தினமும் இந்த 1 பொருளை இப்படி சாப்பிட்டு வந்தாலே போதும். எங்கிருக்கும் பணமும் போதும் போதும் என்ற அளவுக்கு உங்களைத் தேடி வந்து கொண்டே இருக்கும்.

honey

பரிகாரங்களையும், வழிபாட்டு முறைகளையும் செய்வதற்கு நேரமில்லை என்று சொல்பவர்களுக்கும் இந்த குறிப்பு மிக மிக உபயோகமானதாக இருக்கும். பண கஷ்டத்தோடு வாழ்பவர்கள் தொடர்ந்து இந்த பொருட்களை சாப்பிட்டு வந்தால் அவர்களுக்குள் இருக்கும் தரித்திரம் நீங்கி, தானாகவே லட்சுமிகடாட்சம் வந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. பணவரவை அதிகரிப்பதற்கு பல வகையான பரிகார முறைகள் இருந்து வந்தாலும், எல்லாவற்றையும் விட சுலபமான சூட்சமமான ஒரு பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தினசரி தேவைகளுக்கான பணம் நம் கைக்கு வந்து கொண்டே இருக்கவேண்டும், வரக்கூடிய வருமான பணம் வீண் விரயம் ஆகாமல் சேமிப்பில் தங்கவும் என்ன செய்வது.

nelli-maram1

தினமும் உங்களுடைய உணவில் இந்த பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். எந்த பொருட்கள்? தினமும் மதியம் சாப்பிடும்போது முதலில் நீங்கள் சாப்பிடும் சாதம் நெய் சாதமாக இருக்க வேண்டும். முதலில் தட்டில் சாதத்தை போட்டுக் கொள்ளுங்கள். அந்த வெள்ளை சாதத்தில் ஒரே ஒரு சொட்டு நெய்யை விட்டு, ஒரு கை பிடி சாதத்தை நன்றாக பிசைந்து அந்த சாதத்தை சாப்பிட்ட பின்பு, மீதம் எப்போதும்போல சாம்பார் குழம்பு சாதத்தை நீங்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்படி தினம் தோறும் செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக வியாழக்கிழமை அன்றும், வெள்ளிக்கிழமை அன்றும் காலையில் எழுந்தவுடன் நெல்லிக்காய் தேன் சேர்ந்த கலவையை சாப்பிடவேண்டும். நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி தேனில் போட்டு ஊற வைத்தும் இதை சாப்பிடலாம். இல்லை அப்படியேவும் சாப்பிட்டுக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம்.

ghee

தினந்தோறும் மகாலட்சுமிகடாட்சம் பொருந்திய நெய்யை சாப்பிட்டு வந்தால் நம் உடலில் இருக்கும் தரித்திரம் நீங்கும். லட்சுமி கடாட்சம் நம்மை வந்து சேரும். ஆரோக்கிய ரீதியாக பார்த்தால் உடல் சூடு குறைந்து உடல் எப்போதும் சுறுசுறுப்போடு ஆரோக்கியத்தோடு இருக்கும். அடுத்ததாக தேன் நெல்லிக்காய் இரண்டு பொருட்களும் சுக்கிர பகவானுக்கு உரியது. இந்தப் பொருட்களை வியாழக் கிழமையிலும் வெள்ளிக் கிழமையிலும் சாப்பிட்டுவந்தால் நிச்சயமாக உங்களுக்கு சுக்கிர பகவானின் அனுக்கிரகம் கிடைத்து இதன் மூலம் பண வரவு அதிகரிக்க தொடங்கும்.

இந்த நெல்லிக்காயில் அதி அற்புதம் வாய்ந்த மருத்துவ குணங்கள் இயற்கையாகவே நிறைந்திருப்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு விஷயம் தான். மேலே சொல்லப்பட்டுள்ள பொருட்களையெல்லாம் ஆரோக்கிய ரீதியாக நீங்கள் சாப்பிட்டாலும் சரிதான், ஆன்மீக ரீதியாக நீங்கள் சாப்பிட்டாலும் சரி தான். உடல் சோர்வு ஏற்படாமல், மனச்சோர்வை ஏற்படுத்தாமல் உழைத்து பணம் சம்பாதித்து தருவதற்கு இந்த பரிகாரம் துணைநிற்கும்.

honey 2

இதோடு சேர்த்து உங்களுக்கு வரக்கூடிய வருமானத்திலிருந்து நீங்கள் சேமிக்க வேண்டும் என்று நினைக்கும் தொகையை பச்சை நிறத் துணியில் மடித்து பணப் பெட்டியில் வைத்துக் கொள்ளுங்கள். தினசரி செலவுக்கான பணத்தை மஞ்சள் துணியில் மடித்து பெட்டியிலோ அல்லது பர்ஸ்ஸிலோ வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்து வந்தால், சேமிக்கும் பணம் வீண் விரயம் ஆகாது. செலவாகும் பணம் அனாவசியமாக செலவு ஆகாது. முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு முயற்சி செய்தவர்களுக்கு கைமேல் பலன் நிச்சயம் உண்டு.