உங்கள் கையில் பணம் சரளமாக புரள இந்த 3 பொருட்களை ஒன்றாக சேர்த்து பணம் இருக்கும் இடத்தில் வைத்தால் போதுமே!

cash-pachai-karpooram

நாம் எவ்வளவு தான் சம்பாதித்தாலும் அதற்குரிய செலவுகளும் வந்து கொண்டே இருக்கும். 500 ரூபாய் சம்பாதிக்கும் பொழுது என்ன செலவுகள் இருந்ததோ! அதை விட அதிகமாக தான் நீங்கள் 1000 ரூபாய் சம்பாதிக்கும் பொழுது இருக்கும். இது பணத்திற்கு இருக்கும் மிகப் பெரிய சாபம் என்று கூட கூறலாம். நாளாக நாளாக பணத்தின் தேவையும் அதிகரிக்கும். இன்று ஒரு லட்சம் போதும் என்று நினைத்தால் நாளை கண்டிப்பாக அது பத்தவே பத்தாது. அதைவிட கூடுதலாக தான் தேவைப்படும்.

money

பொருளாதாரம், விலை ஏற்றம், தேவை என்று மனிதனுக்கு பணம் பல வழிகளில் நினைத்ததை விட அதிகமாகவே செலவாகி விடுகிறது. இப்படி உங்களுக்கு தேவையே இல்லாமல் செலவாகும் நிலையை பண ஈர்ப்பு விதிகளின் மூலம் சரி செய்து கொள்ள முடியும். அது எப்படி செய்வது? என்பதை தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

பண ஈர்ப்பு விதியில் முக்கிய பங்கு வகிப்பது வாசனை மிக்க பொருட்கள் தான். வாசனை மிக்க இந்த ஒரு சில பொருட்களில் பணத்தை ஈர்ப்பதற்குரிய ஆற்றல் உண்டு என்பது சூட்சம விதியாகும். அப்படியாக பொருட்களில் மூன்று பொருட்களை ஒன்றாக சேர்த்து ஒரு மஞ்சள் துணியில் முடிப்பாக கட்டி பணம் பெருகும் இடங்களில் வைத்தால், தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். உங்களுக்கு வரக்கூடிய விரயங்கள் சுபவிரயம் ஆகவே அமைய இப்படி செய்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.

pachai-karpooram

ஒரு கிண்ணத்தில் சிறிதளவு மஞ்சள் தூளை போட்டுக் கொள்ளுங்கள். அதில் சிறிய துண்டு வெள்ளை துணியை நன்கு தோய்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் தெய்வீக மூலிகை பொருளான பச்சை கற்பூரம் சிறுசிறு துண்டுகளாக நுணுக்கி அதிலிருந்து 3 துண்டுகள் சேர்த்துக் கொள்ளுங்கள். அதனுடன் 3 கிராம்பு மற்றும் 3 ஏலக்காய் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த 3 பொருட்கள் ஒன்றாக சேரும் இடத்தில் வீண் விரயம் ஆவது தடுக்கப்படும் என்பது நியதி.

- Advertisement -

இதனை மஞ்சள் நூல் கொண்டு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ளுங்கள். இந்தப் பொருட்கள் வைக்கும் அளவிற்கு சிறிய முடிப்பாக இருந்தாலே போதும். இந்த முடிப்பை பணம் நீங்கள் எங்கெல்லாம் வைக்கிறீர்களோ! அங்கெல்லாம் வைக்கலாம். குறிப்பாக தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கல்லா பெட்டியில் வைக்க வேண்டும். வீட்டில் பணம் வைக்கும் பீரோவில் வைக்கலாம். நகை அடகு கடைக்கு போகாமல் இருக்க நகை பெட்டியில் இதை வைப்பார்கள்.

anjarai-petti1

பணத்தை சேர்க்கும் பெட்டி, உண்டியல், பெண்களுக்கு உரிய அஞ்சறைப்பெட்டி, ஆண்கள் பயன்படுத்தும் மணி பர்ஸ், பெண்கள் பயன்படுத்தும் பர்ஸ் அல்லது ஹேண்ட் பேக் என்று எங்கு வேண்டுமானாலும் இந்த முடிச்சை வைத்துக் கொள்ளலாம். நீங்கள் சம்பளம் வாங்கி வந்தவுடன் அந்த பணத்தை எங்கு வைப்பீர்களோ! அந்த இடத்தில் வைக்கலாம். இப்படியாக உங்களுடைய செல்வ நிலை அதிகரிக்க, கையில் பணம் சரளமாக புரள்வதற்கு இந்த ஒரு விஷயத்தை செய்து பார்க்கலாம். நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.

kirambu-elam-pachaikarporam

இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ஒவ்வொரு பொருளும் எவ்வளவு நாட்கள் ஆனாலும் கெட்டுப் போவதில்லை என்பதால் மாற்ற வேண்டிய அவசியமும் இல்லை. பச்சைக் கற்பூரம் கரைந்தே போனாலும் அதிலிருந்து வரும் வாசம் அழிவதில்லை. ஆறு மாதம் அல்லது உங்களுக்கு எப்போது தோன்றுகிறதோ! அப்போது புதிதாக வேறு ஒன்றை செய்து மாற்றி வைத்துக் கொள்ளலாம். நீங்கள் இதை செய்த 48 நாட்களுக்குள் நல்ல ஒரு பண வரவு உண்டாவதையும், கையில் இருக்கும் பணம் தங்குவதையும் நீங்களே காணலாம்.

இதையும் படிக்கலாமே
திருஷ்டி நீங்கி செல்வம் செழிக்க உங்கள் வீட்டில் பீரோக்கு கீழே இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.