பணக்கார யோகம் உங்கள் ராசிக்கு எப்படி உள்ளது தெரியுமா ?

astrology

இந்த உலகில் பலரும் தினம் தினம் உழைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் உழைப்பு மட்டுமே ஒருவரை உச்சத்திற்கு கொண்டு செல்வதில்லை. உழைப்போடு சேர்த்து அதிஷ்டமும் இருந்தால் மட்டுமே வாழ்வில் ஜெயிக்க முடிகிறது. அந்த வகையில் எந்த ராசிக்கு செல்வம் சேர்க்கும் யோகம் அதிகம் உள்ளது என்று பார்ப்போம் வாருங்கள்.

மேஷம்
meshamஎதையும் உற்று நோக்கி புத்திசாலித்தனமாக காரியத்தை செய்யும் குணம் கொண்டவர்கள் மேஷ ராசிக்காரர்கள். இவர்கள் கையில் எடுக்கும் பல காரியங்கள் வெற்றியிலேயே முடியும். இவர்கள் தங்கள் வாழ்வில் படிப்படியாக மிக வேகமாக முன்னுக்கு வருவார்கள். ஒருகட்டத்தில் இவர்கள் கையில் பண புழக்கம் அதிகரித்து நல்ல ஒரு நிலையை அடைந்து செல்வந்தராக வாழ்வார்கள்.

ரிஷபம்
rishabamரிஷப ராசிக்காரர்கள் ஒரு சிறப்பான உழைப்பாளிகள் ஆனால் பணம் என்பது இவர்கள் கையில் நிலைத்திருக்காது. பணத்தை பல வழிகளில் சம்பாதிக்கும் திறன் இவர்களிடம் இருந்தாலும் கூட ஏதாவது ஒரு செலவு எப்போதும் இவர்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். பணத்தை கடவுளாக மதிக்கும் இவர்கள் சில நேரங்களில் சுயநலவாதிகளாகவும் செயல்படுவதுண்டு.

மிதுனம்
midhunamமிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை பண புழக்கம் என்பது எப்போதும் சீராக இருக்கும். பணம் இல்லை என்ற நிலை இவர்களுக்கு அவ்வளவு எளிதில் வராது. சிறு வயது முதலே இவர்கள் நல்ல செல்வாக்கோடு வளருவார்கள். வளர்ந்த பிறகும் ஓர் அளவிற்கு செல்வந்தர்களாகவே வாழ்வார்கள்.

கடகம்
kadagamகடக ராசிக்காரர்களை பொறுத்தவரை பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு அதிகம் இருக்கும். அதற்காக பல நேரங்களில் இவர்கள் வேறு ஊர்களில் சென்று கூட வேலை செய்து சம்பாதிப்பார்கள். இவர்களில் பலர் வேலை காரணமாக குடும்ப பொறுப்பை தங்கள் துணையிடம் முழுமையாக ஒப்படைத்து விடுவார்கள். சிறப்பாக பாடுபட்டு பணம் சம்பாதித்தாலும் பல நேரங்களில் பண தட்டுப்பாடு இவர்களை வாட்டும்.

சிம்மம்
simmamசிம்ம ராசிக்காரர்களை பொறுத்தவரை பணத்தை நன்கு சம்பாதிப்பார்கள் அதற்கேற்ப செலவும் செய்வார்கள். இவர்களுக்கு பண தேவை எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் ஏதாவது ஒரு வழியில் இவர்களுக்கு பணம் வந்து சேரும். எப்போதும் இவர்களை சுற்றி ஒரு கூட்டம் இருக்கும் அதனால் பல நேரங்களில் தேவையற்ற செலவு செய்ய நேரிடும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:
உங்கள் நட்சத்திரத்திற்கான பொதுவான குணங்கள்

கன்னி
kanniபண விஷத்தை பொறுத்தவரை கன்னி ராசிக்காரர்கள் எப்போதும் மிக சிக்கனமாக இருப்பார்கள். வாழ்வில் பணம் எவ்வளவு முக்கியம் என்பதை நன்கு புரிந்து செயல்படுவார்கள். பணத்தை சேமிக்கும் பழக்கம் இவர்களிடம் அதிகம் இருக்கும். வீட்டு மனை வாங்குதல் போன்ற விடயங்களுக்காக இவர்கள் பணத்தை செலவிடுவது உசிதம்.

துலாம்
thulamதுலாம் ராசிக்காரர்கள் நியாயத்திற்கு பேர்போனவர்களாக இருப்பார்கள் அதனாலேயே இவர்கள் ஏதாவது தொழில் செய்தால் பலர் இவர்களை தேடி வந்து வியாபாரம் செய்வார்கள். இவர்களின் நேர்மை காரணமாக இவர்களிடம் எப்போதும் பணம் அதிகம் வந்து சேரும்.

விருச்சிகம்
virichigamவிருச்சிக ராசிக்காரர்களை பொறுத்தவரை ஆசை என்பது இவர்களை ஆட்டுவிக்கும். ஆசையை பூர்த்தி செய்ய இவர்கள் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். உழைக்க தெரிந்த இவர்கள் பணம் சம்பாதிக்கும் வழி அறிந்து சம்பாதிக்க துவங்கினால் பணம் அதிகம் வந்து சேரும் அதனால் வாழ்வில் மகிழ்ச்சி கூடும். ஆனால் இவர்களில் பலர், பணம் சம்பாதிக்க சரியான வழி இருந்தும் அதை சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிடுவதே நிதர்சனமான உண்மை.

தனுசு
dhanusuதனுசு ராசிக்காரர்கள் அடுத்தவர்களுக்காக அவ்வளவு எளிதில் பணத்தை செலவிடமாட்டார்கள். பணமே இவர்களை மகிழ்விக்கும் ஆனால் பணத்தை சேமிக்கும் வாய்ப்பு இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் பண விடயத்தில் இவர்கள் பெரிதாக ஏமாறவும் வாய்ப்புண்டு. ஆகையால் கொடுக்கல் வாங்கல் விடயங்களில் எப்போதும் இவர்கள் கவனமாக இருப்பது நல்லது.

மகரம்
magaramமகர ராசிக்காரர்களை பொறுத்தவரை பணம் என்பது இவர்கள் கையில் வருவதும் போவதும் தெரியாது. தங்களது கடின உழைப்பால் இவர்கள் எப்போதும் முன்னேற்ற பாதையை நோக்கியே நடந்து செல்வர். அடுத்தவர்களுக்கு மன கஷ்டம் என்றாலும் பண கஷ்டம் என்றாலும் இவர்கள் உதவ தயங்க மாட்டார்கள். பணம் என்பது இவர்களின் வாழ்வில் ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

கும்பம்
kumbamகும்ப ராசிக்காரர்களை பொறுத்தவரை எதையும் கணக்கிட்டு கட்சிதமாக செலவிடுவார்கள். இவர்களுக்கு வாழ்வில் சொத்து சேர்க்கும் யோகம் அதிகம் இருக்கும். எப்படியாவது சிறுக சிறுக சேர்த்து அசையும் சொத்து அசையா சொத்து என்று ஏதோ ஒன்றில் பணத்தை போட்டுவிடுவார்கள். எவ்வளவுதான் பார்த்து பார்த்து செலவு செய்தாலும் செலவை குறைக்க முடியாமால் சில நேரம் இவர்கள் தடுமாடவும் செய்வார்கள்.

மீனம்
meenamமீன ராசிக்கார்களை பொறுத்தவரை பணம் இவர்கள் கையில் விளையாடும். ஆனாலும் இவர்கள் லாட்டரி போன்ற அதிஷ்டங்களை நம்பி பணத்தை கோட்டை விடுவார்கள். சில நேரங்களில் ரியல் எஸ்டேட் போன்ற இடம் சார்ந்த தொழில்களும் இவர்களுக்கு நஷ்டத்தை தரும். ஆனாலும் இவர்கள் கையில் பணம் குறையாது.

ஜோதிடம், ஜாதகம் மற்றும் ஆன்மீகம் சம்மந்தமான தகவல்களை பெற தெய்வீகம் முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.