உங்கள் பீரோவில் கட்டு கட்டாய் பணம் சேர இந்த ஒரு படத்தை ஒட்டி வைத்தால் போதுமே! அப்படி என்ன படம் அது?

bero1
- Advertisement -

நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை எப்போதும் பீரோவில் வைப்பது நல்லது. முந்தைய காலங்களில் மரத்தால் ஆன பீரோ அல்லது கபோர்டு போன்றவற்றை பயன்படுத்தினார்கள். அதுவும் அம்மரங்கள் தேக்கில் செய்ததாகவும், மிகவும் வலிமையானதாகவும் இருந்தது. தேக்கு தேக்கி வைக்கும் என்று கூறுவார்கள். எனவே பணத்தை மென்மேலும் தேக்கி வைக்க தேக்கு மரத்தால் ஆன பெட்டியில் பணத்தை வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. இப்போது பெரும்பாலும் இரும்பாலான பீரோக்களை பயன்படுத்துகிறோம்.

இரும்பு சனி பகவானின் அம்சமாக விளங்குகிறது. சனி கிரகம் இரும்பு காரகத்துவத்தை கொண்டுள்ளதால் இரும்பாலான பொருட்களில் பணத்தை வைக்கும் பொழுது எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சனி பகவான் நீதிமானாக இருக்கக் கூடியவர் எனவே நாம் செய்த பாவங்களுக்கு உண்டான பலனை எப்படியாவது நம்மை அனுபவிக்க செய்து விடுவார். இரும்பாலான பெட்டியில் பணத்தை வைத்தால் வீண் விரயங்களை உண்டாக்கி விடுகிறார். எனவே நீங்கள் பீரோவை சரியான திசையில் முதலில் வைக்க வேண்டும்.

- Advertisement -

வடக்கு அல்லது வட கிழக்கு திசையில் வைப்பது குபேர சம்பத்தை உண்டாக்கும். இந்த இடத்தில் பீரோவை வைத்து அதில் நின்றக் கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் திருவுருவப்படம் ஒன்றை ஒட்டி வையுங்கள். நின்ற கோலத்தில் இருக்கும் மகாலட்சுமி ரொம்பவும் விசேஷமான ஒரு சக்தி வாய்ந்துள்ள படமாகும். இதை நீங்கள் பணம் வைக்கும் லாக்கர் பகுதிக்கு முன்பாக ஒட்டி வைக்கலாம் அல்லது உள்ளேயும் ஒட்டி வைக்கலாம். இரும்பால் ஆன பீரோவில் பணம் வைப்பவர்கள், அதை வைக்கும் பொழுது உள்ளே மரத்தாலான பெட்டியில் வையுங்கள்.

மரத்தாலான எந்த வகையான பொருளாக இருந்தாலும் சரி, தேக்கு மரப்பெட்டி தான் வாங்க வேண்டும் என்கிற அவசியமில்லை. மர டப்பாக்கள், மர கிண்ணங்கள் போன்றவற்றில் கூட நீங்கள் பணத்தை போட்டு வைக்கலாம். அதே போல பீரோவை எப்பொழுதும் வாசமாக பார்த்துக் கொள்ள வேண்டும். மகாலட்சுமி நிறைந்திருக்க பீரோவில் சிறிதளவு பச்சை கற்பூரம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு, மல்லி பூக்கள், துளசி இலைகள், மாதுளைக்குச்சி போன்றவற்றையெல்லாம் போட்டு வைக்கலாம். இவை எல்லாம் மகாலட்சுமியின் அம்சம் நிறைந்தவை, எளிதாக பணத்தை ஈர்க்கக்கூடிய அற்புதமான பொருட்கள் ஆகும்.

- Advertisement -

அதே போல பீரோவில் நகை வைக்கும் பொழுதும் ஜாக்கிரதையாக வைக்க வேண்டும். நகையை இரும்பின் மீது நேரடியாக நீங்கள் வைக்கக் கூடாது. ஒரு பட்டு துணியில் வைத்து நகையை பத்திரமாக பீரோவில் வைக்க வேண்டும். நகை இருக்கும் இடத்தில் ஒரு சிறு துண்டு படிகாரத்தை போட்டு வையுங்கள். துருப்பிடித்த இரும்பு பீரோவை ஒருபோதும் பயன்படுத்த வேண்டாம். இது நம்மிடம் இருக்கும் பணத்தை அழித்துவிடும் ஆற்றல் கொண்டது எனவே பீரோ பழையதாக இருந்தால் அதை துருப்பிடிக்காதவாறு நீங்கள் பார்த்து பராமரித்து வர வேண்டும்.

முடிந்தவரை சிறியதாக இருந்தாலும், மர பீரோவை பயன்படுத்துவது நல்லது. முடியாத பட்சத்தில் பீரோவை இப்படி நாம் நமக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்கலாம். பீரோவிற்கு முன்புறம் பச்சை நிற புடவை கட்டிய கஜலட்சுமி சிலை அதாவது ரெண்டு புறமும் யானை இருக்கும் நடுவில் லக்ஷ்மி தேவி இருப்பாள். இந்த லட்சுமியை கஜலட்சுமி என்பார்கள். இத்தகைய கஜலட்சுமி உருவம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இதை முன்புறமாக ஒட்டி வைக்கும் பொழுது செல்வ சேர்க்கை உண்டாகும் என்பது நியதி!

- Advertisement -