- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகோடீஸ்வர யோகத்தைத் தரும் தீப பரிகாரம்

கோடீஸ்வர யோகத்தைத் தரும் தீப பரிகாரம்

- Advertisement -

இன்றைய காலகட்டத்தில் பணம் இருந்தால் மட்டுமே சமூகத்தில் அந்தஸ்துடனும் கௌரவத்துடனும் வாழ முடியும் என்ற சூழ்நிலை உருவாகி விட்டது. பணம் அத்தகைய ஒரு ஆட்சியைப் பிடித்து விட்டது என்றே சொல்லலாம். இந்த பணத்தை நாம் பெற எத்தனை பாடுபட வேண்டியது என்பதை எல்லாம் யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்த பணம் நம்மிடம் தாராளமாக புழங்க வேண்டுமெனில் நம்முடைய உழைப்பு முயற்சியுடன் சேர்த்து சிலர் வழிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. அதில் ஒன்று தான் நாம் எப்போதும் செய்யும் வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயார் வழிபாடு. இப்படி செய்யக் கூடிய வழிபாட்டில் நாம் ஏற்றும் இந்த ஒரு தீபம் நம்முடைய செல்வ வளத்தை பெரும் அளவு மாற்றும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பண வரவை அதிகரிக்க சுக்கிர ஹோரை தீபம்

பண வரவு அதிகரிக்க வேண்டும் வீட்டில் செல்வ செழிப்பு அதிகரிக்க வேண்டும் என்றால் அனைவருக்கும் தெரிந்த ஒன்று மகாலட்சுமி தாயாரை வழிபட வேண்டும் என்பது. வெள்ளிக்கிழமையில் இதை செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம். அதே நேரத்தில் வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானுக்கும் மிகவும் உகந்த நாள்.

சுக்கிர பகவானுக்கு அதி தேவதையே மகாலட்சுமி தாயார் தான். ஆகையால் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் செய்யக்கூ டிய இந்த தீப பரிகாரமானது சுக்கிரனின் அருளையும் மகாலட்சுமி தாயாரின் அனுகிரகத்தையும் ஒருசேர பெற்று தரும் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அந்த தீப பரிகாரத்தை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்கு கருப்பு நிற வெந்தயம் தேவை. அடுத்து மஞ்சள் நிற துணி, நெல்மணி, ஏலக்காய், நெய், பஞ்சுத்திரி, இவை எல்லாம் நீங்கள் முதல் மட்டும் நீங்கள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்து விடுங்கள். இந்த பரிகாரத்தை நீங்கள் பூஜை அறையில் தான் செய்ய வேண்டும்.

நீங்கள் வாங்கி வைத்திருக்கும் வெந்தயத்திலிருந்து சிறிதளவு எடுத்து மஞ்சள் நிற துணியில் சேர்த்து சிறிய மூட்டையாக கட்டிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு பெரிய தாம்பாள தட்டில் நெல்மணிகளை பரப்பி விடுங்கள். அதன் பிறகு அதன் மேல் ஒரு சிறிய தட்டு வைத்து அதில் ஏலக்காயை பரப்பி விட்டு அந்த ஏலக்காணயை நீங்கள் தயார் செய்து வைத்த கருப்பு வெந்தயம் முடிச்சு வைக்க வேண்டும்.

- Advertisement -

இந்த தட்டை பூஜை அறையில் வைத்து விட்டு இந்த தட்டிற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அதன் மேல் அகல் விளக்கு வைத்து நெய் ஊற்றி பஞ்சி திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். இப்போது இந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்களுக்கு என்ன பண தேவையோ பண பிரச்சனையோ அது தீர வேண்டும் என்று மகாலட்சுமி தாயார் சுக்கிர பகவானிடம் மனதார பிரார்த்தனை செய்யுங்கள்.

இந்த நேரத்தில் உங்களுக்கு தெரிந்து மகாலட்சுமி அஷ்டோத்திரம், நாமங்கள், சுக்கிர பகவான் போற்றிகள் என எது தெரிந்தாலும் சொல்லுங்கள். எதுவும் தெரியவில்லை என்றாலும் ஓம் மகாலட்சுமி தாயே போற்றிஓம் என்ற இந்த ஒரு மந்திரத்தை மட்டுமாவது 108 முறை மனதார சொல்லுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இந்த முடிச்சு வெள்ளிக்கிழமை முழுவதும் பூஜை அறையில் இருக்கட்டும். சனிக்கிழமை காலை அந்த முடிச்சை மட்டும் எடுத்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நீங்கள் பணம் புழங்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இதே போல 18 வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். 18 வாரங்களும் இந்த வெந்தயம் முடிச்சை மட்டும் புதிதாக வைத்தால் போதும். நெல்மணியும், ஏலக்காயையும் பழையதையே மறுபடியும் பயன்படுத்தலாம்.

பணம் வைக்கும் இடத்தில் வைக்கும் இந்த கருப்பு வெந்தயம் முடிச்சு மாற்ற வேண்டியது இல்லை. அது அப்படியே இருக்கட்டும் நீங்கள் தொடர்ந்து அங்கே வைத்துக் கொண்டே வரலாம். எப்போது உங்களுக்கு அது நிறம் மாறி விட்டது என்று தோன்றுகிறதோ அப்போது கால் படாத இடத்தில் போட்டு விட்டு இதே போல வழிபாடு செய்த பிறகு வைத்துக் கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: பணவரவை அதிகரிக்க மகாலட்சுமி மந்திரம்

இந்த வழிபாட்டுடன் செய்யக்கூடிய பரிகாரம் நல்ல ஒரு பணவரவை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. நம்பிக்கை இருப்பவர்கள் நம்பிக்கையுடன் செய்து பலன் பெறுங்கள்.

சற்று முன்