பணம் தான் முக்கியம் என்று நினைக்கும் ராசிகளும், பணத்தை துச்சமென தூக்கி எறியும் ராசிகளும் யாரெல்லாம்? நீங்கள் எப்படி?

astro-cash
- Advertisement -

இந்த உலகத்தில் பணம் தான் பிரதானமாக எல்லோருடைய தேவையாகவும் இருந்து வருகிறது. பணத்தை வைத்து தான் எல்லா பொருட்களையும் வாங்கும் நிலையில் பணம் இப்படியான ஒரு நிலையை அடைந்துள்ளது. ஆனால் பணம் மட்டுமே வாழ்க்கையா? என்று கேட்டால் அதுவும் இல்லை என்று சிலர் கூறுவார்கள். பணம் தான் முக்கியம் என்று நினைப்பவர்களும், பணத்தை துச்சமென நினைத்து முக்கியமில்லை என்று நினைப்பவர்களும் நம்மை சுற்றிலும் இருக்க தான் செய்கின்றனர். அந்த வகையில் எந்த ராசிக்காரர்கள் எல்லாம் இதில் அடங்குவர்? என்பதைத் தான் நாம் இப்பதிவில் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பணம் வாழ்க்கையில் மிகவும் பிரதானமாக விளையாடிக் கொண்டிருக்கும். கிடைக்க வேண்டிய நேரத்தில் பணம் கிடைக்காமலும், மற்ற நேரங்களில் பணவரவு சிறப்பாகவும் இருந்து விளையாடும். இவர்களுக்கு பணம் என்பது ஒரு சாதாரண காகிதம் தான் என்றாலும் சில சமயங்களில் பணத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று தோன்றும் அளவிற்கு விரக்தியை சந்திப்பார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் என்பது மிகவும் அத்தியாவசியமான ஒரு தேவையாக இருந்து வரும். பணத் தேவை என்பது இவர்களுக்கு எப்பொழுதும் தொடரும். போதும் என்று நினைக்கவே முடியாத அளவிற்கு அடுத்தடுத்து பிரச்சனைகளை சந்திக்கக் கூடிய இந்த ராசிக்காரர்களுக்கு பணமே முக்கியம். ஆனால் அதற்காக எதையும் செய்யத் துணிபவர்கள் அல்ல!

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் என்பது ஒரு பொருட்டே கிடையாது! இவர்களைப் பொறுத்தவரை நல்ல மனிதர்களை சம்பாதிப்பது தான் கொள்கையாக இருக்கும். தன்னைச் சுற்றிலும் சிறந்த மனிதர்களும், நல்ல நண்பர்களும் இருக்கவே அவர்கள் விரும்புவார்கள். பணத்தை துச்சமென நினைத்து, வறியவர்களுக்கு வாரி இறைக்கும் இரக்க குணம் உள்ளவர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் தங்களுடைய திறமைக்கு ஏற்ப தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். பணத்தை தேடி இவர்கள் செல்வதில்லை, அது தானாகவே அவர்களிடம் வந்து சேரும். தன்னுடைய முழு உழைப்பையும் கொடுத்து, விடாப்பிடியாக உழைக்கும் இவர்களுக்கு தன்னம்பிக்கையே துணையாக எப்பொழுதும் இருந்து வருகிறது. எனவே இவர்களுக்கு பணம் என்பது அவ்வளவு முக்கியமாக இருப்பதில்லை.

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் என்பது எதிர்காலத்திற்கு பாதுகாப்பைக் கொடுக்கும் ஒரு பொருளாக இருந்து வருகிறது. எப்பொழுதும் சிக்கனம், சேமிப்பு என்று அயராது பாடுபடும் இவர்களுக்கு பணம் என்பது ரொம்பவே முக்கியம். இன்று இருக்கும் சூழ்நிலையை விட, நாளை எப்படி அமையும்? என்று தெரியாத நிலையில், பணத்தை அனாவசியமாக செலவு செய்ய இவர்கள் விரும்புவதில்லை. சரியான திட்டமிடலும், நேர்மையான குணமும் இவர்களுக்கு பணத்தின் மீதான ஆசையை இழக்க வைக்கிறது.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் என்பது ரொம்பவே முக்கியமான ஒரு விஷயமாக இருந்து வருகிறது. பணம் என்றால் பிணமும் வாயைப் பிளக்கும் என்று கூறுவார்கள். அதிகப்பணம் கிடைக்கப் போகிறது என்றால் குறுக்கு வழியிலும் செல்ல தயங்காத இந்த ராசிக்காரர்களுக்கு பணம் பல வழிகளிலும் கிடைக்கக்கூடிய அதிர்ஷ்டம் இருந்தாலும், சற்று தவறினாலும் ஆபத்தில் மாட்டிக் கொள்ளக் கூடிய அமைப்பு தான் இருக்கும். எதைப் பற்றிய கவலையும் இல்லாமல், பணத்தின் மீதான மோகம் கொண்டவர்கள் இவர்கள்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு பணம் என்பது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு விஷயம் தான் என்றாலும், இவர்களுக்கு பணம் என்பது சாதாரண காகிதம் தான். யாராவது கஷ்டப்பட்டு கொண்டு இருந்தால், உடனே ஓடிப்போய் உதவி செய்யும் இவர்களுக்கு எப்பொழுதும் பணத் தேவை என்பது இருந்து கொண்டே இருக்கும். மற்றவர்களுக்காக பணத்தை வாரி இறைக்கும் தாராள குணத்தை கொண்ட இவர்களுக்கு பணம் என்பது எட்டாக் கனியாகவே இருக்கும்.

- Advertisement -