பணம் தண்ணியாய் செலவாகிறது என கேள்விப்பட்டிருப்போம். பணம் தண்ணியாய் கொட்டுகிறது என்று சொல்லிக் கேள்விப்பட்டுயிருப்போம். வியாழக்கிழமை ஈசானிய மூலையில் இந்த தண்ணீரை வைத்துப் பாருங்கள், வீட்டில் பணம் கொட்டும். வாஸ்து படி வீட்டில் ஈசானிய மூளைக்கு என தனி ஆகர்சன சக்தி உண்டு. அந்த இடத்தில் தண்ணீர் சம்பந்தமான எந்த பொருளை வைத்தாலும் வீட்டில் பண வரவு அதிகரிக்கும் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
அகையால் தான் ஒவ்வொரு வீட்டிலும் வடகிழக்கு மூலையான ஈசானிய மூலையில் தண்ணீர் வைப்பது தண்ணீர் பைப் போன்றவற்றை வைத்திருப்பார்கள். இப்பொழுதெல்லாம் அலங்காரத்திற்கு என வைக்கப்படும் வாட்டர் மௌண்டைன்கள் போன்றவை வைக்கப்படுகிறது. அந்த வகையில் நம் வீட்டில் பண வரவு ஏற்படுத்தக் கூடிய ஈசானிய மூலையில் நாம் செய்யக்கூடிய இந்த எளிய முறை நம்முடைய வீட்டில் பணம் வரவை அதிகரிக்க செய்யும் அது என்னவென்று ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் பார்க்கலாம்.
பண வரவு அதிகரிக்க ஈசானிய மூலையில் செய்ய வேண்டியது
இந்த பரிகாரத்தை வியாழன் அல்லது திங்கள் இரண்டு தினங்களில் செய்யலாம். நாளைய தினம் வியாழக்கிழமை குபேரருக்கு உகந்த நாள் அன்றைய நாளில் பணவரவிற்கான இந்த பரிகாரம் செய்வது மேலும் சிறந்த பலனை தரும்.
இந்த பரிகாரத்திற்கு ஒரு சொம்பு தேவை. அது காப்பர் அல்லது பித்தளை இரண்டில் ஏதாவது ஒன்றாகத் தான் இருக்க வேண்டும். சொம்பை சுத்தமாக கழுவி மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்துக் கொள்ளுங்கள். அந்த சொம்பில் சுத்தமான தண்ணீரை நிறைவாக எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் மஞ்சள் குங்குமம் சந்தனம் மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.
இத்துடன் ஒரு ரூபாய் நாணயம் இரண்டு துளசி இலை அனைத்தையும் சேர்த்து விடுங்கள். இந்த சொம்பை வீட்டின் வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். இதை வைக்கும் போது சற்று உயரமான இடத்தில் வைக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ஒரு மனை எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து அதன் மேல் சொம்பை வைத்து விடுங்கள்.
இது அடுத்த திங்கட்கிழமை வரை அப்படியே இருக்க வேண்டும். திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள்ளாக இந்த சொம்பில் இருக்கும் தண்ணீரை எடுத்து உங்கள் வீடு முழுவதும் தெளித்து விடுங்கள். சுவர்களிலும் தெளித்து விடுங்கள். அதே போல் வீட்டு வாசலிலும் தெளித்து விடுங்கள். மீதம் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்திலோ அல்லது செடிகளில் ஊற்றி விடுங்கள்.
அதன் பிறகு மறுபடியும் சொம்பை சுத்தமாக தேய்த்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து மீண்டும் தண்ணீர் ஊற்றி மஞ்சள் குங்குமம் வைத்து அதே ஒரு ரூபாய் நாணயத்தை அதில் போட்டு முன்பு போலவே இப்போதும் வைத்து விடுங்கள். திங்கட்கிழமை மாலை வைக்கக் கூடிய இந்த சோம்பை வியாழக்கிழமை மாலை எடுத்து இதே போல் தெளிக்க வேண்டும்.
இப்படி வாரத்தில் இரண்டு நாட்கள் திங்கள், வியாழன் இந்த சொம்பில் இருக்கும் தண்ணீரை வீட்டில் தெளித்து புதிய தண்ணீரை மாற்றி வைக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரித்து பணவரவு அதிகரிக்கும். பணத்தடை நீங்கும் அதிகமான வருமானத்திற்கு ஏற்ற வாய்ப்புகள் பெருகும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: கடன் தீர நெல்லிமர வழிபாடு
பண வரவிற்கென செய்யப்படும் இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம் என்கிற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.