- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வரவை அதிகரிக்கும் ஏலக்காய் மாலை

பண வரவை அதிகரிக்கும் ஏலக்காய் மாலை

- Advertisement -

இந்த உலகத்தில் நாம் உயிர் வாழ்வதற்கு நமக்கு முக்கியமாக தேவைப்படக்கூடிய ஒன்று பணம் தான். அதனால் தான் பலரும் இந்த பணத்திற்கு பின்னால் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். எவ்வளவு சம்பாதித்தாலும் போதும் என்ற மனநிறைவு ஏற்படாமல் தங்களால் இயன்ற அளவு பணத்தை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறார்கள். பணத்திற்கு அந்த அளவிற்கு இந்த உலகத்தில் முக்கியத்துவம் இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை பல தேவைகளுக்காக நாம் பயன்படுத்திக் கொள்கிறோம்.

அதிகளவில் பணத்தை வைத்திருப்பவர்களுக்கு தங்களுக்கு தேவைகள் ஏற்படும் பொழுதெல்லாம் அந்த பணத்தை உபயோகப்படுத்திக் கொள்வார்கள். ஆனால் பணவரவு குறைவாக இருப்பவர்களோ, பணத்தை சேமித்து வைக்காமல் இருப்பவர்களோ அவர்களுடைய தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய சூழ்நிலையில் பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மகாலட்சுமி தாயாரை எந்த முறையில் வழிபாடு செய்தால் அவர்களுடைய பண தேவைகள் பூர்த்தியடையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்கும் ஏலக்காய் மாலை

பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவள் மகாலட்சுமி தாயார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் பலரும் மகாலட்சுமி தாயாரை வெள்ளிக்கிழமை அன்று வழிபாடு செய்வார்கள். வெள்ளிக்கிழமை என்பது சுக்கிரனுக்குரிய கிழமை என்பதால் சுக்கிரனுக்கும் மகாலட்சுமிக்கும் உரிய வழிப்பாடாக அந்த வழிபாடு அமையும். அந்த நேரத்தில் நாம் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதற்கு போதுமான அளவு பணவரவு வேண்டும் என்று ஒரு சில வழிபாட்டு முறைகளை பின்பற்றும் பொழுது மகாலட்சுமி தாயாரின் அருளால் அந்த பண தேவைகள் அனைத்தும் நிறைவேறும் என்று கூறப்படுகிறது.

இந்த வழிபாட்டை வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை செய்யலாம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்வது என்பது மிகவும் சிறப்பு. கண்டிப்பான முறையில் வீட்டில் மகாலட்சுமி தாயாரின் படம் என்பது இருக்கும். மகாலட்சுமி தாயாரின் படத்தை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு என்று தனியாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு நெய்வேத்தியமாக சுத்தமான காய்ச்சிய பசும்பால் ஒரு கிண்ணத்தில் வைத்து விடுங்கள். அதே போல் வெல்லத்தையும் ஒரு சிறிய கிண்ணத்தில் வைத்து நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மகாலட்சுமி தாயாருக்கு சிவப்பு நிற மலர்களை சூட்ட வேண்டும். சிவப்பு நிற மலர்கள் கிடைக்காத பட்சத்தில் மல்லி, முல்லை போன்ற வாசனை மிகுந்த மலர்களையும் சூட்டலாம். இப்பொழுது இவை அனைத்தையும் தயார் செய்து வைத்து விட்டு நம்முடைய பரிகாரத்தை நாம் செய்ய ஆரம்பிப்போம். இதற்கு சிவப்பு நிற துணி வேண்டும். சிவப்பு நிற நூல் வேண்டும். பச்சையாக இருக்கக்கூடிய பெரிய ஏலக்காய் வேண்டும்.

இப்பொழுது சிவப்பு நிற நூலை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த நூலில் ஐந்து முடிச்சுகள் போடுங்கள். ஒவ்வொரு முடிச்சும் தனித்தனியாக இருக்க வேண்டும். ஒன்றுடன் ஒன்று சேர்ந்து இருக்கக் கூடாது. 5 முடிச்சுகள் போட்டு முடித்துவிட்டு ஒரு ஏலக்காயை எடுத்து பூ கட்டுவது போல் கட்டிக் கொள்ளுங்கள். மறுபடியும் தனித்தனியாக 5 முடிச்சுகள் போட்டு ஒரு ஏலக்காயை எடுத்து கட்ட வேண்டும். இப்படி ஐந்து முறை ஐந்து முடிச்சுகள் போட வேண்டும். ஐந்து ஏலக்காயை கட்ட வேண்டும்.

- Advertisement -

கட்டி முடித்த பிறகு ஒரு சிறிய தட்டை எடுத்து அந்த தட்டின் மேல் ஒரு சிவப்பு நிற துணியை விரித்து அதற்கு மேல் நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த ஏலக்காய் மாலையை வைத்து மகாலட்சுமி தாயாருக்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்பொழுது மகாலட்சுமி தாயாருக்கு சந்தன ஊதுபத்தியை காட்ட வேண்டும். மகாலட்சுமி தாயாருக்கு காட்டும் பொழுதே நாம் கட்டிய அந்த மாலைக்கும் காட்ட வேண்டும். பிறகு சாம்பிராணி தூபம் போட்டு உங்களுடைய தேவைகள் என்னவோ எதற்காக பணம் தேவைப்படுகிறது அந்த தேவைகளை மகாலட்சுமி தாயாரிடம் கூற வேண்டும்.

நியாயமான தேவையாக இருக்கும் பட்சத்தில் தான் இந்த வழிபாடு பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு வழிபாடு செய்து முடித்துவிட்டு இந்த சிவப்பு துணியை அப்படியே சிவப்பு நூலால் கட்டி எந்த இடத்தில் நீங்கள் பணம் வைப்பீர்களோ
அந்த இடத்தில் வைக்க வேண்டும். பிறகு அந்த இடத்திற்கும் சாம்பிராணி தூபம் காட்ட வேண்டும். பூஜையை நிறைவடைந்துவிட்டது. வெள்ளிக்கிழமை இந்த பூஜையை செய்தவர்களாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை இந்த மூட்டையை எடுத்து வந்து மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்து வழிபாடு செய்து விட்டு ஊதுபத்தி சாம்பிராணி தூபம் அனைத்தும் காட்டி முடித்துவிட்டு திரும்பவும் கொண்டு போய் பணம் இருக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும்,

இதையும் படிக்கலாமே:

இப்படி தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பட்டு நம்முடைய நியாயமான பண தேவைகள் பூர்த்தியடையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

சற்று முன்