ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் இருக்கும் மிகப்பெரிய பிரச்சனையே இந்த பணம் தான். பண வரவு தாராளமாக இருந்தாலே நம்முடைய பாதி பிரச்சனைகளுக்கு மேல் குறைந்து விடும். இது மறுக்க முடியாத உண்மை. இந்த பண பிரச்சனை எப்படி சரி செய்வது என்பது தான் இன்றளவும் பலருக்கும் கேள்விக்குறி. ஏன் என்றால் பணத்தை சம்பாதிக்க நமக்குத் தெரிந்த ஒரே வழி உழைப்பது.
அப்படி உழைத்தும் நம்மால் முன்னேற முடியவில்லை என்றால் என்ன செய்வது அப்படி புலம்புவர்கள் எல்லாம் முருகப்பெருமானுக்கு உகந்த நாளான நாளைய செவ்வாய் கிழமை சஷ்டி திதியில் எளிமையான இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது பணவரவு பல மடங்கு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
பண வரவு அதிகரிக்க
முருகன் என்றாலே அவருடைய வழிபாட்டு தினம் செவ்வாய்க்கிழமை தான் இது அனைவரும் அறிந்ததே. அதிலும் சஷ்டி திதி செவ்வாய்க்கிழமை இரண்டும் ஒன்று சேர்ந்து வந்திருப்பது மிகவும் அற்புதமான ஒரு வழிபாட்டிற்குரிய நாள். இன்றைய தினத்தின் சஷ்டி திதி இருந்தாலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி வரை திதி இருப்பதால் இந்த பரிகாரத்தை செய்வது சிறந்தது
முருகருடைய வழிபாட்டு தினம் செவ்வாய்க்கிழமை தான். அதிலும் சஷ்டி திதி செவ்வாய்க்கிழமை இரண்டும் ஒன்று சேர்ந்து வந்திருப்பது மிகவும் அற்புதமான ஒரு வழிபாட்டிற்குரிய நாள். இன்றைய தினத்தில் சஷ்டி திதி இருந்தாலும் நாளை செவ்வாய்க்கிழமை காலை 6:00 மணி வரை திதி இருப்பதால் இந்த பரிகாரத்தை நாளைய தினம் செய்வது சிறந்த பலனை தரும்.
இதற்கு 9 ஜாதிக்காய் வாங்கிக் கொள்ளுங்கள். இந்த ஜாதிக்காய் பணவரவை அதிகரித்து தரக்கூடிய தன்மை உண்டு அதுமட்டுமின்றி இதற்கு குபேர அனுகிரகமும் உண்டு என்று சொல்லப்படுகிறது. இந்த ஒன்பது ஜாதிக்காயும் நல்ல நிலையில் இருப்பதாக பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள் அதை ஒரு கவரில் போட்டு பத்திரமாக காற்று புகாதவாறு வைத்து விடுங்கள்.
நாளைய தினம் காலை செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானுக்கு முன்பு தீபம் ஏற்றி நெய்வேத்தியம் வைத்து அத்துடன் இந்த ஜாதிக்காயும் வைத்து வழிபாடு செய்யுங்கள். நாளைய தினம் முருகருக்கு வெற்றிலை தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்வதும் சிறந்த பலனை தரும் ஏனெனில் நாளை சஷ்டி திதியும் உள்ளது. நாளைய தினம் நாள் முழுவதும் இந்த ஜாதிக்காய் பூஜை அறையிலே இருக்கட்டும்.
இரவு நீங்கள் உறங்க செல்லும் முன்பு இந்த ஜாதிக்காயை நீங்கள் படுக்கும் திசைக்கு எதிரில், அதாவது உங்கள் கால் இருக்கும் திசையில் சற்று தொலைவில் முருகருடைய சின்ன ஒரு படத்தை வைத்து அதன் அருகில் இந்த ஜாதிக்காய் கவரை வைத்து விடுங்கள். இதில் முக்கியமான ஒன்று வீட்டில் யார் சம்பாதிக்கிறார்களோ அவர்கள் இதை செய்வது சிறந்தது.
நாம் உறங்கும் இடத்தில் சாமி படத்தை வைத்து இப்படி வைக்கலாமா என்ற கேள்வி எழலாம். இது பரிகாரம் என்பதால் அது கணக்கில் வராது அது மட்டும் இன்றி இதற்கு மிகச் சிறிய அளவிலான முருகர் படம் இருந்தாலே போதும். உங்கள் காலின் அருகில் வைக்காமல் சற்று தொலைவில் வைத்து விடுங்கள். இதை அடிக்கடி எடுக்க வேண்டாம் அப்படியே இருந்தாலும் ஒன்றும் தவறில்லை.
இந்த ஜாதிக்காய்கள் பழையதாக மாறும் வரை அப்படியே பயன்படுத்துங்கள். அதன் பிறகு அதை கால் படாத இடத்தில் போட்டுவிட்டு இதே போல ஒரு செவ்வாய்க்கிழமையோ அல்லது சஷ்டி தினத்திலோ இது போல வைத்து வழிபாடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். பண வரவு தாராளமாக இருப்பதுடன் பணம் உங்களைத் தேடி வருவதற்கான யோகங்களை இந்த பரிகாரம் தேடி தரும் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிக்கலாமே: தொழில் சிறக்க லட்சுமி பூஜை
முருகப்பெருமானின் அருள் கிடைத்தாலே சகலமும் கிடைத்தது போல தான் அத்துடன் சேர்த்த இந்த பரிகாரம் நம்முடைய வாழ்க்கை தரத்தை பல மடங்கு உயர்த்தி விடும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் நாளைய தினத்தில் இந்த பரிகாரத்தை செய்து பலன் அடையலாம்.