உங்கள் வீட்டில் பணம் காய்க்கின்ற மரம் வளர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

money-tree2

பணம் காய்க்கும் மரமா? என்று தலைப்பை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைய வேண்டாம். உங்கள் வீட்டிற்கு நிரந்தரமான பணவரவை கொடுக்கக் கூடிய மரம், உங்கள் மனதில் வளர வேண்டும் என்றால், அதற்கு என்ன பரிகாரத்தை செய்வது? எப்படி செய்வது? என்பதை பற்றிய விரிவான பதிவு தான் இது. அப்படின்னா பணம் காய்க்கிற மரம் நிஜத்தில் வளராதா? என்று இந்த பதிவை பாதியில் படிக்காமல் விட்டுவிட வேண்டாம். இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் கட்டாயம் உங்கள் வீட்டிற்கு பணவரவு அதிகரித்துக் கொண்டே செல்லும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. பணப் பிரச்சனைக்காண தீர்வுகளை நாம் தேடிச் சென்றாலும், அந்தப் பணம் மட்டும் ஏனோ நம் கைக்கு தேடி வருவதில்லை. இந்த பிரச்சினைக்கு காரணம் கட்டாயம் பணமில்லை. பணம் வராது என்று நம்பும் நம் மனம் தான். அதை மாற்றினாலே போதும்.

money-tree1

சரி. பரிகாரம் எப்படி செய்யலாம் என்பதை பற்றி பார்க்கலாம்! இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டும். குறிப்பாக சுக்கிர ஓரை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள், அல்லது மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் இதை செய்யலாம். முடிந்தவரை இரவு நேரத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஆண்கள், பெண்கள் இருபாலரில், யார் வேண்டுமென்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். செய்யும்போது ஒரு வெள்ளை நிற துண்டு உங்கள் மேல் இருக்க வேண்டும்.

இதற்கு தேவையான பொருட்கள் 6 ஒரு ரூபாய் நாணயங்கள். உங்கள் வீட்டின் வெளி பக்கத்திலோ அல்லது புழக்கடை என்று சொல்லப்படும் பின்பக்கத்திலோ வடகிழக்கு மூலையில் தோட்டம் அமைக்கப்பட்டு,  தரைய்னது மண் பகுதியாக இருந்தால், அந்த இடத்தை லேசாக பள்ளம் தோண்டி, இந்த 6 நாணயங்களையும் புதைத்து வைத்து விடுங்கள். நாணயங்களை மண்ணில் தோண்டி புதைப்பதற்கு முன்பு, அந்த 6 நாணயங்களையும் உங்கள் கையில் வைத்துக்கொண்டு, இந்த மந்திரத்தை 48 முறை உச்சரிக்க வேண்டும். உங்களுக்கான பணவரவு மந்திரம் இதோ..

one rupee

‘ஓம் ஸ்ரீம் ஓம்’

- Advertisement -

தினம்தோறும் தண்ணீரில் ஒரு ஸ்பூன் பால் கலந்து, அதன் மேல் ஊற்றி வரவேண்டும். பஞ்ச பூதங்களில் ஒன்றான பூமியிடம், பூமாதேவியிடம் பண வளர்ச்சிக்காக வேண்டிக் கொண்டு செய்யப்படும் பரிகாரம் இது. பூமியைப் பொறுத்தவரை எந்த ஒரு விதையை புதைத்து வைத்தாலும் அதற்கான வளர்ச்சி கட்டாயம் உண்டு. இதேபோல்தான் அந்த நாணயங்கள் புதைக்கப்பட்டது மூலம், உங்களுடைய வருமானமும் வளர்ச்சி அடையும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

money1

நீங்கள் நாணயங்களை புதைத்து வைத்த அந்த இடத்தில் தண்ணீரை ஊற்ற ஊற்ற உங்கள் மனதில் பண மரம் நிச்சயம் வளரும். அந்தப் பணம் உங்கள் கைகளுக்கும் வந்து சேரும். பலன் நிச்சயம் உண்டு. நம்பிக்கையோடு செய்தால் மட்டும்! வீட்டு முன் பக்கத்திலோ பின் பக்கத்திலோ இடம் இல்லாதவர்கள் ஒரு சிறிய தொட்டி ஒன்றை வாங்கி வைத்து அதை உங்கள் வீட்டிற்க்கு உள்ளேயே வடகிழக்கு மூலையில் வைத்து, இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறில்லை. அந்தத் தொட்டியில் கட்டாயம் செடி வைக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. அந்தத் தொட்டியில் செடி வைக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், வைத்துக் கொள்ளலாம் அதிலும் எந்த ஒரு தவறும் இல்லை.

இதையும் படிக்கலாமே
மஹாலக்ஷ்மியின் வாகனம் ஆந்தையா? முட்டை கண் ஆந்தையாரை வழிபட்டால் நடக்கும் அதிசயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Panam peruga pariharam Tamil. Panam peruga in Tamil. Panam peruga tips Tamil. Panam peruga vali Tamil. Panam peruga valigal Tamil.