அளவில்லா பணத்தை அள்ளித் தரப்போகும் இடது கை பரிகாரம்.

cash
- Advertisement -

இந்த வார்த்தையை இடது உள்ளங்கையில் எழுதினால், என்னுடைய செலவுக்கு பணம் தானாக தேடி வரும் என்ற முழு நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு தேவையான பணம் நிச்சயம் வரும். இதையெல்லாம் மூடநம்பிக்கை என்று சில பேர் சொல்லலாம். ஆனால் பாசிடிவ் எனர்ஜி அதிகரிக்க அதிகரிக்க, பணம் அதிகமாக சேரும் என்று சொல்லுவார்கள்.

அந்த பாசிடிவ் எனர்ஜியை நமக்கு கொடுக்கும் எந்த பரிகாரமும் மூடநம்பிக்கை கிடையாது, என்பதையும் இந்த இடத்தில் நாம் பதிவு செய்து கொள்ள வேண்டும். உங்களுக்கும் அவசர பண தேவை இருக்கிறது. இடது கையில் என்ன வார்த்தை எழுதனும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பண தேவையை பூர்த்தி செய்யும் வார்த்தை

இந்த வார்த்தையை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் எப்போது வேண்டும் என்றாலும் இடது உள்ளங்கையில் எழுதலாம். வலது கையில் பேனாவை எடுத்துக் கொண்டு, இடது உள்ளங்கையில் இந்த வார்த்தையை எழுதணும். பெண்கள் தீட்டு சமயத்திலும் எழுதலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் எழுதலாம்.

ஆண்கள் பெண்கள் இருபாலரும் இந்த பரிகாரத்தை செய்யலாம். நாம் எழுதப்போகும் அந்த வார்த்தையை பச்சை நிற பேனாவைக் கொண்டு எழுத வேண்டும். பச்சை நிறத்தில் ஸ்கெட்ச், பச்சை நிற பேனா, எது வேண்டும் என்றாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். மார்க்கர் இருந்தாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது.

- Advertisement -

ரிலாக்ஸ் ஆக ஒரு இடத்தில் அமர்ந்து பச்சை நிற பேனாவை வலது கையில் எடுத்துக் கொள்ளுங்கள். இடது உள்ளங்கையில் ‘Praise Money’ என்ற வார்த்தையை எழுத வேண்டும். இவ்வளவுதான் பரிகாரம். இந்த வார்த்தையை எழுதும்போது கட்டாயம் உங்களுக்கு பணம் வந்தே தீரும் என்ற முழு நம்பிக்கையோடு எழுதினால், இந்த பரிகாரத்திற்கு பின்னால் இருக்கும் நற்பலனை அந்த ஒரு நாளிலேயே நீங்கள் நிச்சயம் உணருவீர்கள்.

நம்பிக்கை இல்லாமல், நாம் செய்யக்கூடிய எவ்வளவு பெரிய பரிகாரமும் நமக்கு பலன் தராது என்பதுதான் பிரபஞ்சம் சொல்லும் உண்மை. இதை சும்மா ஒரு நாள் ட்ரை பண்ணி தான் பார்ப்போமே என்று நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், அந்த முயற்சியில் முழு நம்பிக்கை இருக்க வேண்டும். நம்பிக்கையோடு சேர்த்து தினம் தினம் அன்றாட வேலைகளை நீங்கள் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

இந்த வார்த்தையை எழுதி விட்டால் மட்டும் கூரையை பிச்சிகிட்டு பணம் கொட்டாது. முயற்சிகள் உங்களிடத்தில் இருக்க வேண்டும் உழைப்பு உங்களிடத்தில் இருக்க வேண்டும் அதற்கான பலனை கொடுக்கக் கூடிய வேலையை இந்த வார்த்தைகள் செய்யும். தொடர்ந்து 48 நாட்கள் இப்படி உங்களுடைய உள்ளங்கைகளில் உங்களுக்கு பணம் கிடைக்கும் என்று நினைத்து இந்த வார்த்தையை எழுதி பாருங்கள்.

நீங்கள் நம்ப முடியாத ஒரு அதிசயம் உங்கள் வாழ்க்கையில் நிகழும். ஆங்கிலத்தில் இப்படிப்பட்ட பரிகார வார்த்தையை switch word என்று சொல்லுவார்கள். இதை நம்முடைய பாஷையில் மந்திர வார்த்தைகள் என்று சொல்லுவோம்.

இதையும் படிக்கலாமே: ராகு கேது தோஷத்தை சரி செய்ய எளிமையான பரிகாரம்

உங்களுக்கு பண தேவை இருக்கிறது இப்படிப்பட்ட பரிகாரத்தில் நம்பிக்கை இருக்கிறது எனும் பட்சத்தில், மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த எளிய பரிகாரம் நிச்சயம் உங்களுக்கு பலன் அளிக்கும் இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -