- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணத்தை ஈர்க்க, தீராத கடன் தீர, தொழிலில் லாபம் பெற இந்த 1 பொருள் மட்டும்...

பணத்தை ஈர்க்க, தீராத கடன் தீர, தொழிலில் லாபம் பெற இந்த 1 பொருள் மட்டும் போதும்.

- Advertisement -

“கருங்குரங்கின் குருதி எடுத்து உலகத்தை ஈர்க்கலாம், நாடாளும் மன்னனையும் நம் காலடியில் வீழ்த்தலாம்”. என்பது சித்தர்களின் கூற்று. இதன் அர்த்தம் என்னவென்றால் மிளகினையே இங்கு கருங்குரங்கு என்று சித்தரித்து உள்ளனர். மிளகினை இடித்து எடுக்கும் சாறையே குருதி என்றும் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு உலகத்தையே ஈர்க்க வல்ல சக்தி படைத்த மிளகை பயன்படுத்தி பணவரவை ஈர்க்கவும், தீராத கடன் தீரவும், தொழிலில் லாபம் பெறவும் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ள போகின்றோம்.

Milagu-1

ஐந்து மிளகு இருந்தால் போதும் பகைவர் வீட்டிலும் விருந்து உண்ணலாம் என்ற சான்றோர்கள் சொல்ல கேட்டிருக்கிறோம். பகைவர் வீட்டு விருந்தில் விஷம் வைத்திருந்தாலும் கூட 5 மிளகு இருந்தால் போதும். அதன் மருத்துவகுணம் விஷத்தினை அழித்து விடும் என்பதுதான் இதன் பொருளாகும். அதுமட்டுமல்லாமல் ஒருவரைத் தன் வசப்படுத்தும் மருந்தின் ஆற்றலையும் அழிக்க வல்ல சக்தி படைத்தது இந்த மிளகு.

- Advertisement -

எனவே தான் முந்தைய காலத்திலெல்லாம் விருந்து என்றாலே அதன் இறுதியில் மிளகு சேர்த்து செய்யக்கூடிய ரசம் கண்டிப்பாக இருக்கும். ஏனெனில் இந்த மிளகு சேர்த்த ரசத்தினை இறுதியாக சாதத்துடன் சேர்த்து சாப்பிட அந்த உணவில் எதிர்மறை ஆற்றல் இருந்தாலும் அவை மிளகின் நேர்மறை ஆற்றலில் அழித்துவிடும். அவ்வாரான சிறப்புவாய்ந்த இந்த மிளகினை வைத்து சில பூஜைகள் செய்து வர நமக்கு பல வழிகளில் நன்மைகள் கிடைக்கிறது.

milagu-rasam2

கடனை தீர்க்கும் மிளகு பரிகாரம்:
ஒருகைப்பிடி வால்மிளகு, ஒரு கைப்பிடி சில்லறை காசு மற்றும் புற்றுமண் அதாவது புற்றினை சுற்றியிருக்கும் அடிப்புறத்திலிருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை மூன்றையும் ஒரு சிவப்புத் துணியில் மூட்டையாக கட்டி, அதனை ஒரு மண் பானையில் வைத்து, பிறகு பூஜை அறையில் வைத்து விட்டு, எனது கடன்கள் அனைத்தும் தீர்ந்து, கஷ்டங்கள் அனைத்தும் மறைந்து, சுகமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பின்னர் அதற்கு கற்பூர ஆரத்தி காட்டி பூஜை செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களின் கடன் பிரச்சினைகள் கண்ணுக்குத் தெரியாமல் கரைய ஆரம்பித்து விடும்.

- Advertisement -

பணத்தை ஈர்க்கும் மிளகு பரிகாரம்:
சமையலுக்கு பயன்படுத்தும் மிளகினை சிறிதளவு எடுத்து, அதனை நன்றாக உடைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனுடன் பச்சை கற்பூரம் மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் கார்போ அரிசி இவை மூன்றையும் ஒன்றாக சேர்த்து, இறுதியாக இவற்றுடன் ஏதேனும் ஒரு சிறிய தங்க நகையை சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவை அனைத்தையும் மூட்டையாகக் கட்டி, வீட்டில் நீங்கள் பணம் அல்லது நகை வைக்கும் இடத்தில் வைத்து விட்டால் போதும். சொர்ணத்தை உங்களிடம் பல மடங்கு ஈர்த்துக் கொடுக்கும் சக்தி இதற்கு உள்ளது. பணம் பல வழிகளில் உங்களை வந்தடையும்.

Govt job

தொழிலில் லாபம் பெற மிளகு பரிகாரம்:
108 கருமிளகு, 108 வால்மிளகு இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் முடிச்சுப் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதனை நீங்கள் வேலை செய்யும் அலுவலகத்திலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு வைப்பதற்கு இடம் இல்லை என்றால் உங்கள் கைபையிலேயே வைத்துக் கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலம் உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழிலில் லாபம் உண்டாகும். இவ்வாறு தொழில் சம்பந்தமான நன்மைகளை உங்களிடம் ஈர்த்து கொடுக்கும் வல்லமை இந்த மிளகிற்கு உள்ளது.

சற்று முன்