- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalபண வசியம் ஏற்பட பஞ்சமி பரிகாரம்

பண வசியம் ஏற்பட பஞ்சமி பரிகாரம்

- Advertisement -

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல் இருக்கும். திருமணம் நடைபெற வேண்டும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும், குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், தொழில் சிறப்பாக நடைபெற வேண்டும், பணம் வரவு அதிகரிக்க வேண்டும் என்று பலவிதமான வேண்டுதல்கள் இருக்கும். இப்படி ஒவ்வொரு வேண்டுதலுக்கும் நாம் ஒவ்வொரு விதமான வழிபாட்டை மேற்கொள்வோம். இன்றைய தினம் பஞ்சமி இன்று இரவுக்குள் வாராகி அம்மனை நாம் எந்த வேண்டுதலை வைத்து வழிபாடு செய்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்படி வேண்டும்பொழுது சில தாந்திரீக பரிகாரத்தையும் செய்தோம் என்றால் விரைவிலேயே அந்த வேண்டுதல் நிறைவேறுமாம். அந்த வகையில் பண வரவை அதிகரிக்கவும், கொடுத்த பணத்தை திரும்பப் பெறவும், பணவசியம் ஏற்படவும் செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பண வசியம் ஏற்பட பஞ்சமி பரிகாரம்

பணம் பத்தும் செய்யும் என்ற அனைவருக்கும் தெரியும். பணம் இல்லாமல் நம்மால் உயிர் வாழவே முடியாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. அதனால் தான் பணத்தை சம்பாதிப்பதற்காக அதிக அளவில் பாடுபடுகிறோம். என்னதான் பணத்தை சம்பாதித்தாலும் அந்த பணம் நம்மிடம் இருக்க வேண்டும் அல்லவா? அதற்கு நமக்கு பண வசியம் இருக்க வேண்டும். பணவசியம் இருந்தால் தான் நம்மிடம் பணம் தங்கும். அந்த வசியத்தை ஏற்படுத்துவதற்கு செய்யக்கூடிய ஒரு பரிகாரத்தை பற்றிதான் இப்பொழுது பார்க்க போகிறோம்.

- Advertisement -

இந்த பண வசிய பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படக்கூடிய முக்கியமான ஒரு பொருள் வெந்தயம். பொதுவாக அன்றைய காலத்தில் நம்முடைய முன்னோர்கள் வெந்தயம் வைத்திருக்கும் பாத்திரத்தில் தங்களுடைய பணத்தை சேர்த்து வைத்தார்கள். வெந்தயம் ஒரு தன ஆகர்சன தானியமாக திகழ்கிறது. அப்படிப்பட்ட வெந்தயத்தை வைத்து பஞ்சமி தினத்தன்று நாம் இந்த ஒரு பரிகாரத்தை செய்தோம் என்றால் நம்முடைய கர்ம வினைகளும் நீங்கும், எதிர்மறை ஆற்றல்களும் நீங்கும், பணவரவும் அதிகரிக்கும், கொடுத்த இடத்திலிருந்து பணம் தங்கு தடை இல்லாமல் வந்து சேரும், பண வசியம் உண்டாகும் என்று கூறிக் கொண்டே செல்லலாம். அந்த பரிகாரத்தை எப்படி செய்வது என்று பார்ப்போம்.

இன்று இரவு 12 மணிக்குள் ஒரு சிறிய அகல் விளக்கில் சிறிதளவு வெந்தயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் ஒரு ரூபாய் நாணயம் மற்றும் ஒரே ஒரு விரலி மஞ்சள் வைத்துக் கொள்ளுங்கள். இந்த அகல் விளக்கை உங்களுடைய கையில் வைத்துக்கொண்டு வீட்டு பூஜை அறையில் வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு வாராகி அம்மனை முழு மனதோடு நினைத்து உங்களுடைய பண பிரச்சினை தீர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பிறகு வாராகி அம்மனின் படத்திற்கு முன்பாக ஒரு டம்ளர் நிறைய தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். அந்த தண்ணீருக்குள் அகல் விளக்கில் வைத்திருந்த வெந்தயம், ஒரு ரூபாய் நாணயம், விரலி மஞ்சள் அனைத்தையும் போட்டு விட வேண்டும். இரவு முழுவதும் அது அப்படியே வாராஹி அம்மனின் படத்திற்கு முன்பாக இருக்கட்டும். மறுநாள் காலை அதாவது நாளைய தினம் காலையில் தீபம் ஏற்றுவோம் அல்லவா? அப்படி தீபம் ஏற்று முடித்த பிறகு அந்த டம்ளரின் இருக்கக்கூடிய விரலி மஞ்சளையும் ஒரு ரூபாய் நாணயத்தையும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள்.

ஒரு ரூபாய் நாணயத்தை பணம் இருக்கக்கூடிய இடத்தில் வைத்து விட வேண்டும். தெய்வ காரியங்களுக்கு மஞ்சள் உபயோகப்படுத்தும் பொழுது அந்த விரலி மஞ்சள் உபயோகப்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீருடன் வெந்தயம் இருக்கும் அல்லவா? அதை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு அருகில் இருக்கக்கூடிய மரத்தடியில் ஊற்றி விடுங்கள். இப்படி ஊற்றுவதன் மூலம் அந்த வெந்தயம் அந்த மண்ணில் பட்டு முளைவிட்டு வளர ஆரம்பிக்கும். இதை கால்நடைகளோ அல்லது எறும்புகளோ உணவாக எடுத்துக் கொள்ளும். இப்படி செய்வதன் மூலம் நமக்கு இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்களும் கர்ம வினைகளும் நீங்கி பணவரவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் உண்டாகும் பண வசியமும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:தெரியாமல் கூட தானம் செய்யக்கூடாத 3 பொருட்கள்

தெய்வ வழிபாட்டில் எந்த அளவிற்கு முழு நம்பிக்கையுடன் செய்கிறோமோ அதே போல் இந்த தாந்திரீக பரிகாரத்தையும் வாராகி அம்மனை முழுமனதோடு நினைத்து செய்ய அனைத்து விதமான நன்மைகளும் நம் வாழ்வில் நடைபெறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

சற்று முன்