உங்கள் வீட்டிற்குள் நுழையும் காற்றின் மூலமாக பணம் பறந்துவந்து, உங்கள் வீட்டு பீரோவை நிரப்ப, இதை மட்டும் நீங்கள் செய்தாலே போதும்.

cash3

எண்ணம் போல் வாழ்க்கை. இதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் நம்முடைய மனதில் எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றோமோ அந்த எண்ணம்தான் செயல்பாடாக மாறுகின்றது. அந்த எண்ண அலைகள் நம்மைச் சுற்றி இருக்கும் காற்றில் கலந்து இருக்கின்றது. உங்களுடைய எண்ண அலைகளை முதலில் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். எப்போது பார்த்தாலும் பணத்தை திட்டிக் கொண்டே இருப்பது, அடுத்தவர்களுக்கு பணம் கொடுத்தால் அதை சந்தோஷமாக கொடுப்பதில்லை. அடுத்தவர்களிடம் பணத்தை நாம் கையில் பெறும்போது சந்தோசமாக பெறப்படுவது கிடையாது. பணத்தை விருப்பி, ஆசைப்பட்டு, சந்தோஷத்துடன் யாரும் வரவேற்பது கிடையாது.

kadan

ஆமாம்! இந்த மாத சம்பளம் வந்து விட்டது. இது என்ன கையில் நிற்கவா போகிறது? நாளை ஏதோ ஒரு செலவிற்கு வெளியே செல்லத் தான் போகின்றது. என்ற இந்த எண்ண அலைகள் உங்களைச் சுற்றி இருக்கும்போது, அந்த பணம் நிச்சயம் கையில் தங்காமல் தான் போகும். கொஞ்சம் பணம் உங்கள் வீட்டிற்குள் வருமானமாக வந்தாலும், அது உங்கள் வீட்டை தேடி வந்த மகாலட்சுமி. உங்களுடைய தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக கடவுள் உங்களுக்காக கொடுத்த பணம் என்று நினைத்து, உங்களது குலதெய்வத்தின் பெயரை மனதிற்குள் நினைத்துக் கொண்டே அந்த பணத்தை கையில் தொட வேண்டும்.

அடுத்தபடியாக அந்த பணத்தை மாத தேவைகளுக்காக செலவு செய்யத் தொடங்குவீர்கள். மல்லிகை, கேபிள்டிவி ஆபரேட்டர், வாடகை, பேப்பர் காரர், பால் காரர், இப்படி எல்லோருடைய கடனையும் தீர்க்க வேண்டும். அவர்களுக்கு பணத்தை கொடுக்கும் போது நாம் என்ன எண்ணுவோம் ‘இதோ! கடன்காரன் வந்துவிட்டான் பணத்தை பிடுங்கி செல்ல! இந்த எண்ணம்தான் நிச்சயமாக எல்லோரது மனதிலும் ஓடும்.’

counting-cash

இந்த எண்ணத்தை மாற்றி விட்டு, உங்களது தேவைகளை பூர்த்தி செய்தவர்களுடைய குடும்பமும் நன்றாக இருக்க வேண்டும் என்று, சந்தோசமாக செலவழியுங்கள். அந்த பணத்தை சுவாமியின் பாதங்களில் வைத்துவிட்டு, அதன் பின்பு உங்களது தேவைகளை பூர்த்தி செய்த மளிகை கடைக்காரர், பால்காரர், கேபிள் டிவிகார், இப்படி எல்லோருக்கும் மனநிறைவோடு உங்கள் கையில் இருக்கும் பணத்தைக் கொடுத்துப் பாருங்கள். நிச்சயமாக அந்த பணம் இரட்டிப்பாக மீண்டும் வேறு ஏதாவது ஒரு வழியில் உங்கள் கைக்கு திரும்பவும் வரும்.

- Advertisement -

இப்படியாக உங்களது எண்ண அலைகள் பணத்தை ஈர்க்கும் தன்மையைக் கொண்டது. எண்ண அலைகளை எப்படி நேர்மறையாக மாற்றுவது? அதற்கும் ஆன்மீக ரீதியாக ஒரு வழி சொல்லப்பட்டுள்ளது. அகில் பட்டை, தேவதாரு, வெண்குங்கிலியம், கீழாநெல்லி பொடி, தசாங்கம், சந்தன குச்சி, பால் சாம்பிராணி இந்த பொருட்கள் அனைத்துமே நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். எல்லாப் பொருட்களையும் சம அளவு வாங்கி இடித்து ஒன்றாக கலந்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

வாரத்தில் இரண்டு முறையோ அல்லது மூன்று முறையோ வீடு முழுவதும் இந்த பொருட்களை கொண்ட சாம்பிராணி தூபம் போட வேண்டும். உங்கள் மனதில் பணத்தின் மீது இருக்கும் சலிப்புத் தன்மை, எரிச்சல், கோபம், கெட்ட எண்ணம், வெறுப்பு இவை அனைத்தும் சாந்தமாகி உங்களுடைய எண்ண ஓட்டங்கள் நல்லபடியாக மாறும்.

dhupam

உங்களை சுற்றி இருக்கும் காற்று ஒரு நொடிப் பொழுதில் சுத்தம் செய்யப்படும். பிறகு உங்கள் வீட்டிற்குள் வீசும் காற்றின் மூலம் ஒவ்வொரு நிமிடத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும். நல்ல எண்ணத்தோடு, நல்ல எண்ண அலைகளை கொண்டு செயல்படுபவர்கள் வீட்டில் மகாலட்சுமி நித்தமும் நிலைத்து நின்று அருள் புரிவாள் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.