- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வசியத்தை அதிகரிக்கும் பரிகாரம்

பண வசியத்தை அதிகரிக்கும் பரிகாரம்

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. பணத்தை சம்பாதிப்பது என்பது எந்த அளவிற்கு பெரிய விஷயமோ அதே போல் தான் சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வதும் மிகப்பெரிய விஷயமாகவே கருதப்படுகிறது. பணத்தை நம்மிடம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நமக்கும் பணத்திற்கும் ஒருவிதமான வசியம் என்பது வேண்டும். நாம் பணத்தை எந்த அளவிற்கு ஈர்க்கிறோமோ அந்த அளவிற்கு தான் பணம் நம்மிடம் தங்கும் என்று கூறப்படுகிறது. அப்படி ஈர்க்கக்கூடிய செயலை தான் வசியம் என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட பண வசியத்தை ஏற்படுத்துவதற்கு இன்று இரவுக்குள் எந்த பொருட்களை எரிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பண வசியத்தை அதிகரிக்கும் பரிகாரம்

அமாவாசை என்றாலே அது மகாலட்சுமிக்குரிய தினமாக கருதப்படுகிறது. அதிலும் விசேஷ மிகுந்த ஆடி அமாவாசை என்பது கூடுதல் சிறப்பு மிகுந்ததாக கருதப்படுகிறது. மேலும் குபேரருக்குரிய கிழமையான வியாழக்கிழமையோடு இந்த அமாவாசை வரும்பொழுது இதுக்கு கூடுதல் சிறப்பு உண்டாகும். இப்படி குபேரருக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் உரிய இந்த நாளில் நாம் மகாலட்சுமி தாயாருக்கு பிடித்தமான சில பொருட்களை எரிப்பதன் மூலம் நமக்கு பணவசியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அதை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

மகாலட்சுமியை வசியம் செய்வதற்கு பலவிதமான பொருட்கள் உதவி செய்யும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அப்படிப்பட்ட பொருட்களுள் மிகவும் முக்கியமான சில பொருட்களை வைத்து தான் இந்த பண வசியத்தை நாம் மேற்கொள்ள போகிறோம். இதற்கு பழைய மண்ணால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பாத்திரம் அல்லது சற்று பெரியதாக இருக்கக்கூடிய அகல் விளக்கு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பண வசியத்தை அதிகரிக்க கூடிய மொட்டு உடையாத நல்ல நிலையில் இருக்கக்கூடிய கிராம்பு ஆறு எண்ணிக்கையில் போட்டுக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஏலக்காய் மூன்றை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள். கடைசியாக சுருள்பட்டை ஒரு துண்டை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இவை மூன்றுமே பண வசியத்தை அதிகரிக்க கூடிய பொருட்களாக கருதப்படுகிறது. மேலும் இவை மூன்றுமே மகாலட்சுமிக்குரிய பொருட்களாகவும் பார்க்கப்படுகிறது. இதனுடன் மகாலட்சுமிக்கும் பெருமாளுக்கும் உகந்த பொருளாக திகழக்கூடிய பச்சை கற்பூரத்தையும் நெய்யையும் சிறிதளவு சேர்த்து எரிக்க வேண்டும். இது முழுமையாக எரிய வேண்டும் என்று கிடையாது. இதிலிருந்து புகை வரும் அளவிற்கு எரித்தால் கூட போதும். இந்த புகையை வீடு முழுவதும் காட்ட வேண்டும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 12 மணிக்குள் நம்முடைய வீட்டில் நாம் செய்யும் பொழுது நமக்கு இருக்கக்கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீரும். பணவசியம் உண்டாகும். மேலும் கடன் தொடர்பான பல பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு நல்ல வழி கிடைக்கும். எளிமையான இந்த தாந்திரீக பரிகாரத்தை சுத்தமாக இருக்கக்கூடிய நபர்கள் தான் செய்ய வேண்டும்

இதையும் படிக்கலாமே: மன அமைதிக்கான வழி

மகாலட்சுமி தாயாரை முழுமனதோடு நினைத்துக் கொண்டு பண வசியம் ஏற்பட வேண்டும் என்ற எண்ணத்துடன் இந்த பரிகாரத்தை யார் ஒருவர் செய்கிறார்களோ அவர்களுக்கு பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்வதோடு பணம் என்றென்றும் அவர்கள் கையில் இருக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்