- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநிரந்தர பண வரவை தரும் பரிகாரம்

நிரந்தர பண வரவை தரும் பரிகாரம்

- Advertisement -

பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்று கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிற ஒவ்வொருவருக்கும் அந்த பணத்தின் அருமை என்பது நன்றாகவே தெரியும். அப்படி பணத்தின் அருமை தெரிந்திருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக சம்பாதித்த பணம் வீண்விரயம் ஆகக்கூடிய சூழ்நிலையும் உண்டாகும். இதற்கு பல காரணங்கள் ஜாதகரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் கூறப்படுகிறது என்றாலும் மகாலட்சுமியின் அருள் இருந்தால்தான் நம்மால் பணத்தை சம்பாதிக்க முடியும் என்று கூறுவது போலவே பணத்தை நிலையாக நிலைத்து வைக்கவும் மகாலட்சுமியின் அருள் என்பது வேண்டும். அப்படிப்பட்ட மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும் பணத்தை நிரந்தரமாக தக்கவைத்துக் கொள்ளவும் செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நிரந்தர பண வரவை தரும் பரிகாரம்

தெய்வங்கள் அனைவருக்கும் ஒவ்வொரு விதமான மலர்கள் உகந்த மலர்களாக திகழ்கின்றன. ஒரு சில மலர்கள் இருக்கின்றன அந்த மலர்களை அனைத்து தெய்வத்திற்கும் நாம் பயன்படுத்தலாம். அப்படிப்பட்ட மலர்களில் ஒன்றுதான் செம்பருத்தி. அதிலும் குறிப்பாக ஒற்றைச் செம்பருத்தி என்பது அனைத்து தெய்வங்களுக்கும் வைத்து வழிபடக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட செம்பருத்தியை வைத்து செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

செம்பருத்தி பூவை எல்லா தெய்வங்களுக்கும் வைத்து நாம் வழிபாடு செய்யலாம். செம்பருத்திப் பூவில் பல தெய்வீக சக்திகள் இருக்கின்றன. அதே சமயம் செம்பருத்தி பூவில் பல மருத்துவ குணங்களும் இருக்கின்றன. அப்படிப்பட்ட செம்பருத்தி பூ என்பது இந்த பரிகாரத்திற்கு கண்டிப்பான முறையில் தேவைப்படுகிறது. அதிலும் குறிப்பாக ஐந்து இதழ்கள் கொண்ட ஒற்றை சிவப்பு செம்பருத்தி என்ற மலரை தான் இந்த பரிகாரத்திற்கு பயன்படுத்த வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு அடுத்ததாக நமக்கு தேவைப்படுவது செம்பு உலோகத்தில் செய்யப்பட்ட சொம்பு. இது சிறிய அளவில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் சொம்பு தான் வேண்டும். அது செம்பு உலோகத்தால் தான் செய்யப்பட்டு இருக்க வேண்டும். வேறு எந்த உலோகத்திலும் செய்யப்பட்டு இருக்கக் கூடாது. இந்த பரிகாரத்தை இரவு படுக்கச் செல்வதற்கு முன்பாக தான் செய்ய வேண்டும். மாலை நேரத்திலேயே மொட்டாக இருக்கக்கூடிய ஒரு செம்பருத்திப் பூவை பறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இரவு அனைத்து வேலைகளும் நிறைவடைந்த பிறகு படுக்க செல்வதற்கு முன்பாக பூஜை அறைக்கு சென்று இந்த செம்பாலான சொம்பில் சுத்தமான குடிக்கும் தண்ணீரை நிறைய பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். பிறகு அதற்குள் நாம் பறித்து வைத்திருக்கும் செம்பருத்தி பூ மொட்டையும் போட வேண்டும். பிறகு நாம் எப்பொழுதும் போல் உறங்கச் சென்று விடலாம். மறுநாள் காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும்.

பிறகு நாம் மொட்டாக போட்டிருக்கும் பூ மலர்ந்திருக்கும். அந்த பூவை எடுத்து குலதெய்வத்திற்கோ, இஷ்ட தெய்வத்திற்கோ அல்லது மகாலட்சுமி தாயாருக்கோ வைத்து விட வேண்டும். சொம்பில் இருக்கும் தண்ணீரை வீட்டில் இருக்கும் அனைவரும் தீர்த்தமாக குடித்து விட வேண்டும். சொம்பில் இருக்கும் தண்ணீரை வேறொரு பாத்திரத்தில் மாற்றிய பிறகு குடிக்க வேண்டும். இப்படி தினமும் தொடர்ச்சியாக 48 நாட்கள் செம்பருத்தி பூவை வைத்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இப்படி செய்வதால் மகாலட்சுமியின் தாயாரின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதனால் பணவரவு என்பது நிரந்தரமாக நிலைத்து இருக்கும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத பண வரவையும் நம் பெற முடியும்.

இதையும் படிக்கலாமே:கஷ்டங்கள் தீர செல்வ வளம் பெருக குலதெய்வ வழிபாடு
எளிதில் கிடைக்கக்கூடிய செம்பருத்திப் பூவை வைத்து இந்த முறையில் முழு நம்பிக்கையுடன் பரிகாரம் செய்யும் பொழுது கண்டிப்பான முறையில் அந்த பரிகாரத்தின் பலனால் நமக்கு செல்வ வளம் என்பது அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்