- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபுரட்டாசி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

புரட்டாசி தேய்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

நன்றாக வசதியாக, பேரும் புகழுடனும் இருந்தவர்களுக்கு திடீரென்று ஏதோ ஒரு காரணத்தினால் தங்களுடைய மதிப்பையும் மரியாதையும் சொத்துக்களையும் இழந்து நடுத்தெருவிற்கு வரக்கூடிய சூழ்நிலையில் இருந்தாலும் அந்த சூழ்நிலையை மாற்றி அவர்கள் செய்யக்கூடிய முயற்சிகளில் வெற்றியை கொடுத்து பொருளாதாரத்தில் பலவிதமான முன்னேற்றத்தை தரக்கூடிய ஒரு அற்புதமான வழிபாடாக தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய தேய்பிறை பஞ்சமி வழிபாடு திகழ்கிறது. இன்றைய நாளில் வாராகி அம்மனை வழிபாடு செய்யும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

சப்த கன்னிகளில் ஐந்தாவது தெய்வமாக இருக்கக்கூடிய வராகி அம்மனுக்கு உகந்த பஞ்சமி திதி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதிலும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை அன்று பஞ்சமி திதி வருவது கூடுதல் சிறப்பை தருகிறது. இந்த நாளில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நாம் இழந்தது எதுவாக இருந்தாலும் அது நமக்கு திரும்ப கிடைக்கும். மேலும் நம்முடைய பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும்.

- Advertisement -

இந்த பஞ்சமி வழிபாட்டை அக்டோபர் மாதம் 11ஆம் தேதி மாலை 6 மணிக்கு மேல் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. பலரும் பல விதங்களில் வாராகி அம்மனை வழிபாடு செய்தாலும் இந்த ஒரு எளிமையான வழிபாட்டை புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை செய்பவர்களுக்கு கூடுதல் பலனே உண்டாகும். வீட்டில் வாராகி அம்மனின் படம் சிலை இருக்கும் பட்சத்தில் அதை சுத்தம் செய்து கொள்ளுங்கள். அபிஷேகம் செய்யும் வழக்கம் இருப்பவர்கள் அபிஷேகமும் செய்து கொள்ளலாம். பிறகு 54 அல்லது 108 என்ற எண்ணிக்கையில் முனை உடையாத விரலி மஞ்சளை மஞ்சள் நிற நூலால் மாலையாக கட்டி வாராகி அம்மனுக்கு வழங்க வேண்டும்.

அன்றைய தினம் வாராகி அம்மனுக்கு மாதுளம் பழ முத்துக்களில் தேனை கலந்து நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அபிஷேகம் செய்பவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்த மாதுளை மற்றும் தேனை சேர்த்து அபிஷேகம் செய்ய கூடுதல் பலன் உண்டாக்கும். இதே வழிமுறையை நாம் ஆலயத்தில் இருக்கக்கூடிய வாராகி அம்மனுக்கும் செய்யலாம். இவ்வாறு செய்து முடித்துவிட்டு வாராகி அம்மனின் “ஓம் வம் வாராகியை நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை கூறி வாராகி அம்மனுக்கு குங்குமத்தாலோ மலர்களாலோ அர்ச்சனை செய்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் நம் வாழ்வில் நமக்கு ஏற்பட்ட அனைத்து விதமான நஷ்டங்களும் நீங்குவதோடு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றமும் உண்டாகும். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: அதிர்ஷ்டத்தை பெற உதவும் புரட்டாசி கடைசி சனிக்கிழமை

புரட்டாசி மாதத்தின் கடைசி சனிக்கிழமை பஞ்சமி திதி வரக்கூடிய அற்புதமான நாளாக திகழக்கூடிய இன்றைய நாளில் வாராகி அம்மனை இந்த முறையில் வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்