இந்த 4 பொருட்களை ஒன்றாக சேர்த்து வைத்தால் வீட்டில் பணம் வீணாக செலவாவது குறைந்து மேலும் பணம் பெருகும்!

perumal-cash

ஒருவர் சம்பாதிக்கும் பணம் ஆனது எந்த வழியில் செலவாகிறது? என்பது தான் முக்கியம். நாம் சம்பாதிக்கும் பணம் அசுப விரயமாக இல்லாமல், சுப விரயமாக இருக்க வேண்டும். அப்படி நாம் சம்பாதிக்கும் பணம் தொடர்ந்து தேவையில்லாத விஷயங்களுக்கு செலவாகிக் கொண்டே இருந்தால் வீட்டில் லட்சுமி கடாட்சம் குறைந்திருக்கிறது என்பது அர்த்தம். வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக இந்த நான்கு பொருட்களை ஒன்றாக சேர்த்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அது என்ன பொருட்கள்? என்பதை இனி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

kadan

நாம் ஒரு விஷயத்தை திட்டம் போட்டு வைத்திருந்தால் அந்த மாதம் வேறு ஒரு விஷயம் வழியாக பணம் செலவாகி விடும். உதாரணத்திற்கு மருத்துவ செலவுகளை எடுத்துக் கொள்ளலாம். மருத்துவச் செலவுகள் என்பது எதிர்பாராமல் நடக்கும் ஒரு செலவாகும். அதற்கான திட்டமிடலும் முன்கூட்டியே திட்டமிட்டு இருக்க மாட்டோம். திடீரென பணம் மருத்துவ செலவுக்காக அதிகமாகச் செலவாகி விடும்.

அது போல வீட்டில் நன்றாக இருக்கும் பொருட்கள் கூட திடீரென சேதமடைந்து விடும், அல்லது பழுது பார்க்க வேண்டியது ஏற்படும். இதற்காக தனி ஒரு செலவை ஒதுக்க வேண்டியிருக்கும். அந்த பணத்தை வைத்து வேறு ஏதாவது செய்வதற்கு நாம் திட்டம் போட்டு வைத்திருப்போம். ஆனால் நம்மால் அதனை செய்ய முடியாமல் போய்விடும். ஒரு செலவுக்காக எடுத்து வைக்கப்படும் பணமானது! வேறு ஒரு செலவிற்கு வீண் விரயம் ஆனால்! அது தான் லட்சுமி கடாட்சத்தை குறைத்துள்ளது என்பதை அறியும் கண்ணாடி ஆகும்.

mahalakshmi3

ஒருவருடைய வீட்டில் லட்சுமி கடாட்சம் இருக்கிறதா? இல்லையா? என்பதை இந்த ஒரு விஷயத்தை வைத்தே நாம் முடிவு செய்து கொள்ளலாம். ஒருவருக்கு வரும் குறிப்பிட்ட வருமானம் அவர்கள் எண்ணிய படியே செலவு செய்ய முடிய வேண்டும். அப்படி முடியாமல் போகும் பொழுது அந்த வீட்டில் லட்சுமி தேவி வாசம் செய்வது இல்லை என்பது அர்த்தமாகும். இதற்கு சிறிய எளிய பரிகாரம் ஒன்றை செய்து விடலாம். அப்படி செய்யும் பொழுது வீண் விரயமாவது தடுக்கப்படும். மேலும் மேலும் பணம் ஆனது பெருகும்.

- Advertisement -

நீங்கள் பெருமாள் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு இருந்து கொண்டு. வரப்படும் துளசி இலைகளை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். அந்த காய்ந்த இலைகள் மூன்று எடுத்துக் கொள்ளுங்கள். இதனை ஒரு சிவப்புத் துணியில் வைத்து கொள்ளுங்கள். பெருமாள் கோவிலில் கொடுக்கப்படும் துளசிக்கு அதீத மகிமை உள்ளது என்பதால், வீட்டின் பண வரவை அதிகரிக்க செய்யும். இதனுடன் பணத்தை ஈர்க்கும் பச்சை கற்பூரம், லட்சுமி தேவிக்கு மிகவும் பிடித்தமான ஏலக்காய், மற்றும் வீண் விரயத்தை தடுக்கும் ஆற்றல் கொண்ட ஹோமத்தில் கொடுக்கப்படும் நாணயங்கள் வைக்க வேண்டும்.

Thulasi

நம் வீட்டில் ஹோமம் செய்து இருக்கும் பொழுது அதில் போடப்பட்ட நாணயங்களை பத்திரமாக எடுத்து வைத்திருப்போம். அல்லது வேறு ஒரு இடத்திலிருந்து அந்த நாணயம் நமக்கு கிடைத்திருக்கும். இப்படி ஹோமத்தில் இருந்து போடப்பட்ட நாணயத்தை உங்களுடைய ராசி எண்ணிற்கு ஏற்ப வைத்துக் கொள்ள வேண்டும். பிறந்த தேதியின் கூட்டு எண் பலருக்கும் ராசியாக இருக்கும். அதனடிப்படையில் நாணயங்களை வைத்து சிகப்பு துணியை நன்றாக முடிந்து பூஜை அறையில் வைத்து விட வேண்டும் அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டுக் கொள்ள வேண்டும்.

one rupee

நீங்கள் வழக்கமான பூஜைகள் செய்யும் பொழுதும் இதற்கும் சேர்த்து தூப, தீப, ஆரத்தி காண்பித்து வர வேண்டும். இப்படி செய்யும் பொழுது வீட்டில் தேவையில்லாத பணக்கஷ்டம் அல்லது பண விரயம் ஏற்படாது. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சுப விரயம் ஆகும். நீங்கள் நினைத்த படியும் செலவு செய்ய முடியும். இதனுடைய கூட்டு சேர்க்கையால் வரும் வாசம் வீட்டில் மகாலட்சுமி தேவியை அழைத்து வரும். மூன்று மாதத்திற்கு ஒருமுறை இதனுடைய சக்தி குறைந்து விடும் என்பதால் மாற்றிவிடுவது நல்லது. சிகப்பு துணி மற்றும் நாணயங்களை தவிர மற்ற அனைத்து பொருளையும் மாற்றிவிட வேண்டும்.