பண பற்றாக்குறை இல்லாமல் இருக்கவும், தாணிய குறைபாடு இல்லாமல் இருக்கவும் இந்த அதிர்ஷ்ட மூட்டையை உங்கள் வீட்டு அரிசிப் பானையில் வைத்து விடுங்கள்

ulakku
- Advertisement -

மனிதன் உயிர் வாழ அடிப்படையான ஒன்று உணவு. மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் தனது வாழ்க்கையை நல்லபடியாக வாழ்வதற்கு முதலில் ஆரோக்கியம் என்பது மிகவும் அவசியமாகிறது. அதற்கு மூன்று வேளையும் சத்தான உணவுகளை உண்ண வேண்டும். ஒரு சிலர் ஓடி ஓடி உழைத்து கொண்டிருப்பார்கள். ஆனால் ஒருவேளை உணவை கூட சரியாக சாப்பிட மாட்டார்கள். இப்படி பலரும் பலவித துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள். ஆனால் இந்த துன்பங்களில் இருந்து விடுபடவும், வீட்டில் எப்போதும் பணப் பற்றாக்குறையும், தானிய பற்றாக்குறையும் ஏற்படாமல் இருக்கவும் இந்த எளிய பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து விட்டால் போதும். வாருங்கள் அது என்ன பரிகாரம் என்பதையும் அதனை எவ்வாறு செய்வது என்பதையும் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

food

நமது முன்னோர்கள் வீட்டின் அதிர்ஷ்டமாக தானிய பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வார்கள். அவற்றை உபயோகிப்பதில் மிகவும் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். தானியங்களை பராமரிப்பதற்கென்று ஒவ்வொரு வீட்டிலும் ஒரு அரண் அமைத்து வைத்திருப்பார்கள். மழை, புயல் எதுவாக இருந்தாலும் அதில் இந்த தானியங்கள் மட்டும் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்வார்கள். இப்படி உணவின் அருமை அறிந்து அந்த உணவுப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் வீட்டில் துன்பம் ஏற்படும் என்பதை தெளிவாக அவர்கள் புரிந்து வைத்துக் கொண்டிருந்தனர்.

- Advertisement -

அப்படி அவர்கள் அந்தப் பொருட்களை உபயோகப்படுத்தும் பொழுது, அதாவது அரிசி பானையில் இருந்து அரிசியை எடுப்பதாக இருந்தால் உழக்கில் அரிசியை அளந்து அதனை முழுவதுமாக வேறு பாத்திரத்தில் கொட்ட மாட்டார்கள். உழக்கையும் கவிழ்த்து வைக்க மாட்டார்கள். இவ்வாறு செய்தால் அரிசி குறைந்துவிடும் என்று அரிசி அளப்பதில் கவனத்துடன் செயல் படுவார்கள. அரிசி அளக்கும் உழக்கில் எப்பொழுதும் சிறிதளவு அரிசியை மிச்சம் வைத்திருப்பார்கள்.

ration-rice

அதேபோல் தானிய பொருட்களை யாருக்காவது தானமாக கொடுப்பதாக இருந்தால் முறத்தைப் பயன்படுத்தி தான் கொடுப்பார்கள். வெறும் கையால் கொடுக்க மாட்டார்கள். அதேபோல் வருமானம் வந்ததும் முதல் வேலையாக ஏதாவது ஒரு தானிய பொருட்களை தான் வாங்கி வைப்பார்கள். பூஜை அறையில் எப்போதும் ஒரு உழக்கு அரிசியை வைத்து பூஜை செய்வார்கள். இப்படி தானிய பொருட்களுகென்று தனிப்பட்ட சக்தி இருக்கிறது. எனவே அவற்றை நாம் சரியாக பயன்படுத்த வேண்டும்.

- Advertisement -

அரிசி மூட்டை வாங்கி வந்தவுடன் அவற்றை அப்படியே மூட்டையாக வைத்துக்கொள்ளாமல் அரிசி பாத்திரத்தில் கொட்டி விட வேண்டும். அதற்குள் அரிசி அளப்பதற்காக எப்போதும் ஒரு உழக்கை வைத்திருக்க வேண்டும். ஒரு வெள்ளை நிற சிறிய துண்டில் 2 ஏலக்காய், 2 கிராம்பு, விரல் மஞ்சள் ஒன்று, பிரியாணி இலை ஒன்று மற்றும் ஒரு ரூபாய் நாணயம் ஒன்றையும் இவற்றுடன் வைத்து சிறிய மூட்டையாகக் கட்டிக் கொண்டு, அதனை அரிசி பானையில் வைத்துவிட வேண்டும்.

manjal-mudichu

இவ்வாறு செய்வதால் உங்கள் இல்லங்களில் எப்பொழுதும் தானியத்திற்கு குறைவு இல்லாமல் இருக்கும். இதனை அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி, சதுர்த்தி போன்ற தினங்களில் செய்வது மிகவும் அற்புதமான பலனை கொடுக்கிறது. அவ்வாறு வெள்ளிக்கிழமை தோறும் ஒரு உழக்கில் தலை தட்டாமல் அரிசியை முழுவதுமாக எடுத்துக் கொண்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்து, மறுநாள் அதனை சமைத்து சாப்பிட வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலமும் நமது வீட்டில் எப்பொழுதும் கஷ்டம் இல்லாமல் சுகமான வாழ்க்கை நீடிக்கும்.

- Advertisement -