்த நாட்களாக திகழக்கூடிய கிருத்திகை மற்றும் சஷ்டி தினங்களிலும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் இதில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களின் சக்தியாலும் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி பணவரவு அதிகரிப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும்.
இதையும் படிக்கலாமே:முருகன் வீடு தேடி வர
பணத்தை வசியம் செய்வதற்கு பலவிதமான பரிகாரங்கள் இருக்கின்றன. அவற்றுள் மிகவும் எளிமையான இந்த ஒரு பரிகாரத்தை முழுமனதோடு பங்குனி முதல் நாள் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் பண வசியம் உண்டாகும், பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.