உங்களின் நோய் நீங்க, தூக்கத்தில் கெட்ட கனவுகள் ஏற்படாமல் செய்யும் துதி இதோ

pandurangan

உடல் என்று ஒன்று நமக்கு இருப்பதால் நோய்கள் ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாததாகி விடுகிறது. நோய்கள் பாதிக்கப்பட்ட மனிதர்கள் உடல் மற்றும் மனதளவில் படுகின்ற வேதனைகள் வார்த்தைகளால் பிறருக்கு உணர்த்த முடியாது. மற்றும் சிலர் தற்கால வாழ்க்கை முறைகளால் சரியான தூக்கமின்றி அவதிப்படுகின்றனர். மற்றும் சிலருக்கு ஆழ்ந்த உறக்கத்தின் போது அடிக்கடி கெட்ட கனவுகள் ஏற்பட்டு அவர்களின் தூக்கத்தை கெடுக்கிறது. இவற்றையெல்லாம் போக்கும் பாண்டுரங்கன் துதி இதோ.

pandurangan

பாண்டுரங்கன் துதி

விபும் வேணுநாதம் சாந்தம் துரந்தம்
ஸ்வயம் லீலயா கோபவேஷம் ததானம்

ஸ்வாம் ப்ருந்தகானந்தனம் சாருஹாஸம்
ப்ரப்ரம்ஹலிங்கம் பஜே பாண்டுரங்கம்.

பண்டரிபுரத்தில் பாண்டுரங்கனாக கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவிற்குரிய மந்திரம் இது. உடலில் பல வகையான நோய்கள் ஏற்பட்டு அவதிப்படுபவர்கள் தினமும் இம்மந்திரத்தை துதிப்பது நல்லது. இரவில் தூங்கும் போது அடிக்கடி தீய கனவுகள் ஏற்பட்டு தூக்கம் கெடுபவர்கள், நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் இல்லாதவர்கள் உறங்கும் முன்பாக கிருஷ்ண பகவானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை துதித்து உறங்குவதால் தீய கனவுகள் ஏற்படாது. தூக்கமின்மை பிரச்சனை தீரும். உடலில் நீண்ட நாட்களாக இருக்கும் நோய்கள் நீங்கும்.

- Advertisement -

பிரபுவும், குழலூதி நிற்பவரும் ஆதி அந்தமில்லாதவரும், கோபத்தைக் காட்டும் கபட வேடத்தைத் தரித்தவரும், ஆநிரைகளுக்கு ஆனந்தத்தை அளிப்பவரும், பரவசமூட்டும் புன்சிரிப்பை உடையவரும், எங்கும் நிறைந்த பரப்பிரம்மமாகத் திகழ்பவருமான பாண்டுரங்கனைத் துதிக்கிறேன் என்பதே மேற்கண்ட பாண்டுரங்க துதியின் பொதுவான பொருளாகும். பாண்டுரங்கனை எப்போதும் துதிப்பவர்களுக்கு தனது இதயத்தில் இடமளிப்பார் ஸ்ரீ நாராயணனாகிய கிருஷ்ண பரமாத்மா.

இதையும் படிக்கலாமே:
நீங்கள் விரும்பியதை கிடைக்க செய்யும் துதி

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Panduranga mantra in Tamil. It is also called Panduranga sloka in Tamil or Krishna mantras in Tamil or Noi neekum manthirangal in Tamil or Krishna manthirangal in Tamil.