- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalவீட்டடில் பணவரவு மளமளவென்று உயர வெந்தயத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வைத்தால் போதும்

வீட்டடில் பணவரவு மளமளவென்று உயர வெந்தயத்துடன் இந்த ஒரு பொருளை சேர்த்து வைத்தால் போதும்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற ஆசையே அதிகமாக இருக்கும். அதற்காக கடின உழைப்பும், தெளிவான சிந்தனையும் இருக்க வேண்டும். ஒரு சிலருக்கு எவ்வளவுதான் கடின உழைப்பு இருந்தாலும் அவர்களின் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டே தான் இருக்கும். ஏதாவது ஒரு பிரச்சினை அடிக்கடி வந்து கொண்டிருக்கும். அதுமட்டுமல்லாமல் ஒருவரின் ஜாதகத்தில் கிரக பலன்கள் சரியில்லாமல் இருந்தாலும் அவர்களின் வாழ்வில் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும். இவ்வாறான பிரச்சனைகளிலிருந்து விடுபட நமது கிரக தோஷங்களை சரி செய்தால் மட்டுமே நமது வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும். எனவே ஒருவர் வாழ்வில் முன்னேறுவதற்கும், பணவரவை அதிகரிப்பதற்கும் வெந்தயத்தை எவ்வாறு உபயோகப்படுத்த வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

ஒருவர் பணத்தை சேமிக்க வேண்டும் என்று நினைத்தால் அவ்வளவு சுலபமாக அதனை செய்துவிட முடியாது. செல்வங்களுக்கு அதிபதியான புதனின் அருள் நமக்கு இருந்தால் மட்டுமே பணத்தை நம்மால் சேமிக்க முடியும். பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்று சொல்வார்கள். அவ்வாறு புதன் பகவானின் அருள் நமக்கு முழுவதுமாக நிறைந்திருக்க வேண்டும். அதற்காக ஒரு கைப்பிடி வெந்தயத்தை எடுத்துக்கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த வெந்தயத்தை பணத்தை சேமிக்கும் இடங்களான உண்டியல், பணப்பெட்டி மற்றும் பீரோவில் வைத்து விடவேண்டும். அதன்பிறகு நீங்கள் சேமிக்கும் பணம் விரைவாக அதிகரிக்க ஆரம்பிக்கும். இதனை புதன்கிழமை அன்று புதன் ஓரையில் செய்ய வேண்டும். அவ்வாறு புதன்கிழமை அன்று ஒரு கைப்பிடி வெந்தயத்தை தலையை சுற்றி வலப்புறம் மூன்று முறையும், இடப்புறம் மூன்றுமுறையும் சுற்றி விட்டு அவற்றை காக்கை, குருவிகள் உண்பதற்கு உணவாக தூவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் வீட்டில் பணப் புழக்கம் அதிகரிக்கும்.

Vendhayam

ஒருவருக்கு பணம் அதிகரிக்க அவரின் கிரக நிலையில் குரு பார்வை நம்மீது இருக்க வேண்டும். ஏழரை சனி நடக்கின்ற போதும் ஒருவருக்கு குருவின் பார்வை இருந்து விட்டால் போதும். பணத்தின் வரவு அதிகமாக இருக்கும். வாழ்வில் முன்னேற்றமும் கிடைக்கும். எனவே குருவின் அருள் நமக்கு கிடைக்க வேண்டியது மிகவும் அத்தியாவசியமான ஒன்றாகும்.

- Advertisement -

எனவே வியாழக்கிழமை அன்று ஒரு பச்சை நிற பட்டுத் துணி அல்லது சாதாரண துணி எடுத்துக் கொள்ளலாம். பட்டு துணி எடுத்துக் கொண்டால் மிகவும் விசேஷமானதாகும். பட்டுத்துணி பணத்தை ஈர்க்கும் வல்லமை படைத்தது. பிறகு ஒரு கைப்பிடி வெந்தயம் மற்றும் சிறிதளவு பச்சை கற்பூரத்தையும் பச்சை நிறத் துணியில் வைத்துக்கொள்ள வேண்டும்.

thursday

பிறகு இவற்றுடன் சிறிய தங்க காசு அல்லது வெள்ளிக் காசை வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு தங்க காசு வெள்ளிக்காசு வைக்க முடியாதவர்கள் சிறிய செம்புத் தகடு அல்லது ரூபாய் நோட்டு அதுவும் முடியாதவர்கள் சில்லறை நாணயம் இவற்றில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொள்ளலாம். இவை அனைத்தையும் சேர்த்து ஒரு முடிச்சாக கட்டி கொண்டு அதனை பூஜை அறையில் வைத்து தீபம் காண்பித்து பூஜை செய்து, பொதுவாக பணம் வைக்கும் பெட்டியில் அல்லது பீரோவில் வைத்து விட வேண்டும்.

green

பிறகு இந்த முடிச்சிற்க்கு பூஜை செய்யும் பொழுதெல்லாம் தீப தூபம் காண்பித்து ஆராதனை செய்ய வேண்டும். பின்னர் இந்த முடிச்சை மாதம் ஒருமுறை பிரித்து அவற்றில் இருக்கும் வெந்தயத்தை காக்கை குருவிகளுக்கு உணவாக அளித்து விட்டு, மீண்டும் புதியதாக வெந்தயத்தை மட்டும் மாற்றி வைக்க வேண்டும். மற்ற பொருட்களை அப்படியே வைத்துக் கொள்ளலாம். பச்சை கற்பூரம் கரைந்து விட்டது என்றாலும் அதனையும் புதியதாக மாற்றிக்கொள்ளலாம். இந்த பரிகாரத்தை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் போதும். வீட்டில் செல்வம் குறையாமல் மளமளவென்று அதிகரித்துக் கொண்டே செல்லும்.

சற்று முன்