சகல செல்வத்தையும் பெற குபேர தீபம்

kuberar vetrilai dheepam
- Advertisement -

ஒருவர் வாழ்க்கையில் சகல செல்வத்தையும் பெற்று சீரும் சிறப்புமாக வாழ வேண்டுமென்றால் தெய்வங்களின் அனுகிரகம் நிச்சயமாக தேவை. அதிலும் பணத்தையும், பொன்னையும், பொருளையும் வாரி வழங்கக் கூடிய தெய்வங்களான மகாலட்சுமி தாயார் குபேரரின் போன்றோரின் ஆசிகளை பெறுவது மிக மிக முக்கியம்.

இந்த இருவரின் அருளும் ஒருவருக்கு ஒரு சேர கிடைத்து விட்டால் அவர்கள் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் சேர்ந்து கொண்டே இருக்கும். அந்த வகையில் அன்னையை வணங்குவதற்கான பல வழிபாட்டு முறைகளை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போது குபேரன் அருள் ஆசி எப்படி பெற வேண்டும் என்பதை பற்றி ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குபேரரின் அருளாசி பெற நிலை வாசல் தீபம்

இந்த தீபத்தை நீங்கள் வியாழகிழமை ஏற்ற தொடங்க வேண்டும். அதுவும் குபேர வழிப்பாட்டிற்கு உகந்த மாலை வேளையில் ஏற்றுவது சிறந்தது. அப்படி ஏற்ற முடியாதவர்கள் மட்டும் வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலை உங்களுக்கு எந்த நேரம் உகந்ததோ அந்த நேரத்தில் ஏற்றலாம் தவறில்லை.

இந்த தீப வழிபாடு செய்வதற்கு கடுகு எண்ணெய் அல்லது இலுப்பை எண்ணை இந்த இரண்டில் ஏதாவது ஒன்றைக் கொண்டு தான் ஏற்ற வேண்டும். இலுப்பை எண்ணெயில் குபேரர் வாசம் செய்வதாக ஐதீகம். அதே போல் கடுகு எண்ணெயில் மகாலட்சுமி தாயார் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே இரண்டில் ஏதாவது ஒன்றைக் கொண்டு தீபம் ஏற்றுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை நிலை வாசலில் தான் ஏற்ற வேண்டும். அதற்கு இரண்டு வெற்றிலை எடுத்து அதன் மேல் சிறிதளவு தேனை தடவிக் கொள்ளுங்கள். இப்பொழுது இரண்டு அகல் விளக்கை எடுத்து சுத்தம் செய்து மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து எண்ணெய் ஊற்றிக் கொள்ளுங்கள். பஞ்சித்திரியை இரண்டாக எடுத்து ஒரே திரியாக போட்டு விடுங்கள்.

இப்போது நிலை வாசலில் இரண்டு புறமும் வெற்றிலையை வைத்து விட்டு அதன் மேல் நீங்கள் தயார் செய்த விளக்கை வைத்து எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். இந்த தீபம் ஏற்றும் போது குபேரர் மகாலட்சுமி தாயாரரை நினைத்து உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும் பணத்தடைகள் பண பிரச்சனைகள் அனைத்தும் நீங்க செல்வ வளம் பெறுக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த தீபத்தை 48 நாட்கள் தொடர்ந்து ஏற்ற வேண்டும். தினமும் தீபம் ஏற்றும் போதும் விளக்கை சுத்தம் செய்து புதிதாக எண்ணெய் ஊற்றி ஏற்றுங்கள். அதே போல் வெற்றிலையும் தினமும் மாற்ற வேண்டும். தீப வழிபாடு செய்யும் 48 நாட்களும் அசைவத்தை தவிர்ப்பது மிக மிக நல்லது. அசைவம் சாப்பிட்டு தீபம் ஏற்றும் போது அதற்கான பலன் குறைவாக கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டம் தேடி வர மாதங்கி வழிபாடு

பெண்கள் மாதவிலக்கான சமயத்தில் வீட்டில் இருக்கும் மற்றவர்கள் ஏற்றலாம் இல்லையென்றால் அவர்களுக்கான அந்த காலம் முடிந்த பிறகு தீபத்தை தொடர்ந்து ஏற்றலாம் தவறில்லை. இந்த தீப வழிபாட்டு முறையானது சகல செல்வங்களையும் நம் வீடு தேடி வர வைக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த தீப வழிபாட்டை செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -