மாசி மாதம் என்பதே மிகவும் சிறப்புக்குரிய மாதம். அந்த மாதத்தில் வரக்கூடிய ஒவ்வொரு திதியும் அதற்குரிய பலனை தரும். அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது. அனைத்து மாதங்களிலும் வரக்கூடிய ஏகாதேசி நாளன்று பெருமாளை நாம் வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாகும். அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி நாளன்று பெருமாளை நாம் வழிபாடு செய்வதன் மூலம் பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் நீங்கும். அந்த வழிபாட்டை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் சேர பெருமாள் மந்திரம்
ஒவ்வொரு மாதத்திலும் வரக்கூடிய ஏகாதசி நாள் என்பது பெருமாளுக்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கு ஏற்றார் போல் ஒவ்வொரு விதமான பலன்களை அனுபவிக்க முடியும் என்றும் பெருமாளை முழு மனதோடு நம்பி விரதம் இருந்து வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளோடு மகாலட்சுமி தாயாரின் அருளும் கிடைக்கும் என்றும் அதன் மூலம் செல்வ வளம் பெருகும் என்றும் நம்முடைய முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். அந்த வகையில் மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி நாள் அன்று பெருமாளை வழிபாடு செய்யும் முறையை பற்றி இப்பொழுது பார்ப்போம்.
மாசி மாதத்தில் வரக்கூடிய ஏகாதசி என்பது பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று வருகிறது. அன்று காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துக் கொள்ள வேண்டும். வீட்டு பூஜை அறைக்கு சென்று அங்கு இருக்கக்கூடிய பெருமாளின் படத்தையோ சிலையையோ சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கில் நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
அவருக்கு நெய்வேத்தியமாக காய்ச்சாத பசும்பாலை வைக்க வேண்டும். பசும்பால் கிடைக்காத பட்சத்தில் பாக்கெட் பாலை கூட வைத்துக் கொள்ளலாம். காய்ச்சக் கூடாது. இப்பொழுது பெருமாளை முழு மனதோடு நினைத்துக் கொண்டு வடக்கு பார்த்தவாறு பெருமாளின் இந்த மூன்று மந்திரங்களை 27 முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரித்து முடித்த பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.
தீபம் குறைந்தது அரை மணி நேரமாவது எரிய வேண்டும். பிறகு காய்ச்சாத அந்த பசும்பாலை எடுத்து வீட்டில் இருக்கக்கூடிய அனைவரும் பிரசாதமாக பருக வேண்டும். இந்த வழிபாட்டை ஒவ்வொரு மாதமும் வரக்கூடிய வளர்பிறை தேய்பிறை ஏகாதேசி திதியில் செய்வதன் மூலம் அனைத்து விதமான செல்வங்களையும் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
மந்திரம்
“ஓம் நமோ நாராயணாய நமஹ
ஓம் கோவிந்தாய நமஹ
ஓம் தனாய நமோ நம”
இதையும் படிக்கலாமே:கேட்டதை கொடுக்கும் கொப்பரை தீபம்
முழு மனதோடு பெருமாளை நம்பி பெருமாளுக்கு உரிய திதியான ஏகாதசி திதி அன்று பெருமாளின் இந்த மந்திரங்களை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு பெருமாளின் அருளால் செல்வவளம் பெருகும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் நீங்கும் பணம் சேர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.