கட்டு கட்டாக பணத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருக்கிறது. எல்லோருக்கும் அந்த ஆசை உடனடியாக நிறைவேறுவது கிடையாது. ஆனால், அதற்காக முயற்சிகளை மேற்கொள்ளாமல் அப்படியே இருக்க முடியுமா. சிறுக சிறுக பணத்தை சேர்த்தால் தான் கட்டு கட்டாக பணம் சேர்க்கும் யோகம் நமக்கு கிடைக்கும்.
நீங்க சிறுக சிறுக பணத்தை சேர்த்துக்கொண்டு, கூடவே சில தாந்திரீக பரிகாரங்களை செய்யும்போது, பணம் சேருவதில் இருக்கும் தடைகள் விலகி, சீக்கிரம் பணம் சேர துவங்கும். அதற்கான ஒரு பரிகாரத்தை தான் இன்றைய பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இன்று மார்ச் மாதம் 1 ஆம் தேதி. மூன்றாம் பிறை தரிசனமும் இந்த நாளில் சேர்ந்து வந்திருக்கிறது.
இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை பார்த்தால் அந்த சிவபெருமானையே பார்த்ததாக அர்த்தம். ஆகவே ஒவ்வொருவரும், ஒவ்வொரு மாதம் வரக்கூடிய மூன்றாம் பிறை தரிசனத்தை தவறாமல் பார்க்க வேண்டும். இதன் மூலம் வாழ்க்கையில் நிச்சயம் நல்லது மட்டுமே நடக்கும். அந்த வகையில் இன்றைய மூன்றாம் பிறை தரிசனத்தை பார்க்கும்போது உங்களுடைய கையில் இந்த ஒரு பொருளை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள் போதும். உங்கள் பண கஷ்டத்திற்கு நிச்சயம் ஒரு தீர்வு கிடைக்கும். அது என்ன பொருள்.
மார்ச் மாதம் மூன்றாம் பிறை தரிசனம்
உப்பு. உள்ளங்கைகளில் 2 ஸ்பூன் அளவு உப்பு வைத்து மூன்றாம் பிறை தரிசனத்தை இன்று காணுங்கள். உள்ளங்கைகளை மூடிக்கொள்ள வேண்டாம். திறந்தபடியே உப்பு வலது கையில் இருக்கட்டும். அப்போதுதான் சந்திரனின் ஆற்றல் அந்த உப்பில் ஈர்க்கப்படும். கல் உப்பு, இந்துப்பு, தூள் உப்பு, எந்த உப்பு வேண்டுமென்றாலும் பரிகாரத்திற்கு பயன்படுத்தலாம் தவறு கிடையாது.
இன்று மாலை 6:30 மணியிலிருந்து 7:00 மணிக்குள் மேற்கு பக்கத்தில் சந்திர தரிசனம் செய்ய வேண்டும். சந்திரனை உங்கள் கண்களில் காணும்போது பெருசாக மந்திரம் எதுவும் சொல்ல வேண்டாம். உங்களுடைய பிரார்த்தனையை மட்டும் சந்திர பகவானிடம் சொல்லுங்கள். கண் குளிர முதலில் அந்த சந்திரனை பாருங்கள். சில வினாடிகள் மட்டுமே மூன்றாம் பிறையானது நமக்கு தெரியும். அந்த சந்திரனை பார்ப்பதே கோடி புண்ணியம்.
கைகளில் இந்த உப்பை வைத்துக்கொண்டு, சந்திரனை பார்த்துவிட்டு பிறகு வீட்டிற்குள் வந்து, இந்த உப்பை எங்கிருந்து எடுத்தீர்களோ, அந்த ஜாடியிலேயே போட்டு விடுங்கள். சமையலுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். பாசிட்டிவ் எனர்ஜி வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கிடைக்கும். சந்திர தரிசனம் பார்க்கும் போது, கையில் வைத்திருந்த உப்பை வீட்டிற்குள் கொண்டு வந்தால் உங்களுடைய வீட்டிற்குள் மகாலட்சுமி கடாட்சம் வந்துவிட்டது என்று அர்த்தம்.
அந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்தும் போது, வீட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் மகாலட்சுமி கடாட்சம் ஏற்பட்டு, வருமானமானது பெருக துவங்கிவிடும். இதுதான் இந்த பரிகாரத்திற்கு பின்னால் மறைந்திருக்கும் சூட்சமம். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி, எப்போதும் போல ஒரு சின்ன வழிபாட்டை செய்யுங்கள் போதும்.
இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற மூன்றாம் பிறை தரிசனம்
வழிபாட்டை பூஜை அறையில் செய்யும்போது “ஓம் சோமாய நமஹ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லி, இந்த மூன்றாம் பிறை வழிபாட்டை நிறைவு செய்து கொண்டாலே போதும். அந்த ஈசனின் ஆசியால் உங்கள் செல்வ வளம் பெருகும். மகாலட்சுமியின் பரிபூரண அருள் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.