பொதுவாகவே வளர்பிறை ஏகாதசியில், பெருமாளை வழிபாடு செய்தால் புண்ணியம் கிடைக்கும் என்று சொல்லுவார்கள். செய்த பாவத்திற்கு எல்லாம் விமோசனம் கிடைக்க, மாதம் தோறும் வரக்கூடிய வளர்பிறை ஏகாதசி, தேய்பிறை ஏகாதசி திதி அன்று விரதம் இருந்து பெருமாளை வழிபட வேண்டும். வைணவர்கள் இந்த விரதத்தை தவறாமல் கடைப்பிடிப்பார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. வைணவர்கள் மட்டுமல்ல பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்.
பெருமாளின் பரிபூரண அருள் கிடைத்து, செய்த பாவங்களுக்கு எல்லாம் மன்னிப்பு கிடைத்து, வாழ்க்கையில் நல்லது நடக்க துவங்கும். இந்த அற்புதம் வாய்ந்த நாளில் பெருமாளுக்கு பிடித்த பாடல் வரிகளைப் பற்றித்தான் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்தப் பாடலை எமகண்ட நேரத்தில் படித்தால் போதும். உங்களுடைய வீட்டில் இருக்கும் பணக்கஷ்டங்கள் எல்லாம்.
தீர்ந்து பணமழை பொழிய தொடங்கும். எங்கிருந்துதான் இந்த பணம் வந்தது என்று உங்களால் சொல்லவே முடியாது. ஆனால் பணம் வந்த வண்ணம் இருக்கும். அப்பேற்பட்ட ஒரு அற்புதப் பாடலை பெருமாளுக்கு உகந்த இந்த வளர்பிறை ஏகாதசி திதியில் உங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.
இன்று திங்கட்கிழமை. காலை 10:30 மணியிலிருந்து 12:00 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில் பெருமாள் முன்பு இரண்டு துளசி இலையோ அல்லது நெல்லிக்காயோ வைத்து இந்த பாடலை மனம் உருகி படித்து போதும். இது எல்லோருக்கும் தெரிந்த பாடல் தான். உங்களால் இந்த பாடலை படிக்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
எமகண்ட நேரத்தில் பூஜை அறையில் பெருமாள் முன்பு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு யூட்யூபில் இந்த பாடலை ஒலிக்க விட்டு விடுங்கள். இந்த பாடல் உங்களுடைய காதில் கேட்டாலே போதும். வீடு முழுவதும் இந்த பாடல் வரிகள் உச்சரித்தாலே போதும். உங்கள் வீட்டில் இருக்கும் வறுமை விலகி பணம் கொட்டத் துவங்கிவிடும். இன்றைய எமகண்ட நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்ய முடியவில்லை என்றாலும் பரவாயில்லை.
வாரம் தோறும் வரக்கூடிய மற்ற நாட்களில், வரும் எமகண்ட நேரத்திலும் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்யலாம். பண வரவு அதிகரிப்பதோடு சேர்த்து தேவையற்ற மன பயம் நீங்கவும் எம பயம் நீங்கவும் இந்த வழிபாடு உங்களுக்கு நல்லதொரு வழியை காட்டித் தரும். குறிப்பிட்ட இந்த எமகண்ட நேரத்தில் வேலையில் இருப்பவர்கள், வீட்டில் இல்லாமல், வெளியில் இருப்பவர்கள், எல்லாம் இருந்த இடத்திலிருந்து எமகண்ட நேரத்தில் இந்த பாடலை ஒரு முறை மனதிற்குள் பாடலாம்.
பெருமாள் பாடல் வரிகள்
கோவிந்தா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா !
கோவிந்தா கோவிந்தா
வேங்கடரமணா கோவிந்தா!
ஸ்ரீ ஸ்ரீனிவாசா கோவிந்தா
ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா !
பக்தவத்சலா கோவிந்தா
பகவதப்ரியா கோவிந்தா !
இதையும் படிக்கலாமே: தங்கம் அதிகளவில் சேர மந்திரம்
ஒரு சில மாதங்கள் தினமும் எமகண்ட நேரத்தில் இந்த பாட்டை படித்து தான் பாருங்கள். இந்தப் பாடல் எட்டு வரிகளை மட்டும் படித்தாலும் சரி, அல்லது முழு பாடலை படித்தாலும் சரி, முழு பாடலை கேட்டாலும் சரி நல்லது தான். உங்கள் வீட்டில் பண மழை பொழிவது உறுதி. நம்பிக்கையோடு பரிகாரத்தை செய்யுங்கள். இதனுடன் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்னென்ன முயற்சிகள் எல்லாம் தேவைப்படுகிறதோ, அதையெல்லாம் மேற்கொள்ளுங்கள். பெருமாள் மகாலட்சுமி உங்களுக்கு துணையாக வாழ்க்கை முழுவதும் வருவார்கள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.