இன்று வெள்ளிக்கிழமை. இன்று மாலை 6:12 மணி அளவில் பெருமாளுக்கு உரிய ஏகாதசி திதி பிறந்து விடுகிறது. இன்று மாலை நாம் செய்யக்கூடிய மகாலட்சுமி வழிபாடின் போது, அற்புதம் வாழ்ந்த ஆன்மீகம் சொல்லும், இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்பவர்கள் வீட்டில், பணக்கஷ்டம், கடன் சுமை என்பது இருந்த இடம் தெரியாமல் காணாமல் போகும். அப்படி என்ன இந்த வழிபாட்டிற்கு பின்னால் இருக்கும் சூட்சமம். இந்த வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படிப்போமா.
கடன் தீர வெள்ளிக்கிழமை அன்று செய்ய வேண்டிய பரிகாரம்
இன்று மாலை 6:12 மணி அளவில் ஏகாதேசி திதி பிறந்தாலும், நாளைக்கு தான் ஏகாதேசி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. இன்று மாலை ஒரு சின்ன கண்ணாடி பவுல் அல்லது பீங்கான் பவுலில் ஒரு கைப்பிடி கல் உப்பு போடுங்க. இது மகாலட்சுமிக்கு சொந்தமானது. சின்னதா துளசி செடி வேர், அப்படி இல்லை என்றால் துளசி செடியில் இருந்து எடுக்கப்பட்ட சின்ன துண்டு கட்டை, இது இரண்டில் எது கிடைத்தாலும், சரிதான்.
அதை கொண்டு வந்து இந்த கல்லுப்பின் மேல் வைத்து விட வேண்டும். இந்த பவுலை அப்படியே பெருமாள் பாதத்தில் வைத்து விடுங்கள். இன்று மாலை வெள்ளிக்கிழமை பூஜையில் இதை தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும். நாளை காலை ஏகாதசி திதி, எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, பெருமாளுக்கு ஒரு நெய் தீபம் ஏற்றி வைத்து விடுங்கள்.
விரதம் இருக்கும் முடியும் என்பவர்கள் நாளை பெருமாளின் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். நாளை புத்திர ஏகாதேசி, குறிப்பாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் நாளை தினம் பெருமாளை நினைத்து வழிபாடு செய்தால் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களால் விரதம் இருக்க முடியவில்லை என்றால் பிரார்த்தனையை மட்டும் பெருமாள் பாதங்களில் வையுங்கள். அந்த நாள் முழுவதும் அப்படியே செல்லட்டும். நேரம் கிடைக்கும் போது பெருமாளே கோவிந்தா ஓம் நமோ நாராயணா என்ற மந்திரத்தை சொல்லலாம். சனிக்கிழமை மாலை பெருமாளுக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த துளசி இலை கட்டையை மட்டும் எடுத்து பத்திரப்படுத்தி பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள், அல்லது பணம் வைக்கும் பர்ஸில் கூட நீங்கள் வைத்துக் கொள்ளலாம்.
48 நாட்களுக்கு மட்டும்தான் இந்த பொருளுக்கு சக்தி இருக்கும். 48 நாட்களுக்குள் உங்களுடைய கடன், பண பிரச்சனை பண பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும். பிறகு நீங்கள் இந்த கட்டையை எடுத்து கால் படாத இடத்தில் போட்டு விடலாம். அந்தக் கல் உப்பை நல்ல தண்ணீரில் கரைத்து மண் பாங்கான இடத்தில் கீழே ஊற்றி விடுங்கள். இந்த பரிகாரம் எல்லாம் எங்களுக்கு இருக்கும் பிரச்சனையை தீர்ப்பதற்கு சரிப்பட்டு வருமா, என்று சிலர் சிந்திக்கலாம்.
இதையும் படிக்கலாமே: பணம் தரும் மந்திர வார்த்தைகள்
நம்பிக்கையோடு செய்பவர்களுக்கு நிச்சயம் பலன் இருக்கும். பெருமாளுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தது மகாலட்சுமி தான், பெருமாள் வாழக்கூடிய துளசி இலை கட்டையை, மகாலட்சுமி யோடு சேர்த்து வைப்பதன் மூலம், பெரும்பாலும் மகாலட்சுமியும் மன சந்தோஷத்தில் நீங்கள் கேட்டதை வாரி வாரி கொடுப்பாங்க. அதேபோல நாளைய தினம் நீங்கள் இந்த பதிவை பார்த்தால், இந்த பரிகாரத்தை செய்யக்கூடாது. காரணம் நாளை ஏகாதசி, துளசி செடியில் இருந்து துளசி இலையை வேரை அல்லது அந்த குச்சி எதுவும் பறிக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.