- Advertisement -

பண வரவை தரும் 5 டிப்ஸ்

- Advertisement -

பொதுவாகவே பணத்தை சேமிக்க வேண்டும் என்றால், கஞ்சத்தனமாக இருக்க வேண்டும், பணத்தை யாருக்கும் கொடுக்கக் கூடாது என்று சொல்லுவார்கள். ஆனால் அது தவறு. பணத்தை நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சந்தோஷமாக செலவு செய்கின்றோமோ, அவ்வளவு பணம் பெருகும். இறைக்கின்ற கிணறு சுரக்கும் என்று சொல்லுவார்கள். அதே தத்துவம் தான் பணத்திற்கும்.

அதற்காக 10 ரூபாயை கூட எடுத்து வைக்காமல் வாரி இறைக்காதீங்க. எப்படி பணத்தை செலவு செய்தால் பணம் நம் கையில் தங்கும் ஆன்மீகம் சார்ந்த சில தாந்த்ரீக பரிகாரங்களை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பணத்தைப் பெருக்குவதற்கான சிறந்த 5 வழிகள்

கொஞ்சம் பணம், உங்கள் குடும்ப செலவுக்காக வீட்டிற்குள் வருகிறது. அது மனைவி கையில் வந்தாலும் சரி, அல்லது கணவனே எடுத்து பீரோவில் வைத்தாலும் சரி, ஒரு சிவப்பு நிற அழகான துணியில் அந்த பணத்தை சுருட்டி பீரோவில் வையுங்கள், அல்லது பீரோவில் பணம் வைக்கும் இடத்தில் சிவப்பு துணியை விரித்து அதன் மேலே பணத்தை அடுக்கி வைத்து, தேவைப்படும்போது அந்த பணத்தை எடுத்து செலவு செய்து கொள்ளலாம்.

இப்படி வீட்டில் சிவப்பு நிற துணிக்கு மேல் பணத்தை வைத்தால், அந்தப் பணமானது பல மடங்கு விருத்தி அடையும். இப்படி பணத்தை வைத்தால் பணம் செலவாகாமல் இருக்காது, நன்றாக புரிந்து கொள்ளுங்கள். பணம் செலவு ஆகும். வருமானமும் பெருகும்.

- Advertisement -

நேர்மையாக நடந்து கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய பணத்தை ஒரு ரூபாய் கூட ஏமாற்ற கூடாது. உங்களுடைய நேரத்தை சரியாக கடைபிடிப்பவர்கள். கையில் நிச்சயம் பணம் தாங்கும். (இன்று நேர்மை இல்லாதவர்கள் கையில் தான் கோடி கணக்கில் பணம் புரளுகிறது என்று பேசக்கூடாது. அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை நமக்குத் தெரியாது). சொன்ன நேரத்திற்கு சொன்ன இடத்திற்கு செல்வது, சொன்ன நேரத்தில் சொன்ன வேலையை முடித்து தருவது, வாக்கு தவறாமல் நடந்து கொள்வது, இவைகளை பின்பற்றுபவர்கள் கையில் நிச்சயம் பணம் தங்கும்.

நீங்கள் வேண்டுமென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள். 10 மணிக்கு ஒருவரிடம் இந்த இடத்திற்கு வருகின்றேன் என்று சொன்னால், 9:45க்கு அந்த இடத்திற்கு செல்பவனுடைய கையில் பணம் தங்கும். இதை சொன்னால் நம்ப முடியாது. பைத்தியக்காரத்தனம் என்று கூட சில பேர் சிந்திக்கலாம். முயற்சி செய்து பாருங்கள். இதின் மூலம் உங்கள் வாழ்க்கையில் பெரிய மாற்றம் இருக்கும்.

- Advertisement -

ஒரு புத்தம் புது ரூபாய் நோட்டு கட்டு வாங்கிக் கொள்ளுங்கள். வங்கிகளில் கேட்டால் கொடுப்பார்கள். வெறும் 10 ரூபாய் தான். ஆனால் அது புது நோட்டாக இருக்க வேண்டும். ஆயிரம் ரூபாய்க்கு, புதிய 10 ரூ வாங்கினாலும் சரிதான். உங்களுக்கு தெரிந்தவர்கள் உங்கள் வீட்டில் இருக்கும் குழந்தைகள், உங்கள் உறவினர்களுடைய குழந்தைகள், நண்பர்கள் என்று உங்களுடைய மனதிற்கு பிடித்தவர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பத்து ரூபாய் நோட்டை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும்.

தீபாவளி பொங்கல் வருட பிறப்பு என்று நிறைய பண்டிகை நாட்கள் வரும். அப்போது அவர்களை சந்திக்கும்போது, அவர்களை வாழ்த்தி ஒரு பத்து ரூபாயை கொடுத்தால், புது நோட்டாக கொடுத்தால், உங்களுக்கு பணம் பெருகும்.

தினம் தினம் மகாலட்சுமிக்கு நன்றி சொல்ல வேண்டும். இன்றைய நாள் செலவுக்காக பணத்தை தந்த மகாலட்சுமிக்கு நன்றி. நாளை வரப்போகும் பணத்திற்கு நன்றி, நேற்று செலவுக்கு பணத்தை கொடுத்த மகாலட்சுமிக்கு நன்றி என்று மகாலட்சுமியை நன்றி சொல்லி போற்றி புகழுங்கள்.

முடியாதவர்களுக்கு உங்கள் கையால் செய்யும் உதவி, முடியாத சூழ்நிலையில் பண கஷ்டத்தில் உண்மையாக சிக்கித் தவிப்பவர்களுக்கு யாருக்காவது ஒருவருக்கேனும் உதவி செய்யுங்கள். நீங்கள் செய்யக்கூடிய உதவி பல மடங்கு செல்வமாக, உங்கள் கைக்கு திரும்பவும் வரும். சில பேர் சொல்லுவார்கள். அவர் அவர்களுடைய தலை எழுத்து, அவரவர்களுடைய ஜாதக கட்டம், தசா புத்திக்கு தகுந்தது போலத்தான் பணம் வரும் என்று. அப்படி கிடையாது.

உங்களுடைய தசா புத்தியை தலை எழுத்தை மாற்றக்கூடிய சக்தி, நீங்கள் செய்யும் நல்ல நல்ல காரியங்களுக்கு இருக்கிறது. நீங்கள் எவ்வளவு கெடுதல் செய்திருந்தாலும் சரி, அந்த கெடுதல்கள் எல்லாம் நீங்கள் செய்யும் ஒற்றை நல்ல காரியத்தில் காணாமல் போய்விடும். அதற்காக கெடுதல் செய்து விட்டு பாவத்தை தீர்க்க புண்ணியம் தேடாதீங்க.

இதையும் படிக்கலாமே: மாதத்தின் முதல் நாள் செய்ய வேண்டிய தானம்.

அறியாமல் கூட அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காதீங்க. இதை மனதில் வைத்துக் கொண்டு உங்களுடைய வாழ்க்கையை வாழுங்கள். நிச்சயம் உங்களுக்கான பணம் உங்கள் கையை வந்து சேரும். நீங்கள் வாழ்வில் கஷ்டப்படவே மாட்டீங்க என்ற அருமையான தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

சற்று முன்