எவ்வளவுதான் உழைத்து சம்பாதித்து பணத்தை கொண்டு வந்து கொடுத்தாலும் அது பல வழிகளில் உடனே கரைந்து போய்விடும். நாம் ஆசைப்பட்டதை வாங்கவோ, அனுபவிக்கவோ நம்மால் முடியாமல் போய்விடும். பணத்தை சம்பாதிப்பதை விட, அதை சரியான விஷயத்திற்காகத் தான் செலவு செய்கிறோமா? என்பதில் தான் முன்னேற்றம் ஒளிந்து கொண்டுள்ளது. பணம் விரையமாகாமல் தடுக்கக் கூடிய இந்த ஒரு பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும்? என்பதைத் தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.
இவ்வுலகில் இருக்கும் ஒவ்வொரு சுவைக்கு பின்னாலும், ஒவ்வொரு தனித்துவம் வாய்ந்த மகத்துவம் உண்டு. அது மற்ற பொருட்களில் நமக்கு கிடைப்பது கிடையாது. உப்பு தனித்துவம் வாய்ந்த ஒரு பொருள், இந்த உப்பு சுவை வேறு எதிலும் பெற்று விட முடியாது. காரத்திற்கு மிளகாய், மிளகாயின் தனித்துவம் மற்ற எதிலும் இல்லை. அது போல புளியில் இருக்கும் புளிப்பு தன்மையை மற்ற பொருட்களில் நாம் அடைந்து விட முடியாது. அதற்கென தனித்துவங்கள் உண்டு. இந்த தனித்துவம் வாய்ந்த பொருட்கள் ஒவ்வொன்றும் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவையாக இருக்கிறது.
கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை வீட்டிற்கு கொண்டு வருபவர்கள் அதை முதன் முதலில் பூஜை அறையில் கொண்டு போய் வைத்து வழிபட வேண்டும். பூஜை அறையில் கொண்டு போய் வைக்கும் பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் கல் உப்பு போட்டு அதன் மீது வைப்பார்கள். இது மகாலட்சுமியின் அருள் தரும், செல்வம் சேரும் என்பது ஐதீகம்.
ஒரு கிண்ணத்தில் புளியை வைத்து அதன் மீது நீங்கள் கொண்டு வந்த பணத்தை வைத்து வழிபட வேண்டும். இப்படி செய்யும் பொழுது பணம் விரயமாகாமல் இருக்கும். வீண் விரயம் ஆகாமல், நீங்கள் எதற்காக பணம் சம்பாதித்து கொண்டு வந்து வைக்கிறீர்களோ, அதற்கான சரியான செலவு செய்யக் கூடிய வழியினை ஏற்படுத்திக் கொடுக்கும். புளி இறுகி எப்படி இருக்கிறதோ அதே போல பணத்தை இறுகி வைத்துக் கொள்ளும். உங்களை விட்டு சென்று விரயமாவதை தடுக்கும்.
புளி இறுகி இருப்பது போல, பணமும் உங்களிடம் இறுகி உங்கள் தேவைகளை சரியான நோக்கத்திற்காக நிறைவேற்றுவதற்கு புளியின் மீது வைத்து வழிபட்டு எடுத்துக் கொள்ளலாம். தின கூலி வாங்குபவர்கள் தினமும் இது போல செய்யலாம். மாத சம்பளம் வாங்குபவர்கள் மாதம் ஒருமுறை சம்பளம் வாங்கியதும் இதுபோல செய்யலாம். சாமி கும்பிட்டவுடன் புளியில் இருக்கும் பணத்தை எடுத்து நீங்கள் எப்பொழுதும் போல மரப்பெட்டியில் வைத்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:
10 பைசா செலவில்லாமல் சருமம் பளபளக்க
பணத்தை மரத்தாலான பொருட்கள் அல்லது மணி பர்ஸ் போன்றவற்றில் வைக்கலாம் பீரோவில் அப்படியே நேரடியாக வைப்பதை தவிர்க்க வேண்டும். இரும்பு என்பதால் இரும்பில் பணத்தை வைப்பது விரயத்தை தரும். பணத்துடன் எப்போதும் சிறிதளவு வேப்பிலையை வைத்துக் கொள்ளுங்கள். பணம் பல இடங்களில் சென்று வரும் பொருளாக இருப்பதால், அதற்கும் தோஷங்கள் உண்டாகும். தோஷம் உள்ள பணம் நமக்கு சந்தோசத்தை கொடுப்பதில்லை, எனவே சந்தோசம் கொடுக்க இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள் செய்யும் பொழுது அது உண்மையிலேயே நம் மனதிற்கு நல்ல ஒரு மாற்றத்தை கொடுத்து விரயமாவதை தடுத்து நமக்கு வேண்டியதற்கு செலவு செய்யக் கூடிய அமைப்பை தரும்.