திருஷ்டி நீங்கி செல்வம் செழிக்க உங்கள் வீட்டில் பீரோக்கு கீழே இந்த 1 பொருளை போட்டு வைத்தால் போதுமே!

bero-padikaram

ஒரு சில பொருட்கள் திருஷ்டிக்காகவே பிரத்தியேகமாக இருக்கும், அந்த வகையில் இந்த ஒரு பொருளும் திருஷ்டிக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் தான். இதனை பொதுவாக நிலவாசல் படியில் கட்டி வைப்பது வழக்கம். ஆனால் இதனை வேறு ஒரு முறையையும் செய்து பயன்படுத்தலாம். இப்படி செய்வதால் வீட்டில் இருக்கும் திருஷ்டிகள் நீங்கும், தடைபட்ட காரியங்கள் நடைபெறத் துவங்கும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் இடமாக நமக்கு இருப்பது பீரோ தான்.

bero1

இந்த பீரோ எப்பொழுதுமே சுத்தமாக வைத்திருப்பது லட்சுமி கடாட்சத்தை உண்டு பண்ணும். இத்தகைய பீரோவிற்கு கீழே இந்த ஒரு பொருளை வைத்தால் பணம் கட்டுக் கட்டாக சேரும் என்பது நம்பிக்கை. அதைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

வீட்டில் நாம் பணம் வைக்கும் இடம் மகாலட்சுமியின் இருப்பிடமாக கருதப்படுகிறது. அதை வைக்கும் பீரோவில் தெய்வீக மணம் கமழ சிறிதளவு பச்சை கற்பூரத்தை போட்டு வைப்பது நல்லது. வெள்ளிக் கிழமைகளில் பீரோவில் இருக்கும் சுவாமி படத்திற்கு தூபம் காட்டுவது நல்ல பலன்களைக் கொடுக்கும். அத்தகைய மதிப்பு மிக்க பீரோவை சுற்றிலும் பலரும் தூசுகளை படிய விட்டிருப்பார்கள்.

bero

பீரோவை சுற்றி எப்பொழுதும் தூசு இல்லாமல் பார்த்து கொள்வது தரித்திரம் போக்கும். சிலரெல்லாம் வருடக் கணக்கில் ஆகியும் பீரோவை சுற்றி சுத்தம் செய்வதே கிடையாது. பீரோவிற்கு பின்னாலும், பக்கவாட்டு பகுதிகளிலும் அட்டை அட்டையாக தூசிகள் சேர்ந்து இருக்கும். அதிலிருக்கும் நுண்கிருமிகளும் பீரோவை சுற்றிலும் எதிர்மறை ஆற்றல்களை உண்டு பண்ணும். பீரோவிற்குள் வைக்கும் பொருட்களும் எப்பொழுதும் அழகாக சுத்தமாக இருக்க வேண்டும். அதில் சுவாமி படங்கள் எந்திரங்களை வைத்திருப்பவர்கள் இன்னும் சுத்தமாக பார்த்துக் கொள்வது அவசியமாகும்.

- Advertisement -

பீரோவில் கஜலக்ஷ்மி படம் வைத்திருப்பது பணம் சேர்க்க வழி வகுக்கும். வெள்ளிக்கிழமைகளில் மல்லிகைப் பூவை பீரோவில் இருக்கும் படத்திற்கு சமர்ப்பித்து, சாம்ப்ராணி தூபம் காண்பித்து வர பீரோவில் இருக்கும் பணமும், நகையும் மேலும் மேலும் கூடுதலாக சேரும். திருஷ்டியை போக்கும் படிகாரம் பீரோவிற்கு கீழே அடியில் போட்டு வைக்க வேண்டும். அதையும் எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

padikaram1

நீங்கள் தினமும் வீடு பெருக்கும் பொழுது கட்டாயம் பீரோவிற்கு அடியிலும் ஒருமுறை பெருக்கி சுத்தம் செய்து விட வேண்டும். அப்போது அந்த படிகாரத்தையும் ஒருமுறை துடைத்து வைத்து விட வேண்டும். இப்படி செய்யும் பொழுது அந்த அறையில் இருக்கும் மற்றும் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி திருஷ்டிகள் இல்லாமல், நல்ல செல்வ வளத்தை கொடுக்கும் என்பார்கள். படிகாரத்திற்கு அப்படி ஒரு சக்தி இருப்பதாக கூறப்படுகிறது.

padikaram

படிகாரத்தை கருப்பு நூல் கொண்டு முடிந்து நிலவாசல் படியில் நடுவில் கூட கட்டி வைக்கலாம். நீங்கள் கேட் அமைத்து இருந்தால் அந்த கேட்டிலும் கூட கட்டி வைப்பது திருஷ்டியை போக்கும். தண்ணீரை சுத்தம் செய்யும் இந்த படிகாரத்தை எப்பொழுதும் வீட்டில் வைத்திருப்பது நன்மைகளை தரும். உங்களுடைய தண்ணீர் தொட்டியில் படிகார துண்டுகளை போட்டு வைப்பதும் தண்ணீரை தூய்மையாக உதவும். படிகாரத்தை குழந்தைகளிடமிருந்து தள்ளி வைப்பதும் பார்த்துக் கொள்ள வேண்டிய ஒரு விஷயம் தான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பீரோவிற்கு கீழ்பகுதியில் படிகாரத்தை தவிர வேறு எந்த ஒரு பொருட்களும் வைக்கக் கூடாது.

இதையும் படிக்கலாமே
சதா சண்டை போட்டுக் கொண்டிருக்கும் வீட்டில் செவ்வாய் தோறும் இதை செய்து பாருங்கள்! சண்டை போட்டவர்கள் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு ராசியாகி விடுவார்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.