ஒருவர் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் பொழுது தனக்கு மிகவும் நெருக்கமானவரிடம் பண உதவியை எதிர்பார்ப்பார். அப்படி எதிர்பார்க்கும் சமயத்தில் நாமும் அந்த பண உதவியை கொடுத்து உதவுவோம். அந்த உதவியை மறந்து விட்டு அந்த பணத்தை திரும்பக் கொடுக்காமல் கேட்கும் பொழுதெல்லாம் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிக்கொண்டே இருக்கும் பட்சத்தில் நம்மை அறியாமலேயே நமக்கு ஒரு வித வெறுப்பு வந்துவிடும். மேலும் எப்படியாவது அந்த பணத்தை வாங்கி விட வேண்டுமே என்ற எண்ணமும் உண்டாகும். அப்படி ஏமாற்றுகிறார்கள் என்று நன்றாக தெரிந்த பிறகும் அந்த பணத்தை திரும்ப பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் சனிக்கிழமை அன்று எந்த முறையில் பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
கொடுத்த பணத்தை திரும்ப பெற
இந்த வழிபாட்டை அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் சனிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அப்படி பார்க்கும் பொழுது ஜனவரி மாதம் நான்காம் தேதி என்பது அமாவாசை முடிந்து வரக்கூடிய முதல் சனிக்கிழமை. மேலும் இது வருடத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் இந்த சனிக்கிழமையில் நாம் இந்த பரிகாரத்தை செய்ய ஆரம்பித்தோம் என்றால் கண்டிப்பான முறையில் இந்த பரிகாரத்தை செய்து முடிப்பதற்குள்ளாகவே நாம் கொடுத்த பணம் திரும்ப நம் கைக்கு வந்து சேரும்.
இந்த பரிகாரத்தை தொடர்ச்சியாக 8 சனிக்கிழமைகள் செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நமக்கு இரண்டு பொருட்கள் தேவைப்படும். ஒன்று தயிர், மற்றொன்று கருப்பு உளுந்து அதாவது தோல் நீக்கப்படாத உளுந்து. இவ்வளவு அளவு தான் எடுக்க வேண்டும் என்று இல்லை. ஒரு ஸ்பூன் அளவிற்கு கூட நாம் கருப்பு உளுந்தையும் தயிரையும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு சிறிய டப்பாவை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கருப்பு உளுந்தை போட்டு அந்த கருப்பு உளுந்து மூழ்கும் அளவிற்கு தயிரை ஊற்றி மூடி கொள்ளுங்கள்.
காலையிலேயே சூரிய உதயசமயத்தில் அருகில் அரசமரம் இருக்கக்கூடிய இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு இந்த தயிர் கருப்பு உளுந்தை அரச மரத்தின் வேர்க்கால்களில் படும்படி போட்டுவிட்டு கைகூப்பி அரச மரத்திடம் எந்த சூழ்நிலையில் நாம் பணத்தை கொடுத்தோம் அவர்கள் என்னவெல்லாம் சொல்லி வாங்கினார்கள் இப்பொழுது நாம் அந்த பணத்தை திரும்ப கேட்கும் பொழுது அவர்கள் என்னவெல்லாம் சொல்கிறார்கள் என்ற அனைத்தையும் கூற வேண்டும்.
பிறகு நியாயமாக சம்பாதித்த இந்த பணம் திரும்ப என் கைவந்து சேர வேண்டும் என்ற வேண்டுதலையும் வைக்க வேண்டும். இவ்வாறு வேண்டுதல் வைத்தபிறகு திரும்பி பார்க்காமல் வீட்டிற்கு வந்து விட வேண்டும். சனிக்கிழமை தோறும் அரச மரத்தில் மகாவிஷ்ணு மகாலட்சுமியும் குடி இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. காலையில் சூரிய உதயமாக கூடிய அந்த சமயத்தில் நாம் இந்த முறையில் பரிகாரம் செய்யும் பொழுது மகாலட்சுமி மற்றும் மஹாவிஷ்ணுவின் அருளால் நமக்கு கொடுக்கக் கூடாது என்று நினைத்தவர்கள் கூட ஏதோ ஒரு சூழ்நிலையில் மனமாற்றம் ஏற்பட்டு நம்மிடம் வந்து பணத்தை திரும்பத் தருவார்கள்.
ஒருவேளை அவர்களிடம் பணமே இல்லாத சூழ்நிலையில் இருந்தால் கூட ஏதாவது ஒரு ரூபத்தில் பண வரவை ஏற்படுத்தி அந்த பணத்தை நம்மிடம் கொண்டு வந்து கொடுக்கும் அளவிற்கு இந்த பரிகாரம் உதவி செய்யும். இந்த பரிகாரத்தை சூரிய உதயமாகும் நேரத்தில் இருந்து மதியம் 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம். 12 மணிக்கு மேல் செய்யக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: எதிரிகள் தொல்லையை நீக்கி பண வசியத்தை ஏற்படும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு
முழு மனதோடு எந்தவித ஐயமும் இல்லாமல் சந்தேகமும் இல்லாமல் இந்த பரிகாரத்தை சனிக்கிழமை தோறும் செய்பவர்களுக்கு திரும்பவே கிடைக்காது என்று நினைத்த பணமும் திரும்ப கிடைப்பதற்கு உரிய வாய்ப்புகள் உண்டாக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.