- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வசியத்தை அதிகரிக்கும் குபேர பௌர்ணமி

பண வசியத்தை அதிகரிக்கும் குபேர பௌர்ணமி

- Advertisement -

வியாழக்கிழமை அன்று பலரும் தங்களுடைய இல்லத்தில் மாலை நேரத்தில் குபேரரை நினைத்து வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் குபேரரின் அருள் பரிபூரணமாக கிடைக்கும். அதனால் செல்வ வளம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த வியாழக்கிழமையோடு பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவது என்பது கூடுதல் விசேஷம். இப்படி இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய தினத்தை தான் நாம் குபேர பௌர்ணமி என்று கூறுகிறோம். மாலை 5:00 மணியில் இருந்து இரவு 12 மணிக்குள் இந்த முறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றினால் கூட நமக்கு பண வசியம் என்பது உண்டாகும். அந்த தீபத்தை எப்படி ஏற்றுவது என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

குபேர பௌர்ணமி

குரு பகவான் மற்றும் குபேரருக்கு உகந்த நாளாக திகழக்கூடிய வியாழக்கிழமை அன்று பௌர்ணமி என்பது வருகிறது. இதனால் அன்றைய தினத்தில் நாம் குரு பகவானையும், குபேர பகவானையும், அதேசமயம் பௌர்ணமி தினத்திற்குரிய தெய்வங்களான பெண் தெய்வங்களையும் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் உண்டாகும். ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட மாலை 5 மணிக்கு மேல் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வழிபாடு செய்தாலே பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து நிறைவான வாழ்க்கையை வாழ முடியும். பணம் ரீதியான எந்த ஒரு பரிகாரமாக இருந்தாலும் அந்த பரிகாரத்தை பௌர்ணமி தினத்தன்று நாம் செய்யும் பொழுது அதன் பலன் நமக்கு அதிகமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பரிகாரத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

சாதாரணமாக நம்முடைய வீட்டில் காலையில் மாலையிலும் தீபம் ஏற்றி வழிபாடு செய்யும் முறை என்பது இருக்கும். அப்படி நாம் மாலை நேரத்தில் தீபம் ஏற்றும் பொழுது சில பொருட்களை மட்டும் சேர்த்து வைத்து ஏற்றினால் நமக்கு பணவசியம் என்பது உண்டாகும். அதுவும் குறிப்பாக குபேர பௌர்ணமி தினத்தில் ஏற்றும் பொழுது நமக்கு அதிக அளவில் செல்வ வளம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. இந்த தீபத்தை மாலை 5 மணியிலிருந்து இரவு படுக்கச் செல்வதற்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் ஏற்றலாம். வீட்டில் எந்த ஒரு தீபத்தை ஏற்றும் வழக்கம் இருந்தாலும் அந்த தீபத்தை ஏற்றுக் கொள்ளலாம். தனியாக இதற்கென்று அகல் விளக்கு தேடி ஏற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை.

வீட்டில் கண்டிப்பாக முறையில் காமாட்சி அம்மன் விளக்கு என்பது இருக்கும். அந்த விளக்கை கண்டிப்பான முறையில் ஒரு தாம்பாளத்தின் மேல் வைத்து தான் நாம் தீபம் ஏற்றுவோம். அப்படி தாம்பாளத்தின் மேல் விளக்கை வைப்பதற்கு முன்பாக அந்த விளக்கிற்கு அடியில் இரண்டு கிராம்பு, இரண்டு ஏலக்காய், ஒரு ஐந்து ரூபாய் நாணயம் இவற்றை வைக்க வேண்டும். பிறகு அதற்கு மேல் நாம் காமாட்சி அம்மனின் விளக்கை வைத்து நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இப்படி நாம் தீபம் ஏற்றி முடித்த பிறகு அந்த தீபத்தை பார்த்தவாறு பண வரவு அதிகரிக்க வேண்டும், பணம் கைநிறைய சேர வேண்டும் என்ற வேண்டுதலை முன்வைத்து வழிபாடு செய்து கொள்ளுங்கள். குறைந்தபட்சம் அரை மணி நேரம் இந்த தீபம் எரிய ட்டும் பிறகு அதை குளிர்வித்து விட வேண்டும். இப்பொழுது அந்த விளக்கிற்கு அடியில் இருக்கக்கூடிய ஏலக்காய், கிராம்பு, ஐந்து ரூபாய் நாணயம் இவை அனைத்தையும் எடுத்து சிவப்பு, பச்சை அல்லது மஞ்சள் இந்த மூன்று நிறங்களில் ஏதாவது ஒரு நிறத்தில் துணியை எடுத்து அதற்குள் வைத்து மூட்டையாக கட்டி எந்த இடத்தில் நீங்கள் பணத்தை வைத்து செலவு செய்கிறீர்களோ அந்த இடத்தில் வைத்து விட வேண்டும்.

ஒவ்வொரு பௌர்ணமிக்கும் இதே முறையில் தீபமேற்றி வழிபாடு செய்து விட்டு பழைய ஏலக்காய் மற்றும் கிராம்பை கால்படாத இடத்தில் போட்டு விடலாம். அப்படி இல்லாத பட்சத்தில் சாம்பிராணி தூபம் காட்டுவதற்கு உபயோகப்படுத்திக் கொள்ளலாம். புதிதாக இருக்கக்கூடிய கிராம்பு ஏலக்காயை அதே துணியில் வைத்து மூட்டையாக கட்டி வைத்துக் கொள்ளலாம். இப்படி நாம் தொடர்ச்சியாக செய்வதன் மூலம் கிராம்பு மற்றும் ஏலக்காயின் சக்தியால் நமக்கு பணவரவு அதிகரிக்கும். செல்வ செழிப்பும் உயரும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே:வீட்டில் துடைப்பம் பலன்கள்

எளிமையான இந்த தீப வழிபாட்டை முழுமனதோடு இன்று இரவுக்குள் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் குபேரரின் அருளும், மகாலட்சுமி தாயாரின் அருளும் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று பணம் தொடர்பான பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்