- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalகஷ்டங்கள் தீர செல்வ வளம் பெருக குலதெய்வ வழிபாடு

கஷ்டங்கள் தீர செல்வ வளம் பெருக குலதெய்வ வழிபாடு

- Advertisement -

ஒருவருடைய வாழ்விற்கும் தாழ்விற்கும் அவருடைய கர்ம வினைகளே காரணமாக திகழ்கிறது. அந்த கர்ம வினைகளை நீக்கக்கூடிய அற்புத ஆற்றல் மிகுந்த தெய்வமாக திகழக்கூடியவர்கள் தான் குலதெய்வம். ஒவ்வொரு குலத்திற்கும் ஒரு தெய்வம் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். அந்த தெய்வத்தை முறையாக நாம் தினமும் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வம் நமக்கு வரக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் தடுத்து நிறுத்தி நம்மை நல்ல நிலையில் வாழ வைப்பார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை பற்றி நான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

செல்வ வளம் பெருக குலதெய்வ வழிபாடு

எத்தனை தெய்வங்கள் இருந்தாலும் குலதெய்வத்திற்கு இணையாக எந்த தெய்வத்தாலும் வர முடியாது என்றுதான் கூற வேண்டும். அதற்கு முக்கியமான காரணம் மற்ற தெய்வங்களை நாம் வழிபடுவதற்குரிய பலனை பெறுவதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது வேண்டும். நமக்கு என்னென்ன நன்மைகள் நடைபெறுகிறதோ அந்த நன்மைகள் அனைத்தும் நடைபெற வேண்டும் என்றால் அதற்கு குலதெய்வத்தின் அருள் என்பது பரிபூரணமாக வேண்டும். அப்படி குலதெய்வத்தின் அருளை பெற்றால் தான் நாம் மற்ற தெய்வங்களுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்தாலும் அதற்குரிய முழுமையான பலன் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட குலதெய்வத்தை நாம் தினமும் மனதார வழிபாடு செய்ய வேண்டும். அருகில் குலதெய்வத்தின் கோவில் இருக்கும் பட்சத்தில் தினமும் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்பு. பெண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில் பௌர்ணமி தினங்களிலும், ஆண் தெய்வமாக இருக்கும் பட்சத்தில் அமாவாசை தினங்களிலும் என்று மாதத்திற்கு ஒரு முறையாவது கண்டிப்பான முறையில் குலதெய்வத்தை வழிபாடு செய்ய வேண்டும்.

குலதெய்வ வழிபாட்டை மேற்கொள்ள இயலாது என்பவர்கள் வருடத்திற்கு ஒரு முறையாவது குலதெய்வ ஆலயத்திற்கு சென்று அங்கு செய்யக்கூடிய முறையான வழிப்பாட்டு முறைகளை பின்பற்றி வழிபாடு செய்ய வேண்டும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிப்பாட்டு முறை என்பது இருக்கும். அந்த தெய்வத்திற்குரிய வழிபாட்டு முறையை அறிந்து அதற்கு ஏற்றார் போல் வழிபாடு செய்தால் தான் குலதெய்வத்தின் அருள் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்படி குலதெய்வ ஆலயத்திற்கு செல்லும் பொழுது குலதெய்வத்தின் நேரடி கண் பார்வைக்கு நேராக இருக்கக் கூடிய மண்ணை ஒரு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு வரவேண்டும். இப்படி நாம் மண்ணை எடுத்து அதை பிளாஸ்டிக் கவரில் போடுவதற்கு பதிலாக வீட்டிலிருந்தே ஒரு மஞ்சள் துணியை எடுத்து வந்து அந்த மண்ணை எடுத்து மஞ்சள் துணியில் வைத்து மூட்டையாக கட்டி வீட்டிற்கு எடுத்து வர வேண்டும். இப்படி எடுத்து வருவதன் மூலம் குலதெய்வத்தை நாம் வீட்டிற்குள் அழைக்கிறோம் என்று பொருள்படும்.

இந்த மண்ணை நம்முடைய வீட்டு நிலை வாசலில் கட்டி வைப்பதன் மூலம் வீட்டிற்குள் எந்த வித எதிர்மறை ஆற்றல்களும் நேராத வண்ணம் நம்முடைய குலதெய்வம் வீட்டு வாசலில் நின்று காவல் காக்கும் என்று கூறப்படுகிறது. அதைப்போல் இதிலிருந்து சிறிதளவு மட்டும் மண்ணை எடுத்து ஒரு சிறிய மஞ்சள் துணியில் கட்டி பணம், நகை வைக்கும் இடத்தில் வைப்பதன் மூலம் அந்த இடத்தில் செல்வ வளம் என்பது அதிகரிக்கும். இதோடு மட்டுமல்லாமல் தினமும் நாம் விளக்கேற்றி வழிபாடு செய்யும்பொழுது ஒரு விளக்கை கண்டிப்பான முறையில் குலதெய்வத்தின் பெயரை கூறிய வண்ணம் ஏற்றுவது என்பது மிகவும் சிறப்பு.

- Advertisement -

எந்த அளவிற்கு குலதெய்வத்தின் பெயரை மனதார நாம் உச்சரிக்கிறோம், அந்த அளவிற்கு குலதெய்வத்தின் அருளும் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. குலதெய்வம் என்னவென்று தெரியாதவர்கள் தங்களின் இஷ்ட தெய்வத்தை குலதெய்வமாக நினைத்து வழிபாடு செய்யலாம். கோவிலில் இருந்து மண்ணை எடுத்து வர முடியாத பட்சத்தில் குலதெய்வ கோவிலில் தரக்கூடிய விபூதி குங்குமத்தை கூட நாம் இந்த முறையில் மூட்டையாக கட்டி நம்முடைய நிலை வாசலிலும் பணம் நகை வைத்திருக்கும் இடத்திலும் வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே:கடன் சுமை தீர முன்னேற்றம் ஏற்பட

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டு முறையை பின்பற்றுபவர்களுக்கு குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அவர்களின் கஷ்டங்கள் நீங்குவதோடு செல்வ செழிப்பும் உயர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்