பங்குனி மாத ராசி பலன் 2018

Panguni

மேஷம்:

Mesham

மேஷராசி அன்பர்களே! இந்த மாதம் எந்த ஒரு விஷயத்தையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செயல்பட வேண்டும். கடினமாக முயற்சி செய்தால் மட்டுமே காரியங்கள் அனுகூலமாகும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் பெண்கள் உங்களுக்கு ஆதரவாகவும் உதவியாகவும் இருப்பார்கள். சில நேரங்களில் காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படலாம். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு குரு 7-ல் அமர்வதால், அடுத்தடுத்த சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் உற்சாகமும் அதிகரிக்கும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் தடை, தாமதங்கள் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு விரும்பத்தகாத இடமாற்றம் ஏற்படக்கூடும். பணிகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதிகாரிகள் கடுமையாகப் பேசினாலும் பொறுமை காப்பது பிற்காலத்துக்கு நல்லது. மாதப் பிற்பகுதியில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளால் போட்டிகளைச் சந்திக்க நேரிடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். பங்குதாரர்களால் அவ்வப்போது சில சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு இருக்காது. மாதப் பிற்பகுதியில் பிரச்னைகள் தீர்ந்து, விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பது தடைப்படும். போராடித்தான் வாய்ப்புகளைப் பெறவேண்டியிருக்கும். சக கலைஞர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயன் தருவதாக இருக்கும்.

- Advertisement -

மாணவர்கள் பாடங்களில் கூடுதல் கவனம் செலுத்திப் படிக்க வேண்டியது அவசியம். சக மாணவர்களிடம் தேவையின்றி பேசுவதைத் தவிர்க்கவும்.

பெண்களுக்கு உறவினர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். கணவர் அன்பாகவும் அனுசரணையாகவும் நடந்துகொள்வார். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தருவதாக அமையும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சிலருக்குப் பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்கும். திருமணம் தடைப்படும் பெண்களுக்கு நல்ல வரன் அமையும். சுயதொழிலில் இருக்கும் பெண்மணிகளுக்கு, தொழிலை அபிவிருத்தி செய்வதற்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

ரிஷபம்:

Rishabam

ரிஷபராசி அன்பர்களே! நினைத்த காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். பணப்புழக்கம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பொது நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும். அத்தியாவசியத் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன் – மனைவிக்கிடையில் பரஸ்பரம் அந்நியோன் யம் அதிகரிக்கும். எதிர்பார்த்த பணவரவு தடையின்றி கிடைக்கும். உறவினர்களால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்படும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாதப் பிற்பகுதியில் வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். சிலருக்கு புத்தாடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றம் தரும் மாதமாக அமையும்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சிகள் சாதகமாக முடியும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். தேவையான நிதியுதவி கிடைக்கும். சக வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்கள் உங்கள் உயர்வுக்கு உதவி செய்வார்கள். பொது நிகழ்ச்சிகளில் கௌரவிக்கப்படுவீர்கள்.

மாணவர்களுக்குப் பாடங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்கள் உங்கள் முன்னேற்றத்தில் அக்கறை கொண்டு, தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். விலகிச் சென்ற உறவினர்கள் விரும்பி வந்து அன்பு பாராட்டுவார்கள். சகோதர வகையில் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்துக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகச் சூழ்நிலை உற்சாகம் தரும். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்மணிகளுக்குத் தேவையான வசதி வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்:
Midhunam

மிதுனராசி அன்பர்களே! சிறப்பான பல நன்மைகளைத் தரும் மாதமாக அமையும். தொடங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்வீர் கள். மனதில் மகிழ்ச்சியும் உற்சாகமும் நிறைந்திருக்கும். உங்கள் முயற்சிகளுக்குப் பெண்கள் பக்க பலமாக இருப்பார்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். மாதப் பிற்பகுதியில் பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அடிக்கடி சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தந்தை வழியில் நன்மைகள் ஏற்படும். ஆனால், உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு குரு வக்கிர நிவர்த்தியாகி 5-ல் அமர்வதால், தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் கூடி வரும். அனைத்து வகைகளிலும் முன்னேற்றமான பலன்களே ஏற்படும்.

அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பணிச்சுமை அதிகரித்தாலும், சிறப்பாகச் செய்து அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சலுகைகளும் கிடைக்கும்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும். பங்குதாரர்கள் வியாபார அபிவிருத்திக்கு உதவி செய்வார்கள். விற்பனையும் லாபமும் அதிகரித்தாலும், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். சுயதொழில் செய்பவர்களுக்குத் தேவையான உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினர்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தடைகள் ஏற்படக்கூடும். வாய்ப்புகளைப் போராடித்தான் பெற வேண்டியிருக்கும். மாதப் பிற்பகுதியில் உங்களைப் பற்றிய வதந்திகள் மறையும். வாய்ப்புகளும் கிடைக்கும்.

மாணவர்களின் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆசிரியர்களின் அறிவுரை உங்கள் முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டிகளில் கலந்துகொண்டு பரிசும் பதக்கமும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியான மாதம். வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவீர்கள். சகோதரர்கள் உதவி செய்வார்கள். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சுயதொழில் செய்யும் பெண்மணிகளுக்குத் தேவையான கடனுதவி கிடைக்கும். திருமணம் தடைப்படும் பெண்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். புகுந்த வீட்டினரின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும்.

கடகம்:
kadagam

கடகராசி அன்பர்களே! குடும்பத்தில் பொறுமையுடன் அனுசரித்துச் செல்வது அவசியம். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனவருத்தம் ஏற்படும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தந்தை வழியில் கருத்துவேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். ஆனால், வீடு, மனை வாங்கும் முயற்சி சாதகமாக முடியும். அரசாங்கக் காரியங்கள் நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களால் சில இடையூறுகள் ஏற்படக்கூடும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. சிலருக்குத் தேவையில்லாத அபவாதம் ஏற்படக்கூடும். பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும், அவர்களை அவர்கள் போக்கிலேயே விட்டுப்பிடிப்பது நல்லது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளைப் போராடித்தான் முடிக்க வேண்டி வரும். பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படும். சிறு தவறுகூட பெரிய சிக்கலை ஏற்படுத்திவிடும். ஆனால், சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். விற்பனையும் லாபமும் அதிகரிக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். புதியவர்களைப் பங்குதாரர்களாகச் சேர்ப்பதில் எச்சரிக்கையாக இருக்கவும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சியில் இப்போது ஈடுபட வேண்டாம். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சக கலைஞர்கள் நட்பு பாராட்டுவார்கள். உங்கள் முன்னேற்றத்துக்கு உதவி செய்வார்கள். மாதப் பிற்பகுதியில் மறைமுகப் போட்டிகளும், தேவையற்ற விமர்சனங்களும் ஏற்படக்கூடும்.

மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். நண்பர்களுடன் தேவையில்லாமல் வெளியில் சுற்றுவதைத் தவிர்க்கவும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். தேவையான பணம் கிடைப்பதால், செலவுகளைச் சமாளிப்பதில் சிரமம் இருக்காது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவை. சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம். சுயதொழிலில் ஈடுபட்டிருக்கும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் தடை ஏற்படக்கூடும்.

சிம்மம்:
Simmam

சிம்மராசி அன்பர்களே! மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படும். குடும்பப் பெண்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமை அவசியம். அரசாங்கக் காரியங்கள் முடிவது இழுபறியாகும். அதிகாரிகளை அணுகும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் வேலைகளைச் சிறப்பாகச் செய்து நிர்வாகத்தினரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். அதிகாரிகள் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். உங்களைப் பற்றிய மறைமுக விமர்சனங்கள் வரக்கூடும். அரசுப் பணியில் இருப்பவர்களுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டு மறையும்.

வியாபாரத்தில் முன்னேறுவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் எண்ணம் நல்லபடி நிறைவேறும். சக வியாபாரிகளின் போட்டிகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த கடினமாக உழைக்கவேண்டி வரும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த லைசென்ஸ் போன்ற விஷயங்கள் முடிவதில் இழுபறி நிலையே காணப்படும். கணக்கு வழக்குகளில் கவனமாக இருக்கவும்.

கலைஞர்களுக்கு மிகவும் சிறப்பான மாதம். புதுப் புது வாய்ப்புகள் கிடைக்கும். சிலருக்கு வெளியூர் அல்லது வெளிநாடு செல்லும் வாய்ப்பும் உண்டு. சக கலைஞர்கள் ஆதரவாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவர். தேர்வுகளில் கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் பரிசும் பாராட்டும் பெறுவீர்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு உழைப்புக்கேற்ப அங்கீகாரம் கிடைக்கும்.

கன்னி:
Kanni

கன்னிராசி அன்பர்களே! எதிலும் பொறுமையுடன் இருக்க வேண்டிய மாதம். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனையின்படி நடந்துகொண்டால், தேவையற்ற பிரச்னைகளைத் தவிர்க்கலாம். பணவரவு போதுமான அளவுக்கு இருந்தாலும், தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும் என்பதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. உறவினர்களால் நன்மையுடன் சில இடையூறுகளும் சேர்ந்தே உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் சுமாராகத்தான் இருக்கும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம். ஏப்ரல் 9-ம் தேதிக்குப் பிறகு குருபகவான் வக்கிர நிவர்த்தியாகி 2-ல் அமர்வதால், சிறப்பான பலன்களை எதிர்பார்க்கலாம்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பது தாமதமாகும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பணிகளில் மிகவும் கவனமாக இருக்கவும்.

வியாபாரத்தில் எவ்வளவு உழைக்கிறீர்களோ அந்த அளவுக்குப் பலன் கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொந்தரவுகள் ஏற்படக்கூடும். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். மாதப் பிற்பகுதியில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகளைப் பெறுவதில் தடைகள் ஏற்படும். இருக்கும் வாய்ப்புகளையும் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள முடியாது. மாதப் பிற்பகுதியில் நிலைமை சீரடையும். எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் வரும்.

மாணவர்கள் கூடுதல் கவனத்துடன் படித்தால் மட்டுமே தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெற முடியும். பெற்றோர் ஆதரவாக இருப்பார்கள். ஆசிரியர்களின் அறிவுரை உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்குப் பிரச்னை எதுவும் இருக்காது. குடும்ப உறுப்பினர்களை அரவணைத்துச் செல்வது நல்லது. அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கக்கூடும். சுயதொழில் செய்பவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும்.

துலாம்:
Thulam

துலாம்ராசி அன்பர்களே! தெய்வ அனுக்கிரகம் நிறைந்த மாதம். பல வகைகளிலும் வளர்ச்சி காணலாம். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணப்புழக்கம் சரளமாக இருக்கும். கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் ஏற்படும்.  வெளிவட் டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வீட்டுத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகமும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். தந்தையுடன் இருந்து வந்த மனஸ்தாபம் நீங்கும். உங்கள் முயற்சிக்கு தந்தையின் ஆதரவு கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். வராது என்று நினைத்த பணம் கைக்கு வரும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். இதுவரை இருந்த பணிச்சுமை குறையும். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்பார்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளதால், தற்காலிகமாகக் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருக்க நேரிடும்.

வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். ஆனால், புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். அவர்களால் ஆதாயமும் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில் தடைகள் குறுக்கிடும். மாதப் பிற்பகுதிக்கு மேல், பிரபல நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் கிடைக்கும். சக கலைஞர்களிடம் பக்குவமாக நடந்துகொள்வதால், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். கடினமாக உழைத்துப் படித்து, தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறுவீர்கள். ஆசிரியர்கள் உங்கள் வெற்றிக்குத் துணைநிற்பார்கள்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மிகவும் மகிழ்ச்சியான மாதம். குடும்ப உறுப்பினர்களின் நன்மைக்காகப் பாடுபடுவீர்கள். சுபநிகழ்ச்சிக்கான பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

விருச்சிகம்:
Viruchigam

விருச்சிகராசி அன்பர்களே! பணவசதி திருப்திகரமாக இருக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நீண்டநாள்களாகச் செல்லவேண்டுமென்று நினைத்திருந்த வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் விலகும். முக்கிய விஷயங்களில் குடும்பப் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவது நல்லது. உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் ஏற்படும். உறவினர் வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாக முடியும். மாதப் பிற்பகுதியில் உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.

அலுவலகத்தில் உங்கள் திறமைக்கும் உழைப்புக்கும் அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். மாதப் பிற்பகுதியில் அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். உங்கள் வேலைகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம்.

வியாபாரத்தில் சக வியாபாரிகளால் பிரச்னைகள் ஏற்படக்கூடும். போட்டிகளைச் சமாளிக்கக் கடுமையாக உழைக்கவேண்டி வரும். பங்குதாரர்களுடன் சுமுகமான நிலையே காணப்படும். உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் கனிவான அணுகுமுறை அவசியம். சிலருக்கு வியாபாரத்தின் பொருட்டு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கலைஞர்களுக்கு பிரபல நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். ஆனால், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மூத்த கலைஞர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால்தான் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறமுடியும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். கணவர் வீட்டாருடன் அனுசரித்து நடந்துகொள்வது நல்லது. வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு தற்காலிக இடமாற்றம் ஏற்படக்கூடும்.

தனுசு:
Dhanusu

தனுசுராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். வெளியூர், வெளிமாநிலப் புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் இருந்த கருத்துவேறுபாடு மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். தடைப்பட்ட சுபநிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெறும் வாய்ப்பு உருவாகும். தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு வீடு, மனை வாங்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். உங்கள் முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு தருவார்கள். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் நல்ல திருப்பம் ஏற்படக்கூடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.

அலுவலகத்தில் இதுவரை இருந்து வந்த நெருக்கடியான சூழ்நிலை இனி மாறும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். ஆனால், சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிடவேண்டாம்.

வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். லைசென்ஸ் போன்ற விஷயங்கள் முடிவதில் தடைகள் ஏற்படக்கூடும். அரசாங்க வகையில் சில இடையூறுகள் ஏற்படலாம். பணியாளர்களிடமும் பங்குதாரர்களிடமும் இணக்கமாக நடந்துகொள்வது நல்லது. மாதப் பிற்பகுதியில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி, வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு புகழ்பெற்ற நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். பொது நிகழ்ச்சிகளில் பாராட்டு கிடைக்கும். புகழ் கூடும். சக கலைஞர்கள் உங்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

மாணவர்களுக்கு முன்னேற்றமான மாதம். ஆர்வத்துடன் படித்து, தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் பெறுவீர்கள். போட்டி, பந்தயங்களில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு சிறப்பான மாதம். குடும்பத்தில் உங்கள் மீது மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு பிரசித்திப் பெற்ற ஆலயங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். வேலைகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். சக ஊழியர்கள் விஷயத்தில் தலையிடவேண்டாம்.

மகரம்:
Magaram

மகரராசி அன்பர்களே! தொடங்கும் முயற்சி சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலையே காணப்படும். பணவரவு திருப்தி தரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர் களுடன் இணக்கமான சூழ்நிலையே காணப்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிலருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, உரிய சிகிச்சையினால் உடன் நிவாரணம் கிடைத்து விடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு பெண்கள் ஆதரவாக இருப்பார்கள். வாழ்க்கைத்துணை உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார். சிலருக்கு எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டு விலகும். மாதப் பிற்பகுதியில் சிலருக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படக்கூடும். தேவையற்ற செலவுகளும் வீண் அலைச்சலும் ஏற்படக்கூடும்.

அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உழைப்புக்கேற்ற அங்கீகாரம் கிடைக்கும். அதிகாரிகள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள்.

வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். சக வியாபாரிகளால் மதிக்கப்படுவீர்கள். வியாபாரம் சார்ந்த அமைப்புகளில் கௌரவப் பொறுப்புகள் வந்து சேரும். புதிய வியாபார முயற்சி வெற்றிகரமாக முடியும். வியாபாரம் தொடர்பான பயணம் ஆதாயம் தரும். வியாபாரத்தை விரிவுபடுத்தும் முயற்சி சாதகமாக முடியும்.

கலைஞர்களுக்கு உற்சாகமான மாதம். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களால் மதிக்கப்படுவீர்கள். விழாக்களில் முதல் மரியாதை கிடைக்கும்.

மாணவர்கள் கடினமாக உழைத்துப் படித்தால்தான், தேர்வுகளைச் சிறப்பாக எழுதி நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும். சந்தேகங்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். கணவரின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் விருப்பத்தை கணவர் நிறைவேற்றுவார். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு பணிச்சுமை அதிகரிக்கக்கூடும். எதிர்பார்த்த சலுகை கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

கும்பம்:
Kumbam

கும்பராசி அன்பர்களே! நன்மைகள் அதிகரிக்கும் மாதம். முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும். தடைப்பட்ட காரியங்கள் அடுத்தடுத்து நிறைவேறும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு ஆதர வாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைப்பட்ட திருமணம் கூடிவரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். குடும்பத்தினருடன் விருந்து, விசேஷங்களுக்குச் சென்று வருவீர்கள். மாதப் பிற்பகுதியில் உறவினர்கள் வகையில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. பழுதான வாகனத்தை மாற்றி, புதிய வாகனம் வாங்குவீர்கள்.

அலுவலகத்தில், முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பார்த்து தடைப்பட்ட சலுகைகள் கிடைக்கும். அதிகாரிகளின் பாராட்டுகள் உங்களை உற்சாகப்படுத்தும். சக பணியாளர்கள் உங்கள் பணிகளில் ஒத்துழைப்பார்கள்.

வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்தத் தேவையான வங்கிக் கடனுதவி கிடைக்கும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்பட்டு விலகும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்புத் தருவார்கள். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும்.

கலைஞர்களுக்கு எதிர்பார்த்தபடியே வாய்ப்புகள் கிடைக்கும். பிரபல நிறுவனங்களிலிருந்து அழைப்பு வரும். சக கலைஞர்கள் உங்கள் திறமையை வியந்து பாராட்டுவார்கள். பொது நிகழ்ச்சிகளில் பாராட்டப்படுவீர்கள்.

மாணவர்கள் கஷ்டப்பட்டு படித்தால்தான் நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும். ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவது நல்லது.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சி தரும் மாதம். குடும்பத்தினர் உங்களிடம் ஆலோசனை கேட்டுச் செயல்படுவார்கள். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மீனம்:
Meenam

மீனராசி அன்பர்களே! அனைத்து முயற்சிகளும் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுபநிகழ்ச்சி களால் வீடு களைகட்டும். பணவரவு திருப்தி தரும். வெளிவட்டாரத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத் தேவைகள் நிறைவேறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையில் கருத்துவேறுபாடுகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். சகோதர வகையில் அனுகூலமான பலன்களை எதிர்பார்க் கலாம். குடும்பத்தினருடன் உறவினர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும். உறவினர்கள் வகையில் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், கூடுமானவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளால் கையிருப்பு கரையக் கூடும்.

அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். சக பணியாளர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அதிகாரிகளிடம் பேசும்போது பொறுமை அவசியம்.

வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் படிப்படியாகத்தான் கிடைக்கும். வியாபாரத்தின் காரணமாக திடீர்ப் பயணங்களும் அதனால் அலைச்சலும் உண்டாகும். சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும்.

கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சக கலைஞர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பாராட்டுகளுடன் விருதுகளும் கிடைக்கும். மூத்த கலைஞர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும்.

மாணவர்கள் கல்வியில் அதிக அக்கறை காட்டவேண்டும். அப்போதுதான் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெறமுடியும். ஆசிரியர்களின் ஆலோசனையைக் கேட்டு நடப்பது அவசியம்.

குடும்பத்தை நிர்வகிக்கும் பெண்மணிகளுக்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் தரும் மாதம். குடும்பத்தினர் மத்தியில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வேலைக்குச் செல்லும் பெண்மணிகளுக்கு எதிர்பார்த்த சலுகைகள் ஒவ்வொன்றாகக் கிடைக்கும்.

தினப்பலன், வார பலன், மாத ராசி பலன் என அனைத்து விதமான ஜோதிட பலன்கள் மற்றும் ஆன்மீகம் சார்ந்த பதிவுகளை உடனுக்குடன் பெற தெய்வீகம் மொபைல் APP – ஐ டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்.