“கோடீஸ்வர யோகம்” யாருக்கு ஏற்படும்? அதற்கான பரிகாரங்கள் என்ன

Money

இன்றைய காலத்தில் எந்த ஒரு மனிதனும், தனது சக மனிதனை அவன் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை வைத்தே மதிப்பிடுகிறான். என்ன தான் நாம் அனைவரும் கடுமையாக உழைத்தாலும் எல்லோருமே “குபேரன்” போன்று கோடிகளுக்கு அதிபதி ஆக முடிவதில்லை. ஜோதிட சாத்திரம் சில ராசியினருக்கு மட்டும் செல்வந்தர்களாக இருக்கும் யோகம் அதிகம் இருப்பதாக கூறுகிறது. அவை எந்தெந்த ராசிகள் என்பதையும், எல்லா ராசியினரும் செல்வந்தர்களாவதற்கான பரிகாரங்கள் என்ன என்பதையும் இங்கு காண்போம்.

money

ஜோதிட ரீதியாக 12 ராசியினரை பற்றி பார்க்கும் போது “ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி” ஆகிய ராசியினர் மற்ற எந்த ராசியில் பிறந்தவர்களை விட பணக்காரர்களாகவும், கோடீஸ்வரர்களாகவும் இருப்பது பல வருடங்கள் ஜோதிட கலையில் அனுபவம் பெற்ற ஜோதிடர்களின் கருத்தாக இருக்கிறது. இதில் “ரிஷபம், துலாம்” ராசிகள் நவகிரகங்களில் இன்பங்களுக்கும், செல்வ சேர்க்கைக்கும் காரணாமாக இருக்கும் “சுக்கிரன்” கிரகத்தின் ஆதிக்கம் மிக்கதாகும். இந்த ரிஷபம், துலாம் ராசியினர் பெரும்பாலும் பிறக்கும் போதே செல்வந்தர்களாக இருக்கின்றனர். அப்படி இல்லையென்றாலும் இந்த ராசியினர் பிறந்த பின்பு அவர்களின் குடும்பத்தின் செல்வ நிலை உயரும். சுகங்களின் அதிபதியான சுக்கிர பகவானின் பூரணமான அருள் இவர்களுக்கு இருப்பதால், மிக இளம் வயதிலேயே எல்லா வகையான இன்பங்களையும் இந்த இரு ராசியினரும் அனுபவிப்பார்கள்.

“புதன் பகவான்” ஒரு மனிதனின் கணித திறன், சிறந்த அறிவாற்றல் மற்றும் புத்திசாலித்தனத்திற்கு காரகனாகிறார். புதனின் ஆதிக்கம் மிகுந்த “மிதுனம், கன்னி” ராசியினர் செல்வந்தர்களாக பிறக்காவிட்டாலும், தங்களின் சிறந்த அறிவாற்றல் மற்றும் திறமையாலும் மிகுந்த பொருளீட்டி செல்வந்தர்களாக வாழ்வார்கள். மற்ற ராசிகளில் பிறந்தவர்களும் செல்வந்தர்களாக வாழ்ந்து வந்தாலும்,” ரிஷபம், துலாம், மிதுனம், கன்னி” ராசியினரை போன்று எப்போதும் செல்வந்தர்களாக வாழும் யோகம் மற்ற ராசியினருக்கு சற்று குறைவு தான்.

gopooja

பரிகாரம்:

- Advertisement -

அனைத்து ராசியினரும் நியாயமான வழிகளில் அதிகம் பொருளீட்டவும், செல்வ சேகரிப்பு அதிகமாகவும் கீழே கொடுக்கப்பட்டுள்ள பரிகாரங்களை மிகுந்த நம்பிகையுடன் செய்து வர வேண்டும்.

புதிய தொழில், வியாபாரம் போன்றவற்றை தொடங்குவதற்கு முன்பு உங்களின் குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வத்திற்கு படையலிட்டு வணங்க வேண்டும். தை, ஆடி, மஹாளய அமாவாசைகளின் போது முன்னோர் வழிபாடு செய்து, அந்தணர்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை செய்ய வேண்டும்.

எந்த ஒரு பெண்ணையும் தகாத வார்த்தைகளால் திட்டுவதோ, அடிப்பதோ கூடாது. இச்செயல்களினால் “செல்வ” மகளான “லட்சுமி தேவி” இச்செயல்களை செய்யும் மனிதர்களிடமிருந்து நீங்கி விடுவாள்.

இல்லற வாழ்வில் இருக்கும் ஆண்கள் மற்றும் பெண்கள் வெள்ளிக்கிழமைகளில் வீட்டின் மாடத்தில் இருக்கும் துளசி செடியை வழிபாடு செய்து வந்தால் வீட்டில் இருக்கும் தரித்திரங்கள் ஒழிந்து, செல்வ சேகரம் ஏற்படும்.

வீட்டில் பசுமாடுகள் வளர்ப்பவர்கள் அவற்றை நன்கு பராமரித்தால், அந்த வீட்டில் செல்வம் பெருகும். வெள்ளிக்கிழமைகளில் பசுமாட்டிற்கு பழங்கள், அகத்தி கீரை போன்றவற்றை உணவாக அளித்து வருவதும் செல்வ நிலை உயர சிறந்த பரிகாரம் ஆகும்.

இதையும் படிக்கலாமே:
இந்த வார ராசி பலன் – செப்டம்பர் 10 முதல் 16 வரை

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panam peruga in Tamil