கோவிலுக்கு செல்லும்போது பெண்கள் எந்த புடவை கட்டலாம்?

temple
- Advertisement -

பெண்கள் என்றால் மகாலட்சுமி அம்சம் கொண்டவர்கள். அந்த மகாலட்சுமி அம்சம் பெண்களுக்கு எப்போது முழுமையாக கிடைக்கும் தெரியுமா. பெண்கள் புடவை அணிந்து கொண்டு வலம் வரும்போது தான். ஆனால், இன்று புடவை கட்டுவதே பெண்களுக்கு ரொம்ப ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. சரி வீட்டில் புடவை கட்டவில்லை என்றாலும் பரவாயில்லை.

கோவிலுக்கு போகும் போதாவது அந்த புடவையை கட்டிக்கிட்டு போங்க. அப்படின்னு பெரியவர்கள் சொல்லுவார்கள்‌. அதிலும் குறிப்பாக இந்த பட்டுப்புடவையை கட்டிக் கொண்டு கோவிலுக்கு போங்க என்று சில பேர் சொல்லி நாம கேள்விப்பட்டிருப்போம். இதுக்கு பின்னாடி என்ன அர்த்தம் மறைந்திருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா. இதோ ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவில் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

வேண்டுதல் நிறைவேற பெண்கள் செய்ய வேண்டியது

பொதுவாகவே கோவிலுக்கு வரக்கூடிய பக்தர்கள் ஒவ்வொரு கோரிக்கையை சாமிகிட்ட வைப்பாங்க. அதாவது எல்லோருடைய பாசிட்டிவ் எனர்ஜியும், நெகட்டிவ் எனர்ஜியும் அந்த இடத்தில் சேர்ந்து இருக்கும். ஒவ்வொரு மனிதர்களுடைய என்ன ஓட்டும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கருவறைக்குள் செல்லும்போது இந்த நெகட்டிவ் எனர்ஜி நம்மை எதுவுமே செய்யாது.

ஆனால் இப்போதெல்லாம் சாமியை பார்ப்பதற்கே ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் ஆகிறது. வரிசையில் நிற்கின்றோம். அந்த சமயத்தில் நம் பக்கத்தில் இருப்பவர்கள் என்ன வேண்டிக் கொள்கிறார்கள் என்பது நமக்கு தெரியாது. நம்மை சுற்றி இருப்பவர்கள் என்னென்ன கஷ்டத்திற்கு எல்லாம் இறைவனிடம் பிரார்த்தனை வைக்கிறார்கள் என்பது தெரியாது.

- Advertisement -

அதில் சில பாசிட்டிவ் எனர்ஜியும் இருக்கும், சில நெகட்டிவ் எனர்ஜியும் இருக்கும். அந்த நெகட்டிவ் எனர்ஜி நம்மை தாக்கி விடக்கூடாது என்பதற்காகத்தான் பெண்களை பட்டு புடவை அணிந்து கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள், ஆண்களாக இருந்தால் பட்டு வேட்டி சட்டை அணிய வேண்டும் என்று சொல்கிறார்கள்.

பட்டுக்கு எப்போதுமே இந்த நெகட்டிவ் எனர்ஜியை விரட்டி அடிக்கக்கூடிய சக்தி இருக்கிறது. நம் உடம்பில் பட்டு இருந்தால் நம்மிடம் எந்த ஒரு நெகட்டிவ் எனர்ஜியும் வந்து சேராது என்பதற்காகத்தான் கோவிலுக்கு செல்லும்போது பட்டுப் புடவை உடுத்தி கொள்ள வேண்டும் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

- Advertisement -

சரி அடுத்தபடியாக இந்த பெண்கள் முந்தானையை எப்போதுமே கையில் பிடித்து வைத்துக் கொண்டுதான் நமஸ்காரம் செய்யணும் பிரசாதம் வாங்கணும் என்ற ஒரு சாஸ்திரமும் நம்முடைய இந்து மதத்தில் உள்ளது. அது ஏன் தெரியுமா? இந்த முந்தானை என்பது ஒரு பெண்ணின் கணவரை குறிப்பதாக சொல்லப்பட்டு உள்ளது.

நீங்கள் கோவிலுக்கு செல்லும்போதும் சரி, மங்களகரமான பொருட்களை பிரசாதமாக வாங்கும் போதும் சரி, உங்கள் கணவராக சொல்லப்பட்டுள்ள இந்த முந்தானையை உங்கள் கையில் வைத்துக் கொண்டு வாங்கினால் உங்களுக்கு அதன் மூலம் நிறைய நல்லது நடக்கும். அதேபோல நமஸ்காரம் செய்யும் போதும் முந்தானையை கையில் பிடித்துக் கொண்டுதான் நமஸ்காரம் செய்யணும் முந்தானையை இங்கும் அங்கும் ஆக அலைய விடக்கூடாது.

இதையும் படிக்கலாமே: வற்றாத பண வரவுக்கு மகாலட்சுமி தாயார் வழிபாடு

அடுத்தவர்கள் கால் படும்படி கீழே விடக்கூடாது என்றும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இப்போது புரிகிறதா? இனி காரணம் தெரியாமல் நீங்கள் செய்த இந்த நல்ல விஷயங்களை, காரணத்தை தெரிந்து கொண்டு செய்யுங்கள். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கும் இந்த ஆன்மீகம் நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுங்கள்.

- Advertisement -