வடகிழக்கு மூலையில் ஒரு டம்ளர் தண்ணீரை இப்படி வைத்தால் வராத பணமும் வீடு தேடி வரும். குறிப்பா வரக்கூடிய வருமானம் வீண் செலவு ஆகாமல் நிரந்தரமாக தங்கும்.

water1
- Advertisement -

சம்பாதிப்பது எவ்வளவு பெரிய கஷ்டமோ, அதேபோல வந்த வருமானத்தை சேமித்து இருக்க பிடிப்பது என்பது பல மடங்கு கஷ்டமான விஷயம். வருமானம் குறையவும், செலவுகள் அதிகரிக்கவும் நிறைய காரணங்கள் உள்ளது. அதில் ஒரு சில காரணங்களை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். அந்த காலத்திலிருந்து பின்பற்றி வந்த பழக்கங்கள் சிலவற்றை இன்று நாம் மறந்திருக்கின்றோம். இன்று நம்முடைய வாழ்க்கையில் கஷ்டம் வருவதற்கு அது கூட ஒரு காரணமாக இருக்கலாம்.

அந்த காலத்தில் வருமானம் குறைவாக இருந்தாலும், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை வளமான வாழ்க்கையாக, சிறப்பான வாழ்க்கையாக நிம்மதி தரும் வாழ்க்கையாக இருந்து வந்தது. இன்று நாகரீக வளர்ச்சியின் மூலம் நமக்கு நிறைய நல்லது நடந்தாலும், கண்ணுக்குத் தெரியாத கெட்டதும் கூடவே நடந்து கொண்டுதான் இருக்கிறது. நமக்கு அடுத்தடுத்து வரக்கூடிய சந்ததியினருக்கு நம்மை விட அதிக கஷ்டம் இருக்கும் போல தெரிகிறது.

- Advertisement -

ஆகவே கூடுமானவரை நாகரீக வளர்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சியை எந்த அளவிற்கு நாம் பின்பற்றுகின்றோமோ, அதே போல நம்முடைய முன்னோர்கள் பின்பற்றி வந்த சில விஷயங்களை அப்பப்போ திரும்பி பார்த்துக்கோங்க. அந்த வரிசையில் இன்று நாம் பார்க்கப் போகின்ற விஷயம் மண்பாண்டத்தை பற்றியும் செப்புப் பாத்திரம் பற்றியும் தான். இந்த இரண்டு வகையான பாத்திரங்களும் அந்த காலத்தில் புழக்கத்தில் அதிகமாக இருந்து வந்தது. இன்று ஒரு சிலர் வீட்டில் செம்பு பாத்திரமே கிடையாது. மண்பாண்டமே இல்லாமல் இருக்கிறது. இது மிகவும் தவறு. ஒரு வீடு என்று இருந்தால் அந்த வீட்டில் ஒரு சில செம்பு பாத்திரங்கள், ஒரு சில மண்பாண்டங்கள் கட்டாயமாக இருக்க வேண்டும். இது அறிவியல் ரீதியாகவும் நமக்கு நன்மையை தருகிறது. ஆன்மீக ரீதியாகவும் நன்மையை தருகிறது.

உதாரணத்திற்கு பூஜை அறையிலாவது சுத்தமான செம்பினால் செய்யப்பட்ட பஞ்சபாத்திரம் இருக்க வேண்டும். சமையலறையில் மண்ணால் செய்யப்பட்ட ஒரே ஒரு சட்டியாவது கட்டாயம் இருக்க வேண்டும். அந்த காலத்தில் சமையலறை என்றால் அந்த சமையலறை முழுக்க மண்பாண்டங்கள் இருக்கும். உணவு ஆரோக்கியமாக இருந்தது. உடம்பு ஆரோக்கியமாக இருந்தது. வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. நோயாளி, மருத்துவம் குறைவாக இருந்தது. வீண்விரயம் இருக்காது. ஆனால் இன்று, மருத்துவத்திற்கு செலவு செய்ய வேண்டும் என்பதற்காகவே நம்முடைய முழு சம்பாத்தியத்தையும் கொட்டிக் கொடுக்க வேண்டிய நிலைமை. மண்பாண்டத்தில் ஆரோக்கியமும், பஞ்சபூதங்களின் சக்தியும் அடங்கியிருக்கிறது. செம்புப் பாத்திரத்தில் ஆரோக்கியத்தோடு ஐஸ்வரியமும் நிறைந்திருந்தது.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வீன் விரயம் அதிகமாக இருக்கிறது. வருமானம் குறைவாக உள்ளது என்றால், ஒரு சிறிய செம்பு டம்ளரை எடுத்து அதில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி அதில் வாசம் மிகுந்த பச்சை கற்பூரம் ஏலக்காய் துளசி இலைகள் போட்டு உங்கள் வீட்டு வடகிழக்கு மூலையில் வையுங்கள். இது உங்களுக்கு பணவரவை அதிகரிக்கச் செய்யும். வாரத்தில் இரண்டு நாள் இந்த டம்ளரில் இருக்கும் தண்ணீரை கீழே ஊற்றி விட்டு புதிய தண்ணீர் வைத்தால் கூட போதும். செம்பு நேர்மறை ஆற்றலை ஈர்க்கக் கூடியது. (செம்பு பாத்திரத்தை பரிகாரத்திற்கு மட்டும் பயன்படுத்தாமல் அதில் தண்ணீரை ஊற்றி வைத்து குடித்து வாருங்கள். அது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கும் நன்மையை தரும்.)

உங்களுடைய வீட்டு சமையலறையில் மண்பாண்டம் இல்லை என்றால் உடனடியாக அதை ஒன்று வாங்கி வைத்து அதில் சமைக்க பழகுங்கள். எப்போதுமே மண்பாண்டம் வாங்குவதாக இருந்தால் சனிக்கிழமை வாங்க கூடாது. அதன் மூலம் உங்களுக்கு அவ்வளவாக நல்ல பலன் கிடைக்காது. புதன் வியாழன் திங்கள் போன்ற கிழமைகளில் மண்பாண்டங்களை வாங்கினால் நமக்கு நல்ல பலன் உண்டு.

- Advertisement -