- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபணம் சேர பெண்கள் பின்பற்ற வேண்டியவை

பணம் சேர பெண்கள் பின்பற்ற வேண்டியவை

- Advertisement -

புடவையை வாங்கி கட்டி கொள்கிறார்களோ இல்லையோ, ஆனால் புடவையை வாங்கி பீரோவில் அடுக்கி வைக்க கூடிய மோகம் மட்டும் பெண்களிடத்தில் இன்னும் குறையவே இல்லை. வீட்டில் தினமும் உடுத்திக் கொள்ள பயன்படுத்துவதோ இரண்டே இரண்டு நைட்டி. ஆனால் பீரோவில் 100 புடவை இருக்கும்.

அதில் 20 புடவையை வாங்கி ஒரு முறை கூட கட்டாமலேயே மடிப்பு கலையாமல் அப்படியே வைத்திருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு இருக்கும் இந்த பழக்கம் தவறு என்று சொல்கிறது சாஸ்திரம். பீரோவில் கட்டாத புதுப்புடைவைகள் மடிப்போடு அடுக்கி வைக்கப்பட்டு இருந்தால் என்ன கஷ்டம் வரும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

புது புடவையை வாங்கி எந்த ஒரு பயனும் இல்லாமல் அப்படியே ஒரே இடத்தில் தேக்கி வைத்திருந்தால், உங்கள் வீட்டிலும் பணவரவு அப்படியே நிற்கும் என்று சொல்கிறார்கள். தேங்கி நின்றால் நல்லது தானே. நம் வீட்டிலேயே பணம் இருக்கும் என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். மகாலட்சுமி ஆகப்பட்டவள் ஒரு சுழற்சியில் இருந்து கொண்டே இருந்தால் தான் நம் குடும்பத்திற்கு நல்லது நடக்கும்.

பீரோவில் வைத்த ஆயிரம் ரூபாய் அப்படியே இருக்கிறது. செலவும் ஆகவில்லை, வருமானமும் பெருக வில்லை அது நல்லதா. இதுபோல பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. வாங்கிய புது புடவையை ஒரு முறையாவது பெண்கள் கட்டி பிறகு அவிழ்த்து அதை மடித்து வைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அப்போது உங்களுடைய வீட்டில் மகாலட்சுமி ஆக்டிவா இருப்பாங்க. என்னடா இது புது கதையா இருக்குன்னு யோசிக்காதீங்க. உங்க வீட்டில் பணம் கஷ்டம் இருக்கு பீரோவில் புடவை வாங்கியது கட்டாமல் இருக்கு எனும்போது அதை பிரித்து கட்டிக்கிட்டு கோவிலுக்கு போயிட்டு வந்து அந்த புடவையை கழட்டி மீண்டும் அடித்து வைத்து பாருங்கள்.

என்ன நடக்கிறது என்பது உங்களுக்கே புரியும். அடுத்தபடியாக பீரோவில் இப்படி நீண்ட நாட்களாக கட்டாமல் அடுக்கி வைத்திருக்கும் புடவையில் ஒரு கெட்ட வாடை வீசும். கட்டாத புடவை என்பதை அந்த வாசத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

அந்த வாசம் உங்கள் புடவையில் வீசக்கூடாது. உங்கள் விருப்பம் தான். ஏதாவது ஸ்பிரே அடித்து உங்கள் புடவைகளை வாசமாக வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மகாலட்சுமி அம்சம் பொருந்திய பண வசியத்தை கொடுக்கக்கூடிய மரிக்கொழுந்து வாங்கி ஒரு வெள்ளை துணியில் கட்டி பீரோவில் புடவைகளுக்கு இடையே சொருக்கி வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: கோவிலுக்கு செல்லும்போது பெண்கள் எந்த புடவை கட்டலாம்?

உங்கள் புடவை முழுவதும் மரிக்கொழுந்து வாசம் நிறைந்திருக்கும். பணம் வசியம் ஏற்படும். மேலே சொன்ன ஆன்மீகம் சார்ந்த விஷயங்கள் பெண்களுக்கு பயனுள்ளபடி அமையும் என்ற நம்பிக்கையில் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்