ஆண்களின் முன்னேற்றம் தடைபட இதுவும் ஒரு காரணம். வீட்டில் இருக்கும் ஆண்கள், பெண்களிடம் பேசவே கூடாத வார்த்தைகளில் இதுவும் ஒன்று.

fight

நிறைய பேர் வீடுகளில் நடக்கக்கூடிய ஒரு தவறை பற்றித் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். ஆண்கள் இந்த தவறை செய்தால், அதை உடனே திருத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய முன்னேற்றம் தடைபடுவதற்கு நிச்சயம் இதுவும் ஒரு காரணம் என்பதில் ஒரு துளி அளவு கூட சந்தேகம் இல்லை. ஆண்கள், பெண்களைப் பார்த்து பேசக்கூடாத அந்த வார்த்தை என்ன? வீட்டில் மனைவி சொல்லு கூடியதை, கணவர் காது கொடுத்து கேட்க வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் பெண் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றித் தான் இந்த பதிவின் மூலம், ஆன்மீக ரீதியாக நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

fight2

முதலில், எந்த ஒரு வீட்டில் சண்டை சச்சரவு இல்லாமல், குடும்பம் ஒற்றுமையாக இருக்கின்றதோ அந்த வீடு லட்சுமி கடாட்சத்துடன் சுபிட்சம் அடையும் என்பது தான் உண்மை. குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வராமல் சந்தோஷமாக இருக்க பழகிக் கொள்ளுங்கள். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் கூட, நம்முடைய குடும்பம் சந்தோஷமாக இருக்கும். விட்டுக் கொடுப்பவர்கள் என்றுமே கெட்டுப் போவது கிடையாது.

வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய கணவனின் நன்மைக்காக ஏதாவது ஒரு அறிவுரையை கட்டாயம் சொல்லிக் கொண்டே தான் இருப்பார்கள். அதாவது ‘இப்படி செய்தால் பிரச்சனை வரும். செய்யாதீர்கள்! அப்படி செய்தால் பிரச்சனை வரும். தயவு செய்து இந்த ஒரு வேலையை மட்டும் செய்யாதீர்கள் என்று’! சொல்லத்தான் செய்வார்கள்.

fight4

ஆனால் சில ஆண்கள் அதை செவிகொடுத்து கூட கேட்க மாட்டார்கள். ‘நீ ஒரு பெண். நாலு சுவற்றுக்குள் இருக்கும் உனக்கு என்ன தெரியும்? நீ எனக்கு அறிவுரை சொல்லும் பழக்கத்தை இதோடு விட்டுவிடு. ஆண்கள், பெண்கள் சொல்வதை கேட்க வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது’ என்று பெண்கள் சொல்வதை அலட்சியப்படுத்தும் நிறைய ஆண்கள் இன்றளவும் உண்டு.

- Advertisement -

ஆனால், வீட்டிற்கு வரக் கூடிய கெடுதலை, வீட்டிற்கு வரப் போகும் கஷ்டத்தை, அந்த வீட்டு குல தெய்வம் அந்த வீட்டின் பெண்ணின் மூலமாகத்தான் வெளிப்படுத்தும் என்பது நிறைய பேருக்குத் தெரிவதே கிடையாது. வீட்டில் இருக்கும் பெண்களுடைய வார்த்தையை அலட்சியப்படுத்தும் ஆண்களால், நிச்சயம் வாழ்க்கையில் முன்னேற முடியாது. இது அனுபவப்பூர்வமான உண்மை.

அந்தப்பெண் உங்களுடைய தாயாக இருந்தாலும் சரி, மனைவியாக இருந்தாலும் சரி, அல்லது உங்களுடைய பெண் குழந்தையாக இருந்தாலும் சரி, அல்லது அக்கா தங்கைகளை இருந்தாலும் சரி, அப்பா ஸ்தானத்தில் இருக்கும் ஆணுக்கோ, மகன் ஸ்தானத்தில் இருக்கும் ஆணுக்கோ, கணவன் ஸ்தானத்தில் இருக்கும் ஆணுக்கோ, சகோதர ஸ்தானத்தில் இருக்கும் ஆண்களுக்கோ, சில விஷயங்களை பெண்கள் எடுத்துச் சொல்லும்போது, அதை செவிகொடுத்து கேட்டு, பெண்ணின் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து நடக்கும் ஆணுக்கு பின்னால் நிச்சயம் வெற்றி உண்டு. இந்த பதிவை படிக்கும் ஆண்களாக இருந்தால், இந்த பதிவின் மீது நம்பிக்கை இருந்தால், ஒரு முறை மேற்சொன்ன விஷயங்களை நீங்கள் பின்பற்றி சோதித்துப் பாருங்கள்.

women8

உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளுக்கும் மரியாதை கொடுத்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். சில ஆண்கள் வீட்டில் இருக்கும் பெண்கள் சொல்லுவதையும் மீறி, ஒரு வேலையை செய்து மாட்டிக் கொள்வார்கள். பிறகு பின்னால் சிந்திப்பார்கள்! ‘அவ அப்பவே சொன்னா! நான் தான் கேட்காம தப்பு பண்ணிட்டேன்’ என்று புலம்பும் ஆண்களும் உண்டு. என்றைக்குமே ‘பெண் புத்தி, பின் புத்தி அல்ல’ பின்னால் வருவதை முன் கூட்டியே யோசிக்கும் புத்தி தான் பெண் புத்தி.

family-deepam

இதோடு சேர்த்து மனைவியின் பேச்சை கணவன் கேட்க, பெண்கள் ஆன்மீக ரீதியாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றியும் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். பொதுவாகவே கணவன் மனைவியின் ஒற்றுமை, குடும்ப நலனுக்கும் பெண்கள் அம்மன் வழிபாடு செய்யவேண்டும். பெண்களாகிய நீங்கள் அம்மன் கோவில்களுக்கு சென்று இறைவழிபாடு செய்து முடித்துவிட்டு அந்த கோவிலில் கொடுக்கும் குங்குமத்தை, அம்மனின் சன்னிதானத்திலேயே உங்களது நெற்றியிலும், உங்களது திருமாங்கல்யத்திலும், உங்களது வலது கை மோதிர விரலால் இட்டுக் கொண்டாலே போதும். கணவர் உங்கள் பேச்சைக் கேட்க தொடங்குவார் என்ற நம்பிக்கையோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுக்கு ஆபத்து வர இருப்பதை முன்கூட்டியே உணர்த்தும் அறிகுறிகள்! இந்த அறிகுறிகள் எல்லாம் உங்களுக்கு இருந்தால் எச்சரிக்கையாக இருக்கலாமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.