மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திதி வாராகி வழிபாடு

varahi3
- Advertisement -

இந்த ஆங்கில வருடத்தின் கடைசி தேய்பிறை பஞ்சமி திதியானது டிசம்பர் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரவிருக்கின்றது. அதாவது ஞாயிற்றுக்கிழமை காலை 11.51 மணிக்கு இந்த பஞ்சமி திதியானது தொடங்கி, ஜனவரி மாதம் 1ஆம் தேதி மதியம் 2.08 மணி வரை இருக்கிறது. இந்த வருட ஆங்கில பொது வருடம் நமக்கு பஞ்சமி திதியில் பிறக்கிறது.

இந்த தேய்பிறை பஞ்சமி திதியில் வாராஹி அம்மனை எப்படி வழிபாடு செய்வது, கண் திருஷ்டி, ஏவல், பில்லி, சூனியம், எதிரி தொல்லை விலக, நாம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் பற்றிய தகவலை இந்த பதிவின் மூலம் விரிவாக தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

மார்கழி மாத தேய்பிறை பஞ்சமி திதி வழிபாடு

இந்த வழிபாடு நமக்கு ஞாயிற்றுக்கிழமையோடு வந்திருக்கிறது. திஷ்டி கழிக்க சிறப்பான நாள் இது. ஆகவே ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் பூஜை அறையில் வாராகியின் திருவுருவப்படம் இருந்தால், அந்த படத்திற்கு அலங்காரம் செய்து கொண்டு, அம்மனுக்கு கிழங்கு வகைகள் அல்லது பானகம் நெய்வேதியமாக வைத்து, கற்பூர தீப தூப ஆராதனை காண்பித்து உங்களுடைய வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

பொதுவாகவே வாராகி வழிபாடு செய்பவர்களுக்கு இது தெரியும். எங்களுடைய வீட்டில் வாராஹி வழிபாடு செய்ய திருவுருவப்படம் இல்லை, எங்களுக்கு வாராகி வழிபாட்டை பற்றி தெரியாது என்பவர்களும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம்.

- Advertisement -

பூஜையறையில் விளக்கு மட்டும் ஏற்றி வைத்து விடுங்கள். வராகி அன்னையை உங்கள் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் ஏற்றி வைத்திருக்கும் தீபச்சுடர் தான் வாராஹி அன்னை என்று மனதார நினைத்துக் கொள்ளுங்கள். அந்த தீபச்சுடரிலேயே அம்பாள் உங்களுக்கு காட்சி தருவாள்.

பிறகு ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து கையில் வைத்துக் கொள்ளுங்கள். அந்த எலுமிச்சம் பழத்தை கையில் வைத்துக்கொண்டு, வாராஹி அம்மனே துணை, வாராஹி அம்மனே துணை, வாராஹி அம்மனே துணை, என்று மூன்று முறை சொல்ல வேண்டும். பிறகு ஒரு கிண்ணத்தில் போட்டு அந்த எலுமிச்சம் பழத்தை பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

உங்களுடைய வீட்டில் வாராகி திருவுருவப்படம் இருந்தால் அந்த படத்திற்கு முன்பாக இந்த எலுமிச்சம் பழத்தை வையுங்கள். பிறகு தீப தூப கற்பூர ஆரத்தி காண்பித்து வாராஹிதாயே வழிபாடு செய்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையானது ஞாயிற்றுக்கிழமை மாலை 7.00 மணிக்கு மேல் இரவு 10.00 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் நீங்கள் செய்து கொள்ளலாம்.

பூஜை முடித்துவிட்டு, இரவு 10 மணிக்கு மேல் பூஜை அறையில் வைத்திருக்கும் எலுமிச்சம் பழத்தை கையில் எடுத்துக் கொள்ளுங்கள். உங்கள் குடும்ப உறுப்பினர்களை எல்லாம் கிழக்கு பார்த்தவாறு அமர வைத்து, வீட்டு பெரியவர்கள் இந்த எலுமிச்சம்பழத்தை வைத்து அத்தனை பேருக்கும் திருஷ்டி சுற்றி வீட்டிற்கு வெளியே கொண்டு போய், அந்த எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டுகளாக வெட்டி நான்கு திசைகளிலும் எரிந்து விட வேண்டும்.

அவ்வளவுதான், உங்கள் குடும்பத்தை பிடித்த எவ்வளவு பெரிய கெட்ட சக்தியாக இருந்தாலும் அதை வீட்டை விட்டு வெளியேறி விடும். இந்த பரிகாரத்தை உங்களுக்கு நீங்களே, திருஷ்டி சுற்றி போட்டும், திருஷ்டி கழித்துக் கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர அதி சக்தி வாய்ந்த தேய்பிறை பஞ்சமி பரிகாரம்

நாளைய தினம் எலுமிச்சம் பழத்தை வைத்து வாராகி அன்னையின் பெயரைச் சொல்லி திருஷ்டி கழித்து போட்டால், உங்கள் வீட்டில் கண் திருஷ்டியால், எதிரி தொல்லையால், ஏவல் பில்லி சூனியத்தால், எந்த பாதிப்பும் வராது. வராஹித்தாய் உங்கள் குடும்பத்திற்கு பாதுகாப்பாக வந்து நிற்பாள் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -