பவுர்ணமியில் இந்த மரத்திற்கு தண்ணீர் ஊற்றினால் என்ன நடக்கும்? 1 ரூபாய் இருந்தால் போதும் பண கஷ்டம் தீருமா?

arasa-maram-arisi

எவ்வளவு தான் பணம் சம்பாதித்தாலும் அதற்கேற்ற அளவிற்கு செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். அப்படியான சூழ்நிலையில் எதிர்காலத்தைப் பற்றிய பயமும் வந்து விடும். போதிய இருப்பு இல்லை என்றால் செலவு செய்வதற்கும் மனம் வருவதில்லை. இப்படி பார்த்து பார்த்து தான் செலவு செய்ய வேண்டி இருக்கிறது. பண விஷயத்தில் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பவர்கள் ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ள இந்த எளிய பரிகாரங்களை பின்பற்றி பாருங்கள். நிச்சயம் உங்களுடைய பணப்பிரச்சனை தீர்வதற்கு இந்த பரிகாரங்கள் வழி சொல்லும். என்னென்ன பரிகாரங்கள் செய்யலாம்? என்பதை இப்பதிவில் இனி தொடர்ந்து பார்ப்போம்.

money

முதலாவதாக பௌர்ணமி தினத்தில் காலை வேளையில் இந்த பிரபஞ்சத்தில் தெய்வீக சக்தி முழுவதும் வியாபித்து இருக்கும். அந்த சூழ்நிலையில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் அரச மரத்திற்கு மகாலட்சுமிக்கு உரிய மந்திரத்தை உச்சரித்து தண்ணீர் ஊற்றி வாருங்கள். பின்னர் வீட்டிற்கு வந்ததும் பூஜை அறையில் விளக்கு ஏற்றி அன்றாட பூஜைகள் செய்யவும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் நீங்கள் செய்து வந்தால் பண விஷயத்தில் இருக்கும் பிரச்சனைகள், சிக்கல்கள் அவிழ்ந்து விடும்.

மற்றொரு பரிகாரமாக சனிக்கிழமையில் இதை செய்து பாருங்கள். சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயர், சனி பகவான், பெருமாள் போன்றவர்களுக்கு பரிகாரங்கள் செய்ய ஏற்ற கிழமையாக இருக்கிறது. இந்நாளில் பெருமாளுக்கு உரிய துளசி இலைகளை 5 என்ற எண்ணிக்கையில் பறித்து வைத்துக் கொள்ளுங்கள். பூஜை அறையில் துளசிகளை வைத்து விளக்கு ஏற்றிய பின் சமையலறைக்கு சென்று நீங்கள் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் துளசி இலைகளை போட்டு விடவும். இவ்வாறு செய்வதால் வீட்டில் தானியங்களுக்கும், செல்வத்திற்கும் பஞ்சம் இல்லாத நிலை உண்டாகும்.

thulasi chedi

அதே சனிக்கிழமை அன்று ஆனால் வளர்பிறையாக இருக்கக்கூடிய நாளில் மட்டும் ஒரு சிகப்பு துணியில் ஒரு ரூபாயை முடிந்து வைத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய பூஜை அறையில் உங்களுடைய இஷ்ட தெய்வத்திற்கு காணிக்கையாக செலுத்துகிறேன் என்று வேண்டிக் கொண்டு அந்த படத்திற்கு அல்லது விக்ரகத்திற்கு பின்னால் வைக்கவும். 41 நாட்கள் வரை தொடர்ந்து உங்களுடைய பிரச்சினை தீர இஷ்ட தெய்வத்திடம் மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

41 நாட்கள் வரை தினமும் விளக்கேற்ற வேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டும். தீப, தூப ஆரத்தி காண்பிப்பது உங்களுடைய விருப்பம். ஆனால் விளக்கேற்றுவது நிச்சயம் செய்யுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வர உங்களுடைய வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம். உங்களுடைய வேண்டுதல் நிறைவேறுகிறதோ, இல்லையோ 41 நாட்கள் முடிந்த பின் அந்த காணிக்கையை உண்டியலில் செலுத்தி விடுங்கள். நீங்கள் எந்த தெய்வத்திற்கு வேண்டுதல் வைத்தீர்களோ அந்த தெய்வத்தின் சன்னிதானத்தில் காணிக்கை செலுத்துவது முறை ஆகும்.

one rupee

இப்படி செய்து வர பணப்பிரச்சனை விரைவில் தீரும். பணப் பிரச்சனை மட்டுமல்ல உங்களுடைய வீட்டில் இருக்கும் பொருளாதார சிக்கல்களும் தீர்ந்து விடும். தொழில், வியாபாரம், உத்தியோகம் என்று நீங்கள் எதை செய்து வந்தாலும் அதில் நல்ல வருமானம் கிடைக்கக் கூடிய சூழ்நிலைகளை உருவாக்கும். நம்பிக்கையோடு இவைகளை செய்து செல்வ வளத்தை அதிகரிக்க செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் இந்த மரம் இருந்தால் கார்த்திகை மாதத்தில் வீட்டிற்கு வருபவர்களுக்கு இதை தானமாக கொடுத்து அனுப்புங்கள் கோடான கோடி பலன்கள் கிடைக்கும்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.