- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalஎதிரிகள் தொல்லையை நீக்கி பண வசியத்தை ஏற்படும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

எதிரிகள் தொல்லையை நீக்கி பண வசியத்தை ஏற்படும் வளர்பிறை பஞ்சமி வழிபாடு

- Advertisement -

பெருமாளின் அவதாரங்களில் ஒன்றாக திகழ்வதுதான் வராக மூர்த்தி அவதாரம். அந்த வராக மூர்த்தி அவதாரத்திலேயே இருக்கக்கூடியவள் தான் வராகி அம்மன். பெருமாளுக்கு உரிய மாதமான மார்கழி மாதத்தில் வராகி அம்மனுக்குரிய திதியான பஞ்சமி திதியும் அதே பெருமாளுக்குரிய சனிக்கிழமையோடு சேர்ந்து வருவதால் அன்றைய தினத்தில் நாம் வராகி அம்மனை வழிபாடு செய்யும்பொழுது நமக்கு பலவிதமான அற்புத பலன்கள் கிடைக்கும். அந்த பலன்கள் என்னென்ன என்றும் எப்படி வழிபாடு செய்ய வேண்டும் என்றும் தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

வளர்பிறை பஞ்சமி வழிபாடு

ஜனவரி மாதம் நான்காம் தேதி மார்கழி மாதம் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று மூன்று திதிகளும் மூன்று நட்சத்திரங்களும் சேர்ந்து வருகிறது. இதை முத்திரை நாள் என்றும் முக்கூட்டு நாள் என்றும் கூறுவது உண்டு. இரவு 12:05 வரை அவிட்ட நட்சத்திரமும், அதற்குப் பிறகு ஆரம்பித்து அன்று இரவு 10:51 வரை சதய நட்சத்திரமும், அதற்குப் பிறகு பூரட்டாதி நட்சத்திரமும் வருகிறது. இதே போல் இரவு 1.09 வரை சதுர்த்தி திதியும், அதற்குப் பிறகு பஞ்சமி திதி ஆரம்பித்து அன்று இரவு 11 16 வரையும், அதற்குப் பிறகு சஷ்டி திதியும் ஆரம்பிக்கிறது. அன்று முழுவதும் பஞ்சமி திதி இருப்பதால் அன்றைய தினத்தில் நாம் வாராகி அம்மனை வழிபாடு செய்ய வேண்டும். இந்த மூன்று நட்சத்திரங்களும் முத்திதிகளும் சேர்ந்து வரக்கூடிய இந்த நாளில் நாம் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் நமக்கு நல்ல பலனை குறிக்கும். அதிலும் குறிப்பாக வராகி அம்மனை பஞ்சமி திதி என்பதால் வழிபாடு செய்யும்போது நமக்கு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த வழிபாட்டை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 6:00 மணியிலிருந்து 7 மணிக்குள், மதியம் ஒரு மணியிலிருந்து 2 மணிக்குள், மாலை 6:00 மணியிலிருந்து 9:00 மணிக்குள் செய்யலாம். இந்த நேரங்களில் தங்களுடைய வசதிக்கு ஏற்றார் போல் நேரத்தை தேர்வு செய்து எப்பொழுதும் வராகி அம்மனை பஞ்சமி திதியில் எப்படி வழிபாடு செய்வீர்களோ அதே முறையில் வழிபாடு செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டோடு சேர்த்து ஒரு சிறிய தாந்த்ரீக பரிகாரத்தையும் வாராகி அம்மனுக்கு முன்பாக நாம் செய்தோம் என்றால் நமக்கு இருக்கக்கூடிய எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும், கண் திருஷ்டிகள் விலகும், தீய சக்திகள் எதுவும் நம்மை அணுகாது. அதோடு மட்டுமல்லாமல் பண வசியம் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அந்த தாந்திரீகத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம்.

இதற்கு வராஹி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு தாம்பாலத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் உங்களுடைய கைப்பிடி அளவு ஒரு கைப்பிடி பச்சரிசியை போட வேண்டும். பச்சரிசியை பரப்பக் கூடாது. போட்டால் மட்டும் போதும். அடுத்ததாக உங்களுடைய கைப்பிடியில் ஒரு கைப்பிடி அளவு துவரம் பருப்பை எடுத்து அந்த பச்சரிசி மேல் போடுங்கள். அதையும் பரப்ப கூடாது. அதற்கு மேலாக ஒரே ஒரு விரலி மஞ்சளை வைக்க வேண்டும்.

- Advertisement -

அன்றைய தினத்தில் வராகி அம்மனுக்கு எள் கலந்த சாதமும், பானகமும் நெய்வேத்தியமாக வைக்க வேண்டும் பிறகு வராகி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு வெற்றிலையை வைத்து அந்த வெற்றிலையில் வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை 111 முறை கூறி மஞ்சள் தூளால் அர்ச்சனை செய்ய வேண்டும். அர்ச்சனை செய்த இந்த மஞ்சள் தூளை சேகரித்து வைத்து தினமும் தண்ணீரில் கலந்து வீட்டை சுற்றி தெளித்து வர வீட்டில் இருக்கக்கூடிய அனைத்து விதமான தீய சக்திகளும் விலகிவிடும்.

மந்திரம்

“ஓம் சிம்ஹ வாகினியே நமஹ”

இதையும் படிக்கலாமே:வேண்டுதலை நிறைவேற்றும் ஒரு வரி மந்திரம்

வராஹி அம்மனுக்குரிய பஞ்சமி திதி அன்று வாராகி அம்மனை முழு மனதோடு நினைத்து இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்வதோடு வாராஹி அம்மனின் இந்த மந்திரத்தை கூறி அர்ச்சனை செய்பவர்களுக்கு எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் அவர்களை விட்டு விலகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்