பன்னீர் ரோஜா ஒரே கிளையில் கொத்துகொத்தாக மொட்டுக்கள் வைக்க இத மட்டும் செய்தாலே போதுமே!

ரோஜா வகைகளில் பன்னீர் ரோஜா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இதனுடைய மணமும், குணமும் விசேஷமான தன்மை உள்ளது. பன்னீர் ரோஜாவை கொண்டு பல்வேறு வாசனை திரவியங்கள் தயார் செய்யப்படுகின்றன. பன்னீர் பல மருத்துவ விஷயங்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த பன்னீர் ரோஜா பார்ப்பதற்கு பிங்க் நிறத்தில் நம்முடைய கண்களுக்கு குளிர்ச்சிபடுத்துவதாக அமைந்திருக்கிறது.

rose

நாம் நர்சரிகளில் வாங்கும் பன்னீர் ரோஜா வாங்கிய புதிதில் பெரிய பெரிய மொட்டுக்களும், நிறைய பூக்களும் பூத்திருக்கும். ஆனால் வீட்டிற்கு வாங்கி வந்தவுடன் பார்த்தால் புதிதாக மொட்டுக்களும் நிறைய வைப்பதில்லை. இதற்கு என்ன காரணம் தெரியுமா? பன்னீர் ரோஜா செடியில் நிறைய மொட்டுக்கள் வைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? இவற்றை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நர்சரிகளில் செயற்கையாக கொடுக்கப்படும் உரங்களினால் செடிகளில் கொத்துக் கொத்தாக மொட்டுக்கள் இருக்கின்றன. அதை நாம் வீட்டுக்கு எடுத்து வந்து வளர்க்கும் பொழுது அந்த அளவிற்கு நிறைய மொட்டுக்கள் வைப்பதில்லை. இதற்கு இரண்டு வகையான டிப்ஸ்கள் உள்ளன. அதை சரியாக செய்து வந்தாலே ஒவ்வொரு கிளையிலும் அதிகம் மொட்டுக்கள் வைக்கத் துவங்கி விடும். செடி முழுவதும் கொத்துக்கொத்தாக பூக்கள் பூக்கும்.

paneer-rose-plant

பன்னீர் ரோஜா மட்டுமல்ல எந்த வகையான ரோஜா செடிகளுக்கும் இந்த பராமரிப்பை கட்டாயம் செய்ய வேண்டும். ஒருமுறை மொட்டுக்கள் வைத்த கிளையில் திரும்பவும் மொட்டுகள் வரவில்லை என்றால் அந்த கிளையை வெட்டி விட வேண்டும். அந்தக் கிளையின் அடிபாகத்தில் இலைகள் துளிர்க்காது. இதை வைத்தே அந்த கிளையை தேவையில்லாத கிளை என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்தக் கிளையை மட்டும் முக்கால் பாகத்தில் வெட்டிவிட்டு கால் பாகத்தை அப்படியே விட்டு விடுங்கள். அதிலிருந்து புதிய கிளை பச்சையாக மீண்டும் முளைக்கத் தொடங்கிவிடும். புதியதாக வரும் கிளையில் நிறைய மொட்டுக்கள் பூக்கும். வாரம் ஒரு முறை இதற்கு ஊட்டச் சத்தான உரத்தை நாம் கொடுக்க வேண்டியது அவசியமான ஒன்று. பன்னீர் ரோஜா செடிக்கு நாம் நர்சரிகளில் காசு கொடுத்து உரத்தை வாங்கி போடுவதை விட வீட்டிலேயே வேண்டாம் என்று தூக்கி எறியும் சில பொருட்களை வைத்து உரம் கொடுத்தால் நன்றாக செழித்து வளரும்.

veggitable-waste

நீங்கள் அன்றாடம் சமையல் செய்யும் பொழுது உங்களுக்கு கிடைக்கும் காய்கறிகளுடைய தோல் மற்றும் பழங்களின் தோல் இவைகளில் இருக்கும் அதிக சத்துக்கள் பன்னீர் ரோஜா செடி சிறப்பாக வளர உதவியாக இருக்கும். வெங்காய தோல், பூண்டு தோல், பழங்களின் தோல்கள் இவற்றை தனித்தனியாக சேகரித்துக் கொள்ளுங்கள்.

uram4

வாரம் ஒருமுறை உங்களுடைய பன்னீர் ரோஜா செடி வைத்திருக்கும் தொட்டியில் வேர் பகுதி அடி படாதவாறு ஓரங்களில் பள்ளம் தோண்டி சேகரித்த தோல்களைப் போட்டு மண்ணை மூடி வைத்து விடவும். நீங்கள் மண்ணைத் தோண்டும் போது உள்ளே வேர்ப்பகுதி அடிபட்டால் செடி காய்ந்து போய் விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

rose-chedi

ஓரிரு நாட்களில் நீங்கள் வைத்த தோல் கழிவுகள் உரமாகி விடும். இதனை வாரம் ஒரு முறை செய்ய செடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்து விடும். இந்த இரண்டு வேலைகளையும் சரியாக செய்து விட்டால் போதும். புதியதாக முளைக்கும் ஒரே கிளையில் 10 மொட்டுக்கள் கூட கொத்து கொத்தாக விரைவிலேயே விட்டுவிடும். சிறிய செடியாக இருந்தாலும் நிறைய பூக்கள் உங்களுக்கு கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டுச் செடியில் இலைகள் பழுத்து விடுகிறதா? அப்படின்னா இந்த தண்ணீர் ஊத்தி பாருங்க! இலைகள், மொட்டுகள் கருகாமல் பசுமையான நிறைய பூக்கள் பூக்கும்.

இது போன்று மேலும் தேவையான தகவல்கள் பலவற்றை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.