நீங்கள் விரும்பியவை கிடைக்க, காரிய வெற்றி உண்டாக செய்யும் துதி இதோ

Murugan

புவியில் வாழும் எண்ணற்ற மக்களுக்கும் எண்ணற்ற கோடி ஆசைகள் விருப்பங்கள் இருக்கின்றன. என்ன தான் அந்த விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக்கொள்ள முயன்றாலும் இறைவனின் அனுக்கிரகம் இல்லாமல் எதுவும் நிறைவேறுவதில்லை. நம்மிடம் இருக்கும் தீவினைகளை போக்கி நமக்கு நன்மையை அருளும் தெய்வமாக முருகன் இருக்கிறார். அவருக்குரிய “முருகன் துதி” துதிப்பதால் ஏற்படும் நன்மைகள் இதோ

Lord Murugan

முருகன் துதி

உருவாய் அருள்வாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் பணியாய் ஒளியாய்

தருவாய் உயிராய் சதியாய் விதியாய்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே

Murugan

குன்றுகளில் கோயில் கொண்டிருக்கும் குகனாகிய முருகப்பெருமானை போற்றும் துதி இது. இந்த துதியை தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் துதிப்பதால் மிகுந்த நன்மைகள் ஏற்படும். செவ்வாய்கிழமைகள் மற்றும் மாத சஷ்டி தினங்களில் காலையில் முருகன் படத்திற்கு முன்பு தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பித்து இத்துதியை 108 முறை துதிப்பதால் உங்களிடம் இருக்கும் கேடான குணங்கள் மறைந்து நற்குணங்கள் உருவாகும். நீங்கள் விரும்பிய காரியங்கள், வேண்டிய கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேறும். காரிய வெற்றி உண்டாகும்.

- Advertisement -

Lord Murugan

தமிழ் இலக்கியங்களில் குறிஞ்சி நில தலைவன் மற்றும் கடவுளாக முருகப்பெருமான் போற்றப்படுகிறார். குன்றுகள் தோறும் இருக்கும் குகனாகிய முருக பெருமான் பக்தர்கள் வேண்ட உடனே அருள்புரியும் கடவுளாக இருக்கிறார். தன்னை வழிபடும் பக்தர்களின் தீவினைகளை போக்கி நற்பலன்களை அருள்பவராக இருக்கிறார். அந்த முருகப்பெருமானுக்குரிய இந்த துதியை தினமும் துதித்து வருபவர்களுக்கு அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
சுதர்சன சுலோகம்

இது போன்று மேலும் பல மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have God murugan thuthi in Tamil. It is also called as Murugan manthirangal in Tamil or Muruga peruman in Tamil or Murugan stuti in Tamil or Murugan Tamil manthiram.