எந்த 5 ராசிக்காரர்கள் கையில் பணம் தங்குவதில்லை! என்ன பண்ணாலும் இவர்களிடம் பணம் சேரவே சேராது!

astro-cash1

சம்பாதிப்பதை விட சம்பாதித்த பணத்தை தக்க வைத்துக் கொள்வது தான் மிகப் பெரிய சவாலாக அனைவருக்கும் இருக்கும். அதிலும் ஒரு சிலர் பணம் வந்தது என்றால் தாம் தூம் என்று செலவு செய்ய ஆரம்பித்து விடுவார்கள். 100 ரூபாய் கையில் இருந்தால் 90 ரூபாய்க்கு உடனே செலவு செய்து விடுவார்கள். மீதி பத்து ரூபாயை வைத்து தான் அடுத்த வேலை பார்ப்பார்கள். இந்த 5 ராசிக்காரர்கள் கையில் என்ன செய்தாலும் பணமே தாங்காது! அந்த 5 ராசிக்காரர்கள் யார்? என்று நீங்களும் தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்!

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் கையில் கட்டாயம் பணம் என்பது எளிதாக தங்கி விடுவதில்லை. அவர்களுக்கு இருக்கும் திறமைக்கு என்ன செய்தாலும் பணம் தானாக வரும். கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசை இவர்களுக்கு நிறைய உண்டு. பணம் பல வழிகளில் வந்தாலும் வந்த வழியே சென்று விடும். இவர்களுக்கு தாராள குணம் அதிகமாக இருப்பதால் பணம் இவர்களிடம் தங்குவது இல்லை.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிகாரர்கள் கையில் பணம் தண்ணீர் போல செலவழியும். எவ்வளவு சம்பாதித்தாலும் இவர்களுக்கு சேர்த்து வைக்க வேண்டும் என்கிற மனோபாவம் வருவதே இல்லை. வீட்டில் இருக்கும் பணத்தை கூட விட்டு வைக்க மாட்டார்கள் துடைத்து விடுவார்கள். நாளைய நாளை பற்றிய கவலை இல்லாமல் இன்று எப்படி இருக்கிறோம் என்று நினைப்பார்கள். நண்பர்கள், உறவினர்கள் என்று யார் பணம் உதவி கேட்டாலும் உடனே செய்து விடுவார்கள். இவர்கள் பணம் கையில் தங்க மகாலட்சுமியை வழிபடுவது உத்தமம்.

கன்னி:
kanni
கன்னி ராசிக்காரர்கள் கையில் பணம் தாராளமாக வந்தால் கூட அவற்றை சல்லடையில் ஊற்றிய தண்ணீர் போல தான் செலவழிப்பார்கள். ஐந்து விரல்களையும் ஒன்றாக சேர்த்து பார்த்தால் விரல்களுக்கு இடையில் இடைவெளி இருக்க கூடாது என்பார்கள். கன்னி ராசிக்காரர்கள் கையில் கட்டாயம் இடைவெளி அதிகமாக இருக்கும். இப்படி இருப்பவர்கள் கையில் பணம் என்பது நிலைப்பது இல்லை. உதவி என்று கேட்டு வருபவர்களிடம் கைமாறு கருதாது உதவி செய்து விடுவார்கள். திரும்ப கேட்கும் பொழுது தான் ஏமாந்து போய் நிற்பார்கள்.

சிம்மம்:
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் கையில் பணம் எங்கிருந்து வரும் என்று தெரியாது. பணம் பல வழிகளில் இருந்து வந்தாலும் அவர்கள் கையில் நிலைக்கச் செய்யாது. இவர்கள் மனதில் பெரிய தர்மவான்கள் என்கிற நினைப்பு இருக்கும். தானம் செய்வதிலும், தர்மம் செய்வதிலும் இவர்களுக்கு இவர்களே போட்டி. நல்ல விஷயங்களுக்காக செலவு செய்தாலும் பணத்தை சேகரிக்க கொஞ்சமாவது மெனக்கெட வேண்டும் என்பதை உணர்ந்து கொண்டால் வீண் விரயங்களில் இருந்து இவர்கள் தப்பித்துக் கொள்ளலாம்.

தனுசு:
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் கைகளில் பணம் தங்க இவர்களை சுற்றியுள்ளவர்கள் விடவும் மாட்டார்கள். இவர்களே நினைத்தாலும் இவர்களுடன் இருப்பவர்கள் இவர்களுடைய மனதை திசை திருப்பி விடுவார்கள். பணத்தை ஈட்டக்கூடிய திறமை இவர்களிடம் இருந்தாலும் அதனை எப்படி சேகரிக்க வேண்டும் என்கிற சாதுரியம் இவர்களிடம் இருப்பதே இல்லை. தனுசு ராசிக்காரர்களுக்கு மற்றவர்களுக்கு உதவி செய்வதில் அதிக நாட்டம் இருக்கும். உதவி என்கிற பெயரில் இவர்களை பலரும் ஏமாற்ற பார்ப்பார்கள். கொடுத்த பணத்தை திரும்ப கேட்பதில் இவர்களுக்கு அவ்வளவு கூச்சம் ஏற்படும். இதனால் இவர்களைப் பயன்படுத்திக் கொள்பவர்கள் நிறையவே உடன் இருப்பார்கள்.