1 வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்தால் போதும் வருடம் முழுவதும் தடையில்லா பணப்புழக்கம் உங்களிடம் இருக்கும்!

kalasam-sembu-lakshmi

என்னதான் சம்பாதித்தாலும் சம்பாதித்த பணம் முழுவதும் ஏதாவது ஒரு பட்ஜெட்டிற்குள் அடங்கி விடுகிறது. ஒரு ரூபாய் கூட அதில் இருந்து சேர்த்து வைக்கவே முடியவில்லை. மாத கடைசியில் சம்பளம் வாங்கினால் அன்றைய நாளே பாதி சம்பளமும் காலியாகி விடுகிறது. அடுத்த பத்து நாட்களில் மீதி சம்பளமும் நிலைப்பதில்லை என்று புலம்பிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த பரிகாரம் நிச்சயம் நல்ல பலனைக் கொடுக்கும். அப்படி நாம் என்ன செய்யப் போகிறோம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

hundi

இந்த பரிகாரம் இத்தனை நாட்கள் செய்ய வேண்டும் என்கிற எந்த ஒரு விதிமுறையும் இல்லை. உங்களால் முடிந்த ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையில் இப்படி செய்தால் போதும். அந்த வருடம் முழுவதும் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அந்த அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த மகாலட்சுமி பரிகாரம் கட்டாயம் அனைவரும் செய்து பார்த்து பயன் அடையலாம். தன ஆகர்ஷன சக்தியை உண்டாக்கும் இந்த பரிகாரம் ஆண்-பெண் யார் வேண்டுமானாலும் தாராளமாகச் செய்யலாம். வெள்ளிக்கிழமையில் இதை செய்யும் பொழுது அவர்களிடத்தில் பண கஷ்டம் என்பது வரவே வராது.

ஏதாவது ஒரு வெள்ளிக் கிழமையில் பூஜைக்கு என்று ஒதுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அன்றைய நாளில் மகாலட்சுமி படம் வைத்து மஞ்சள், குங்குமம் இட்டு, வாசனை மிகுந்த மல்லிகை மலரை மாலையாகக் அம்பாளுக்கு சாற்றுங்கள். பித்தளை அல்லது செம்பு சொம்பு ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். கட்டாயம் இந்த உலோகத்தில் தான் கலசம் இருக்க வேண்டும். வேறு எந்த பாத்திரத்தையும் பயன்படுத்தக் கூடாது என்பதையும் குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.

sembu-sombu

செம்பு பாத்திரம் நன்கு கழுவி வெளிப்புறத்தில் மஞ்சள் குழைத்து தடவி வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மூன்று அல்லது ஐந்து என்ற எண்ணிக்கையில் சீராக குங்குமம் இட்டுக் கொள்ளுங்கள். பின்னர் அதனுள் கழுத்துப் பகுதி வரை முழுவதுமாக சுத்தமான தண்ணீரை நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தண்ணீரில் சிறிதளவு மஞ்சள், குங்குமம், சந்தனம், அட்சதை, பச்சைக் கற்பூரம், ஏலக்காய், துளசி இலைகள் 3 சேர்த்துக் கொள்ளுங்கள். கலசத்தின் கழுத்தில் மல்லிகை பூவால் கட்டிக் கொள்ள வேண்டும். நைவேத்தியத்திற்கு இனிப்பு பண்டங்களை வைக்கலாம். டைமண்ட் கல்கண்டு வைப்பது மேலும் சிறப்பானது.

- Advertisement -

பின்னர் கலசத்திற்கு அடியில் வெற்றிலை அல்லது சிறிய தாம்பூல தட்டு ஒன்று வைத்து அதில் மஞ்சள், குங்குமம், அட்சதை போட்டுக் கொள்ள வேண்டும். அதன் மேல் இந்த கலசத்தை வைக்க வேண்டும். பின்னர் மகாலட்சுமி தேவிக்கு நெய் விளக்கு தீபம் ஏற்றி வைத்து, கலசத்திற்குள் ஒன்று, இரண்டு, ஐந்து அல்லது பத்து ரூபாய் நாணயங்களை குடும்பத்தில் இருக்கும் நபர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒவ்வொன்றாக போட வேண்டும். ஒவ்வொரு நாணயத்தை போடும் பொழுதும் அவர்களின் பெயரையும் உச்சரிக்க வேண்டும்.

coins

அனைத்து நாணயங்களையும் கலசத்திற்கு போட்ட பிறகு, தீப ஆராதனை காண்பிக்கும் பொழுது மூன்று முறை கீழ்வரும் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். பின்னர் பூஜையை நிறைவு செய்து கொள்ளலாம். ஒவ்வொருவரின் பெயரை சொல்லும் பொழுதும், அவர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளையும் பிரார்த்தனையாக முன்வைக்க வேண்டும். பணம் தான் பிரச்சினை என்றால் மகாலட்சுமியிடம் பணத்தை கேட்பதில் எந்த ஒரு தவறும் இல்லை. பரிகாரத்தை செய்து விட்டு பேசாமல் அமர்ந்து விட்டால் எதுவும் நடக்கப் போவதில்லை.

gajalakshmi

மஹாலக்ஷ்மி மந்திரம்:
ஓம் ஸ்ரீ மகாலக்ஷ்மியை நமஹ!

money

உங்களுடைய முழு திறனையும், உழைப்பையும் செலுத்தினால் மட்டுமே பூஜைக்கு உரிய பலனையும் பெற முடியும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வீண் விரயம் ஆவதை இந்த பூஜை தடுத்து நிறுத்த செய்யும். செல்வத்தை அதிகரிக்க செய்து சேமிப்பை ஏற்படுத்திக் கொடுக்கும். வருடம் ஒரு முறை இந்த பரிகாரத்தை செய்தாலே போதும் அப்படி ஒரு பணபுழக்கம் உங்களுக்கு ஏற்படுவதை நீங்களே உணரலாம். மறுநாள் காலையில் அந்த கலசத்தில் இருக்கும் தண்ணீரை செடிகளுக்கு ஊற்றி விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
ஆண்களின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களிடம் பேசவே கூடாத வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.