பணம் நம்மிடம் நிற்காமல் ஓட்டம் எடுப்பதற்கு நாம் செய்யும் இந்த சின்ன சின்ன தவறுகள் கூட ஒரு காரணம் தான்.

cash-question
- Advertisement -

எது நமக்கு வேண்டாம் என்று நினைக்கின்றோமோ, அது நம்மிடமே நிலையாக இருக்கும். எது நமக்கு வேண்டும் என்று நினைக்கின்றோமோ அது நம்மை விட்டு சீக்கிரம் பிரிந்து சென்றுவிடும். இதுதான் இயல்பு. இந்த வரிசையில் முதலில் நாம் எதை சொல்வோம் என்றால், பணம் தான். இந்த பணத்தை எவ்வளவு தூரம் இழுத்து பிடித்து நம் கையில் தங்க வைக்க வேண்டும் என்று நினைப்போம். ஆனால் அந்தப் பணம் அவ்வளவு சீக்கிரத்தில் ஏதாவது ஒரு விஷயத்தில் செலவாகிவிடும். பணம் நம் கையில் தங்க நிறைய சாஸ்திர சம்பிரதாய வழிமுறைகளை நாம் பின்பற்றி வருவோம்

பணம் சேர்வதற்கு நாம் நிறைய விஷயங்களை முயற்சி செய்து பார்க்கும்போது நமக்குத் தெரியாத ஒரு சில தவறுகளை செய்வது இயல்புதான். அப்படி நாம் செய்யக்கூடிய இரண்டு தவறுகளைப் பற்றி தான் இன்று தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த தவறை நீங்கள் செய்பவர்களாக இருந்தால் பணம் கையில் தங்காது. பின் சொல்லக்கூடிய விஷயங்களில் மாற்றத்தைக் கொண்டு வந்து பாருங்கள். நிச்சயமாக செலவு குறையும்.

- Advertisement -

முதலாவது தவறு இது. பணம் வைக்கும் இடத்திலேயே நிறைய பேர் கை கடிகாரத்தையும் வைப்பார்கள். பணம் வைக்கும் இடத்தில் கை கடிகாரத்தை சேர்த்து வைத்தால் பணம் நிற்காமல் ஓடிக் கொண்டேதான் இருக்கும். தங்கத்தால் செய்யப்பட்ட கை கடிகாரம் ஆக இருந்தாலும், பணம் வைக்கும் இடத்தில் இருந்து கொஞ்சம் தள்ளி வைத்துக் கொள்ளுங்கள். அடுத்தபடியாக பணம் வைக்கும் பெட்டி, பணம் வைக்கும் ட்ரா, பீரோ எதுவாக இருந்தாலும் அதற்கு மேலே சிறியதாக இருக்கக் கூடிய டேபிள் கடிகாரத்தையும் வைக்கக் கூடாது.

கூடுமானவரை பணம் வைக்கும் இடத்தில் ரொம்பவும் அருகில் கடிகாரம் இருக்க வேண்டாம். கடிகாரம் இருக்கும் இடத்தில் ரொம்பவும் அருகில் பணத்தை வைக்க வேண்டாம். கடிகாரம் ஓடுவது போல உங்கள் கையில் இருக்கும் பணமும் நிச்சயம் ஓடிக் கொண்டேதான் இருக்கும். சொன்னால் நம்ப மாட்டீர்கள். சீனர்கள் இதை அவர்களுடைய சாஸ்திரமாக பின்பற்றி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

- Advertisement -

இரண்டாவது விஷயம். ஒரு வீட்டில் தினமும் விளக்கு ஏற்ற வேண்டும். நம்முடைய வீட்டை பிரகாசமாக எத்தனையோ மின்சார விளக்குகள் இருந்தாலும் சரி, தீபத்திலிருந்து வெளிவரக்கூடிய அந்த சுடரில் இருக்கக்கூடிய வெளிச்சமானது நம் வீட்டிற்கு சுபீட்சத்தையும் லட்சுமி கடாட்சத்தையும் கொடுக்கும். வெள்ளி செவ்வாய்க் கிழமை மட்டும் விளக்கு ஏற்றும் தவறை செய்யாதீர்கள்‌. தினந்தோறும் மாலை நேரத்தில் மட்டுமாவது தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு விளக்கு ஏற்றும்போது வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய வாயால் ‘ஸ்வாகதம்’ என்ற வார்த்தையை மூன்று முறை உச்சரித்து விட்டு வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய அஷ்டலட்சுமிகளின் வருகையும் நிறைவாக பெருகும் என்ற இந்த ஒரு நல்ல தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -