எங்கள் வீட்டில் பணம் மழை கொட்ட வேண்டும். லட்ச லட்சமாக கோடி கோடியாக வருமானம் பெருக வேண்டும் என்று, உங்களுக்கு ஆசை இருந்தால், இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு உங்களுக்காக மட்டும் தான். வீட்டில் இருக்கும் வறுமை என்னும் இருளை நீக்க, அதிர்ஷ்டத்தை கொடுக்க வந்திருக்கும் ஒரு வெளிச்சமான விளக்கு பரிகாரம்தான் இது.
தினமும் கொஞ்சம் நேரத்தை ஒதுக்கி இந்த 22 நிமிடங்கள் உங்கள் வீட்டில் தீபம் ஏற்றினால் மட்டும் போதும். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக மாறிவிடும். அந்த 22 நிமிடம் எது? இந்த விளக்கை எப்படி முறையாக ஏற்றுவது ஆன்மீகம் சார்ந்த தகவல் இந்த பதிவில் உங்களுக்காக.
பணம் தரும் தீப வழிபாடு
தினமும் காலை 6:00 மணியிலிருந்து 6:22 மணி வரை உங்களுடைய வீட்டில் சமையல் அறையில் தீபம் ஏற்றப்பட வேண்டும். ஆமாங்க பூஜை அறையில் தீபம் ஏற்றினாலும் தவறு கிடையாது. இருந்தாலும் காலையில் வீட்டில் இருக்கும் பெண்கள் சமையலை ஆரம்பிப்பதற்கு முன்பாக, சமையலறையில் ஒரு இடத்தில் ஒரே ஒரு மண் அகல் விளக்கை காலையில் ஏற்றி வைத்துவிட்டு, உங்கள் சமையலை துவங்குவது ரொம்ப ரொம்ப நல்லது.
இப்போது சமையல் அறையில் எல்லோர் வீட்டிலும் கேஸ் இருக்கிறது. ஆகவே இந்த விளக்கை நீங்கள் ஜாக்கிரதையான ஒரு இடத்தில் ஏற்றி வைத்துவிட்டு பிறகு சமையலை துவங்கிப் பாருங்கள். உங்கள் வீட்டில் இருக்கும் தரித்திரமானது முழுமையாக விலகும். இந்த விளக்கை ஏற்றி வைக்க கட்டாயம் குளித்து இருக்க வேண்டும் என்று கூட அவசியம் கிடையாது. தீட்டு என்ற ஒரு விஷயத்தை பார்க்கவே வேண்டாம். தீட்டு என்று சொன்னால் முதல் தீட்டு நம்முடைய உடம்பு தான்.
ரத்தம் சதை பிண்டம் நிறைந்த இந்த உடம்பை மிஞ்சிய தீட்டு இந்த உலகத்தில் வேறு எதுவுமே கிடையாது. ஆகவே காலையில் எழுந்து பல் தேய்த்து முகம் கை கால்களை கழுவிக்கொண்டு இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சமைத்து பாருங்கள். தொடர்ந்து 48 நாள் இந்த விளக்கை சமையலறையில் ஏற்றி உங்கள் நாளை துவங்கினால் வீட்டில் நிச்சயம் லட்சுமி கடாட்சம் பெருகும். மாதவிலக்கு நாட்களில் கூட பெண்கள் தாராளமாக சமையல் அறையில் இந்த விளக்கை ஏற்றி வைக்கலாம்.
சரிங்க நாங்க சமையல் அறையில் இந்த விளக்கை ஏற்றி வைத்துவிட்டு இதே 22 நிமிடத்தில் பூஜை அறையிலும் விளக்கு ஏற்றி வைத்துக் கொள்ளலாமா என்று கேட்டால், நிச்சயம் ஏற்றி வைக்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. மாதவிலக்கு நாட்களில் பூஜை அறையில் விளக்கு ஏற்றுவதை மட்டும் தவிர்த்துக் கொள்ளுங்கள்.
சில பேர் வீட்டில் எல்லாம் சமையலறையில் தான் பூஜை அறையே இருக்கும். அது ரொம்ப ரொம்ப நல்லது. அதே நேரத்தில் ஒரு நல்ல சாம்பிராணி வத்தி ஏற்றி வீட்ல வச்சிருங்க. நிச்சயமாக உங்களுக்கான நல்லது உங்கள் வீடு தேடி வரும். குடும்ப கஷ்டம் நீங்கும். கணவன் மனைவி ஒற்றுமை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கடன் சுமையிலிருந்து வெளி வருவீர்கள்.
இதையும் படிக்கலாமே: புரட்டாசி தேய்பிறை பஞ்சமி வழிபாடு
உங்கள் வாழ்க்கையே சொர்க்கமாக மாறிவிடும் என்றால் அதற்கு இந்த தீப வழிபாடு ஒன்றே போதுமானது. முழு நம்பிக்கை மட்டும் மனதில் இருக்க வேண்டும். இந்த வழிபாட்டை செய்யுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும். 48 நாட்களுக்குள் வித்தியாசத்தை நிச்சயம் உணருவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து, உங்களுக்கு நடக்காத ஒரு நல்லது நடப்பதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவு வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை கொண்டு வரும் என்ற இந்த தகவலுடன், இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.